03-09-2006, 09:50 PM
<span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம்.</span>
பட்டிமன்றம்.. ஆமை வேகத்தில் முடிவைத்தொட்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இழப்பின் மத்தியிலும் தன் கடமையை சரிவரவே செய்து முடித்த நடுவர் ஆசிரியருக்கும், பல இடையூறுகளுக்கு மத்தியிலும்.. இரு அணிகளுக்கும் ஒரு பாலமாய் நின்று பட்டி மன்றத்தை வழிநடத்தி முடித்திருக்கும் இரசிகைக்கும், இரு அணிகளையும் வழி நடத்திய அணித்தலைவர்களிற்கும், அசராது கருத்துக்களை வைத்த இரு அணி உறுப்பினர்களுக்கும்... பாராட்டுக்களும் நன்றிகளும்.
ரசிகை அந்தரப்படுகிறாரே என்ன வரப்போகிறது என நினைத்து ஆசிரியருக்கு உதவியாக இருக்கிறேன் என்று சாதாரணமாய் கூறிவிட்டேன். ஆசிரியர் பிரிவுத்துயரில் தற்காலிகமாக பிரிந்திருந்த போது. நான் தனித்து விடப்பட்டேன். வருவதை எதிர்கொள்வதற்கு நான் தயாராகி இருந்த போதும். சிறிது பதட்டம். வாதாட வந்திருக்கிறவர்கள் எல்லாரும் பெரியவர்கள். நானோ சிறியவள் இருந்தாலும் நான் வைத்த கருத்துக்களையும்
பொறுத்துக்கொண்டீர்கள் நன்றி.
இந்தப் பட்டிமன்றமானது ஓர் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் என்ற எண்ணமே அன்றி போட்டியாக யாரும் கருதியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. சிறப்பான கருத்துக்களை சிறப்பாக வைத்துச்சென்றீர்கள். இனி கருத்திற்குள் செல்வோம்;
எங்கள் பட்டிமன்ற தலைப்பு.. "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்பதுவே... ஒவ்வொரு அணியின் கருத்துக்களையும் பார்க்கும் போது.. தங்கள் தரப்பு விவாதத்தை ஆணித்தரமாக அடித்துக்கூறியிருக்கிறார்கள். நன்மை அடைகிறார்கள் என்ற அணியினர் பேசுகையில்.. நன்மை தான் அடைகிறார்கள் என்ற எண்ணமும்.. இல்லை இல்லை சீரழிந்து போகிறார்கள் என்ற அணி பேசுகையில் ... சீரழிந்து தான் போகிறார்கள் என்ற எண்ணப்பாட்டையும் தோற்றுவித்தார்கள்.
இணையம் என்கின்ற ஒரு தனி ஊடகம்.. உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் தன்னகத்தே இணைத்து.. பரந்து விரிந்து உலகெங்கும் வியாபித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஊடகம் என்னும் போதும். பத்திரிகை முதற்கொண்டு வானொலி வரை ஏன் பல தொலைக்காட்சிகளைக்கூட இணையத்தில் பார்வையிடக்கூடிய வாறு சகல வசதிகளையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டு.. மனிதனின் அன்றாட வாழ்வியல் தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்ய உதவுகிறது. இந்த இணைய பாவனையால் நம் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்களா சீரழிகிறார்களா.. என்பதுவே கேள்வி....
எண்ணிக்கையற்ற சலுகைகளையும்.. நன்மைகளையும் வாரி வழங்கும்.. இணையம் சில விசமர்களால் ஆங்காங்கே சில சீரழிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே. தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் வரும்போது நம் இளையோர் இணையத்தை பயன்பாடு உடையதாக மாற்றி அதில் இருந்து நன்மையை அடைந்து கொள்கிறார். இந்த பட்டி மன்றத்தில் உள்ள எல்லா இளையோரும் அப்படித்தானே..??
நாங்கள் ஒவ்வொருவரும்.. எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இணைய இணைப்பை ஏற்படுத்தியிருப்போம் .. கண்டிப்பாக யாரும்
சீரழிவதற்காக இணைப்பை எடுத்திருக்க மாட்டோம் என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.. கூடுதலாக எல்லாச்சாதனங்களிலும் எண்ணிக்கை அற்ற பல நன்மைகள் பொதிந்திருக்கும் அதேவேளை.. சில பாதகங்களும் சேந்திருப்பதை பல சாதனங்களில் நாங்கள் பார்த்திருக்கக்கூடும்.... அது போலவே இணையத்திலும் சில சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய விடையங்கள் மறைந்திருக்கின்றன.. இந்த சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்களால் நம் இளையோர் அனைவரும் சீரழிந்து போகிறார்களா..?? இனி ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று கேட்போமே..
