03-11-2006, 08:02 AM
<b>புலி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதான
ராம்ராஜுக்கு எதிராக சுவிஸில் ஒன்றரை வருடச் சிறைத் தீர்ப்பு! ஏற்கனவே தயாராகக் காத்திருந்ததாம்</b>
லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி.ஸி.) முக்கியஸ்தரும், தற்போது சுவிட்ஸர்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவருமான ராம்ராஜுக்கு எதிராக ஏற்கனவே சுவிஸ் நீதிமன்றம் ஒன்றினால் ஒன்றரைவருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
சுவிஸ் தலைநகர் பேர்னில் உள்ள கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது.
கடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனிவாவில் பேச்சு நடைபெற்ற சமயம், ஜெனிவா ஐ.நா. அலுவலகக் கட்டடத்துக்கு முன்னால் புலிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. லண்டனிலிருந்து வந்த ராம்ராஜ் முக்கிய பிரமுகராக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமயம் சுவிட்ஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதற்குப் பின்னர் அவர் எங்கு இருக்கிறார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன என்பவை குறித்துத் தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது. ராம்ராஜ் வேறு பெயரில் 90 களில் சுவிட்ஸர்லாந்தில் வசித்துவந்தார் என்றும் அக்காலத்தில் இடம்பெற்ற சில மர்மக்கொலைகள், போதைவஸ்து கடத்தல், ஆள்மாறாட்டம் உட்பட பல குறற்ச் செயல்களோடு இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என சுவிஸ் பொலிஸார் கருதுகின்றனர் என்றும் 90களின் பிற்பகுதியில் சுவிட்ஸர்லாந்திலிருந்து காணாமற்போன பின்னர் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்று அங்கு வசித்து வந்த ராம்ராஜ், கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்துக்கு மீண்டும் வருகைதந்தபோது கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கு மேல் அவரது கைது தொடர்பாக மேலதிக விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் சுவிஸ் நகரான லவ்ஸானில் (Lausanne) அவர் இப்போது சிறைவைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரியவந்திருக்கின்றது.
ஏற்கனவே, பெயர் மாறாட்டம், பாஸ்போர்ட் மோசடி, ஆவணங்களில் குளறுபடி ஆகியவை தொடர்பான வழக்கு ஒன்றில் இவர் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் என்றும் இவரது பிரசன்னம் இல்லாமலேயே நடந்த அந்த வழக்கில் அவருக்கு எதிராக 18 மாதங்கள் 26 நாட்கள் சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும்
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தற்போது கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ராம்ராஜின் முனனைய பல தொடர்புகள், நடவடிக்கைகள், செயற்பாடுகள் போன்றவை குறித்து சுவிஸ் புலன்விசாரணையாளர்கள் தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் பேர்ன் கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ராம்ராஜ் தற்போது அனுபவித்து வரும் சிறைத் தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னர் அவருடன் தொடர்புபட்டவை எனக் கருதப்படும் குற்றச்செயல்கள் பற்றிய முழுவிசாரணைகளையும் தங்களால் பூர்த்தி செய்து உரிய தொடர் நடவடிக்கைகளைத் தங்களால் எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சுட்டது: உதயன்

<b>
?
?</b>-
?
?</b>-