அன்புடன்
தமிழினி
<span style='color:red'>வணக்கம்:
சிறப்பு வணக்கம் என்று தமிழிலும் வடமொழியிலும் சொல்லி வந்தார்கள். தங்கத்தாமரையில், வெள்ளித்தாமரையில், இதயத்தாமரையில் ஏற்றி வைத்தார்கள். நீதி தவறாத பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டார்கள். தமிழோடு தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஒப்பிட்டார்கள். பின்னர் பெருங்குடிமகன், நடு நிலமையின் உறைவிடம் என்றார். பீனிக்ஸ் பறவைக்கு ஒப்பிட்டார். நாணயத்துடன் நேர்மையையும் கொண்டுள்ளவர்கள் என்றார். நோர்வே நாடே! நக்கீரர் பரம்பரையே! அன்பிற்கும் பண்பிற்கும் உறைவிடமே! சலமனே! என்றெல்லாம் வாயாரப் புகழ்ந்து வணக்கம் கூறி தம் வாதங்களை முன்வைத்தனர்.
நன்றிகள் பல.
அதேவேளை நீதி தவறினால் என்ன நடக்கும், நடக்கவேண்டும் என்றும் எச்சரித்தார்கள்.
பட்டிமன்ற நடுவராக வரும்படி கேட்டவுடனேயே பட்டிமன்ற முடிவில் தீர்ப்புச்சொன்னதும் 50 வீதமானோரின் வாக்குகள் மட்டும்தான் எமக்குக் கிடைக்கும் என்பது தெரியும். இருந்தாலும் கள உறவுகள் ஒன்றும் சிறு பிள்ளைகள் அல்லர் எல்லோரும் வளர்ந்தவர்கள். வெற்றி தோல்விகளை பாரபட்சமின்றி சந்தோசத்துடனே ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் வலுத்தது. அதேவேளையில் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக எம்மாலான ஒரு சிறு பணி இதுவெனவும் உள்மனம் உரக்கக்கூறியது. அதனால் ஆனந்தத்துடனேயே இப்பணியை ஏற்றுக்கொண்டேன். சகோதரி தமிழினியும் தயங்காது உதவிக்கு வந்தார்.
[size=18]தலைப்பு:
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
[size=18]தமிழ்மொழி:
தமிழ்மொழி வளர்ச்சியிலே இணையத்தின் பங்கு ஏராளம். பல்கலைக் கழகங்களிலே இணைய மின் நு}லகங்கள் அமைக்கப்பட்டு அங்கே இலக்கிய நு}ல் வைப்பகங்கள், கலை பண்பாட்டு ஒலி ஒளி வடிவங்கள், பாடத்திட்ட நு}ல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என சகல துறைகளிலும் ஆக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. நு}லகங்களை எரித்தாலும் இந்த நு}ல்களை அழிக்கமுடியாது. இதனால் பயனடைவது அனேகமாக இளைஞர்கள்தான். இதனை விரிவாகத் தந்தனர் நன்மை அணியினர். இணைய ஊடகம் வந்ததின் பின்னர் தமிழின் வளர்ச்சி உரம்பெற்றிருக்கிறது. முகமறியா உறவுகளின் திறமைகளை வெளிக்கொணரவும், இணையவழி நு}லாக்கம் போன்றன அமைக்கவும் ஏதுவாகின்றது.
[size=18]சினிமா:
சினிமா சீரழிக்கின்றது, சினிமாவால் சீரழிகின்றார்கள் என்று பலர் கூறினார்கள். சினிமா ஒரு பொழுதுபோக்குச் சாதனம்தான். ஆனால் அங்கே எவ்வளவோ நல்ல விடயங்களும் இருக்கின்றன. நல்ல நல்ல அறிவுரைகளும் செல்லப்பட்டன, சொல்லப்படுகின்றன. பெரும்பான்மையானோர் நல்ல படம் என்று தெரிந்தால் எப்படியும் அதனைப் பார்ப்பதற்கே விரும்பவார்கள். அதேவேளையில் கூடாத படம் என்றால் அதனைப் பற்றி அக்கறை செலுத்தவே மாட்டார்கள். அதிலே இருக்கின்ற பாடல்கள் யாருடைய வீட்டிற்குள், விழாக்களில் பாடவில்லை? யாருடைய மோட்டார்வண்டிக்குள் இல்லை? இவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். புதிய பதிய முறைகளில் முகம் பார்க்காமலே இலகுவாக பாடல்களை பதிவாக்கம் செய்வதற்கும், உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இப்போது இணையம் உதவுகிறது. பாடல்கள் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்தவைதானே!
பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரு மனிதனுடைய ஆசைகள், தேவைகள் அவனுடைய வயதோடு ஒட்டியவையாகவே அமைகின்றன. ஆனால் இதற்கு விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிகக்குறைவானவையே. இளைஞர்களுக்கும் இவை நன்றாகவே பொருந்தும். இப்போதெல்லாம் சினிமாவிலே யார் நன்றாக நடிக்கின்றார்கள் என்பதைவிட யார் நன்றாக அடிக்கின்றார்கள் என்பதிலேயே கூடிய கவனம் எடுக்கிறார்கள். ஆனால் இவற்றைப் பார்த்து மனம் மாறுபவர்கள் ஒரு சிலரேதான்.
அழகை யாரும் ரசிக்கலாம். அங்கே ஆபாசத்தை எதிர்பார்த்தால் சீரழிவுதான் உண்டாகும். சினிமா நடிகன் நடிகைகளின் படங்களை, விளையாட்டு வீரர்களின் படங்களை, "பொப்" இசைப்பாடகர்களின் படங்களை, இன்னும் எத்தனையோபேர்களுடைய படங்களை இன, மொழி வேறுபாடின்றி இன்றும் புத்தகங்களுள்ளும், அறைச்சுவர்களிலும் ஒட்டி வைத்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் இப்போது கணனித்திரையிலும் போட்டு வைக்கிறார்கள். இதனால் ஏற்படும் சீரழிவுகள் மிகமிகக் குறைவானவையே.
[size=18]காதல்:
காதல் புனிதமானது. இது யாரைத்தான் விட்டுவைத்தது? தமிழிலே அம்பிகாபதி அமராவதியை உதாரணம் காட்டலாம். இளைஞர்கள் காதல் செய்வதற்கு ஏதோ ஒன்று வேண்டும். அது இணையமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
இளைஞர்களின் காதல் களியாட்டங்களுக்கு இணையம் துணைபோகின்றது என்பது குற்றச்சாட்டு! இணையவசதி இல்லாதவர்கள் காதலிக்கவில்லையா? அவர்களில் கெட்டுப்போனவர்கள் இல்லையா?
இளையோர் காதல்செய்ய இணையம் ஓர் ஊடகமாக இருக்கலாம். ஆனால் இதைவிட மற்றையவைகளால் ஏற்படுகின்ற விளைவுகளே மிகமிக அதிகம்.
[size=18]கல்வி:
இளையோர்களுக்கு கல்வி கற்பதற்கு எல்லாவிதமான வசதிகளையும் இணையம் இன்று செய்துகொடுக்கின்றது. கணனியும், இணையமும் இல்லையென்றால் மாணவர்களால் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் பெறமுடியாது. இன்றைய நவீன உலகத்திலே இவை மிகவும் அவசியமாகின்றன. நேரம் மிச்சமாகின்றது. மிச்சமாகும் இந்த நேரத்தை இளையோர் நல்ல வழிகளில் பயன்படுத்தவேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி இப்போது மிக வேகமானது. இளைஞர்களின் ஒரு பகுதியினர் இதனால் சீரழிகின்றார்கள் என்று இதனை வேண்டாம் என்று ஒதுக்க முடியாத நிலையில் எல்லோரும் இருக்கிறோம். இதனால் ஏற்படும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம். இதனை இல்லை என்று வாதாடிய எதிரணியினரும் உண்டு என்று தமது உள்மனதுள் சொல்வார்கள் என்பது திண்ணம். எல்லோர் கண்களின் முன்னே அதற்குப் பல ஆதாரங்களும் இருக்கின்றன.
[size=18]சற்று}ம்: (chatrooms)
இங்கே நல்லதும் கெட்டதும் நடக்கின்றன. உறவுமுறை தெரியாமல் உறவாட எத்தனித்தல் போன்ற எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றையெல்லாம் அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். கவரும் தன்மையைக் கொண்ட ஒன்று தனக்குள்ளே மறைமுகமான பொறியையும் கொண்டிருக்கும் என்றார் ஒருவர். இணையத்தில் புனைபெயரிலே வந்து தொல்லை கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் கள உறவுகள் பலர் முன்னர் நடந்த சம்பவங்களை அறிந்ததனால் இப்போது மிகவும் கவனமாக இருப்பதை அறியமுடிகின்றது. இது ஆரோக்கியமானதொன்று.
இங்கே கருத்துப் பரிமாறல்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஒரு அழகிய பெண்ணை அல்லது ஆணைக் கண்டால் உடனே காதலும், காமமும்தான் தோன்றவேண்டுமா? ஒர் உடன்பிறவா சகோதரராக, அன்பு கொண்ட ஓர் உள்ளமான ஏன் எண்ணக்கூடாது, உரையாடக்கூடாது? மனம் சுத்தமாக இருந்தால் அங்கே எதுவித துர்ப்பிரயோகங்களும் நிகழாது. மனம் அழுக்காக இருந்தால்தான் அப்படி ஏதும் நிகழும். பெரும்பான்மையான புலம்பெயர்ந்த இளையோர் அப்படிப்பட்டவர்கள் அல்லர். இதனை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.
[size=18]தேசப்பற்று:
இங்கு பிறந்த வளர்பவர்களுக்கு தாயக உணர்வுகள் இல்லை அல்லது குறைவு என்பதையும் ஏற்கமுடியாது. அண்மையில் நடந்த ஆழிப்பேரலை அனர்த்தம், வெள்ளப்பெருக்கு போன்றவைகளை உதாரணம் காட்டலாம். அதேவேளை தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த சில இளைஞர் கூட்டங்கள் எதுவித பற்றுதல்களுமில்லாமல் ஆங்காங்கே நடக்கின்ற எல்லாவிதமான நிகழ்வுகளுக்குள் (நாட்டுக்காக நடக்கம் நிகழ்வுகள் உட்பட) புகுந்துகொண்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது அடிதடி சண்டைகளோடு தேவையில்லாத சப்தங்களை எழுப்பிக்கொண்டும், அருவெருப்பான வார்த்தைகளைப் பேசிக்கொண்டும் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மன விரக்திக்கு உள்ளாக்குகின்றார்கள். இது அதிகமான நாடுகளிலும் நடப்பதாகவே அறிகிறோம். இங்கே இணையத்தின் பங்கு இருக்கின்றதா? இங்கும் கட்டுப்பாடு அவசியமாகின்றது.
[size=18]பெற்றேரின் பங்கு:
இன்று பல இலட்சம் மக்கள் தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பதற்காக என்ன செய்யவும் தயாராக இருக்கின்றார்கள், எவ்வளவு பணம் வேண்டுமாயினும் செலவு செய்ய தயாராகவும் இருக்கின்றார்கள். நாடுவிட்டு நாடு இடம்பெயரவோ, இருக்கும் வீட்டை இரண்டாம்முறை அடகு வைக்கவோ தயங்காத பெற்றோர்களையும் கண்டிருக்கிறோம். பிள்ளைகளுக்கொன பிரத்தியேகப் படிப்பு வசதிகள் செய்துகொடுக்கிறார்கள். புதிய புதிய கணனிகள் வாங்கிக்கொடுத்து இணைய வசதிகளும் செய்துகொடுக்கிறார்கள். இன்று யார் வீட்டில் கணனிகள் இல்லை? அநேகமாக ஒவ்வொரு வீட்டிலும் மடிக்கணனிகள் (laptops) உட்பட ஒன்றுக்கு மேற்பட்ட கணனிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிள்ளைகளிடமும் கணனிகள் இருக்கின்றன. சிலர் கூறியதுபோல் பெற்றோர்களின் கணனி அறிவு குறைவாக இருந்தபோதிலும் அநேகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கணனியிலே, இணையத்திலே என்ன செய்கிறார்கள் என்பதை அவதானித்துக்கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள் ஏதாவது அசாதாரண முறையில் நடப்பதாகச் சந்தேகித்தால் உடனே கணனி விற்பனர்களைக்கொண்டு அவற்றைத் தடுத்துவிடுகிறார்கள். கணனியை ஓர் ஆடம்பரப் பொருளாக சிலர் ஆரம்பத்திலே கையாண்டிருக்கலாம், மற்றவர்களுக்கக் காட்டிப் பெருமைப்பட்டிருக்கலாம் ஆனால் இப்போது இல்லை என்றே கூறவேண்டும். இன்று ஒரு மாணவனிடம் கணனியோ இணையமோ இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவனுக்கோ, அவளுக்கோ கல்வியில் வெறுப்பே ஏற்படும். மற்றைய மாணவர்களைப்போல் தன்னால் செய்ய முடியாதபோது அதனால் ஏற்படும் விளைவுகளை மிகவும் பாரது}ரமானவையாகவே இருக்கும்.
[size=18]பொது:
சில வேளைகளில் மாற்று அணியினரின் கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ ஒத்துக்கொள்கிறார்கள். அன்புக்குத்தான் அடிமையாகவேண்டும் போதை போன்ற இணையத்திற்கு அல்ல என்றும் புதிய புதிய விடயங்களிலே ஆர்வம் காட்டும் இளையோர் வேறுபட்ட, ஒவ்வாத கலாச்சாரத்தைப் பழகி இணையத்தில் உள்ள நன்மைகளை விட்டுவிட்டு தீமைகளையே நாடுவார்கள். இது இளமைக்கே உரிய குணாதிசயம் என்று கூறினர். "இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல்" என்றும் குறிப்பிட்டனர். அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்றனர். ஒரு சடப்பொருள் எப்படிச் சீரழிக்கும்?
எதிரணியினரில் ஓரிடத்தில் 1900 புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்தான் பாவிக்கிறார்கள் என்றார் பின்னர் அதனை விடுத்து இன்னொரு பக்கத்தில் எத்தனையே இலட்சம் பாவிக்கிறார்கள் என்கிறார் இங்கே அவருடைய கருத்தே மாறுபடுகின்றது.
கணனி ஊடகத்தை பாவிப்பவர்களைப் பொறுத்தே அது நன்மை செய்கிறதா? தீமை செய்கிறதா என்று தீர்மானிக்க முடியும். தாம் செய்கிறது தவறு என்று தெரிந்தால் பல இளைஞர்கள் அந்தப்பக்கமே போகமாட்டார்கள். அதே வேளையில் எதற்கும் ஒருமுறை சென்று பார்ப்போம் என்று எண்ணுகின்ற இளைஞர்களும் இல்லாமலில்லை.
பொலிசாரும், குற்றத்தடுப்புப் பிரிவினரும் சில ஆபாசப்படத் தளங்களுக்குள் யாராவது நுழைந்தால் பார்ப்பவர்களின் வீட்டைத்தேடிவந்து கதவைத்தட்டுவார்கள். அப்போதுதான் தாம் செய்தது தவறு என்று புரிந்துகொள்வார்கள். இது காலங்கடந்த ஞானம். இதனை எத்தனைபேர் அறிந்துவைத்திருக்கிறார்கள்?
மனக்கட்டுப்பாடு அவசியம் என்ற வாதம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டது. ஆமாம் இது எல்லோருக்கும் மிகவும் அவசியமானதொன்று. நுண்கலைகளைக் கற்பது தொடக்கம் நீதி வழுவாது நேர்வழியில் நின்று தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் மனக்கட்டுப்பாடு அவசியம். இதற்கு உதாரணமாக தமிழீழ களத்திலே நிற்கும் போராளிகளைக் காட்டினர். "மனம்போன போக்கெல்லாம் போவேண்டாம்" என்றும் "சேராத இடம்தனிலே சேரவேண்டாம்" என்றும் உலக நீதியிலே கூறப்பட்டுள்ளதை யாவரும் அறிந்திருப்பீர்கள்தானே! ஆபாசம், வன்முறை எல்லாம் எங்குதான் இல்லை. ஆனால் அதனை எடுப்பதும் விடுவதும் எம் கைகளில்தான் இருக்கின்றது.
"உடல் உழைப்புக்கு மதிப்பில்லாமல் செய்த இணையத்தை அளவோடு பாவிப்போம். இணையம் எங்களைக் கட்டப்படுத்தக் கூடாது. அது சீரழிவை நோக்கிய பாதை!!!!!" என்றனர் எதிரணியினர். இங்கே மனக்கட்டுப்பாட்டின் அவசியம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
"ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி " சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்" என்றும் "இணையத்தை விட இன்னொரு சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில் இணைய ஊடகமே உலகத்தை ஆளும்" இதுதான் உண்மை.
பொதுவாகப் பார்க்கப்போனால் இணையத்தினால் புலம்பெயர் இளையோர் புலத்திலே சீரழிந்துபோகின்றார்களா? அப்படிச் சீரழிபவர்கள் எத்தனை வீதமானோர்? இது ஒரு சிறிய அளவேதான். உண்மையில் சீரழிந்து போகிறார்கள் என்றால் எப்படி எம்மவர்களில் பலர் சிறந்த கல்விமான்களாகவும், நல்ல பிரஜைகளாகவும், நல்ல பிள்ளைகளாகவும் வாழ்கிறார்கள்? இங்கே இணையத்தின் பங்கு பெருமளவில் இருப்பதனால்தான் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் நிகழ்கின்றன.
[size=18]நன்றி:
புலம் பெயர்ந்துவிட்டால் பிறந்த நாட்டையும், படித்த மொழியையும் மறந்துவிடுபவர்கள் ஏராளம். புகுந்த நாட்டின் நாகரீகமோகத்தில் சிக்கி பண்பான எமது பழக்கவழக்கங்களை மறந்து வாழ்பவர்களும் ஏராளம். ஆனால் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமது நாடு, மொழி, மதம், கலை, கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றை மறவாது வாழும் உறவுகளால்தான் இவைகள் எல்லாம் பாதுகாக்கப்படுகின்றன. நான் ஒரு தமிழ்மகன் அல்லது தமிழ்மகள் என்று சொல்லோடு மட்டும் நின்றுவிடாது வாழ்ந்துகாட்டுகின்ற உள்ளங்களை எண்ணும்போது, முக்கியமாக இளம் உள்ளங்களை எண்ணும்போது நான் பெருமிதமடைகின்றேன். அதேவேளையில் எமது இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு வழியினை வகுத்து வழிகாட்டிவிடவேண்டும் என்கின்ற துடிப்போடு செயற்படுகின்ற இனிய உள்ளங்களை என் இதயத்தாமரையில் இருத்துகின்றேன். இந்தவகையில் உருவான ஒன்றுதான் இந்தப்பட்டிமன்றம்.
கண்காணாத உறவுளோடு இணையத்தின் ஊடாக களத்தில் கணனியில் மட்டும் கதைத்து, கருத்தெழுதி, கண்டித்து, நகைத்து, வாதித்து, அறிவுரைகூறி, தாம் அறிந்தவற்றை ஏனையோர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் பண்பை பார்க்கும்போது இதயம் புூரிக்கின்றது. இளைஞர்களின் தமிழ்ப் புலமை என்னைத் தடுமாற வைத்தது. அவர்களின் அலசி ஆராய்ந்து செயற்படும் ஆற்றல் என்னைப் பிரமிக்க வைத்தது. நான் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய பாடலின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.
இளவயதில் மேதைகளாய் எம்மிளைஞர் இவ்வுலகில்
எழுச்சிபெற தமிழனென இம்மண்ணில் தலைநிமிர்ந்தேன்
இளையவர்கள் களம்புகுந்து பிறந்தமண்ணின் வளம்காக்கும்
தளராதநிலை கண்டு நிலமகளின் தாள்பணிந்தேன்
மழலையினம் மனமுவந்து அழகுதமிழ் எழுதிவர
அழியாது எம்மொழியின் ஆயுளென அகமகிழ்ந்தேன்
இந்தப்பட்டிமன்றத்திற்கு நடுவரில் ஒருவராக இருக்கும்படி கேட்டபோது என்மேல் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான் மாசுபடுத்திவிடக்கூடாது என்கின்ற மன ஓட்டம் மேலும் வலுவாகியது. இயன்றவரை எல்லோரது வாதங்களையும் அலசி ஆராய்ந்து நல்லதொரு தீர்ப்பைச் சொல்லவேண்டும் என்கின்ற அவாவும் மேலிட்டது. பட்டிமன்றம் ஆரம்பித்த அன்றே எனது அம்மாவும் இறைவனடி சேர்ந்தார். கள உறவுகளின் ஆறுதல் வார்த்தைகளும், அடுத்தடுத்து வந்த அனுதாபச் செய்திகளும் உள்ளத்தை வருடிக்கொடுத்தன. ஏராளமான மன உளைச்சல்கள் ஏற்பட்டபோதிலும் கொடுத்த பணியினை சிறப்புடன் ஆற்ற இரவு பகலாக கணனியோடு காலத்தைக்கழித்தும், வாதங்களைப் பிரதி எடுத்துப் படித்தும் என்னாலானதைச் செய்தேன். எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும் இவற்றிற்கு எந்நாளும் தோள்கொடுத்த சகோதரி தமிழினிக்கும், இணைப்பாளர் இரசிகைக்கும், அணித்தலைவர்கள் இளைஞன், சோழியன் இருவருக்கும், பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும், களத்திலே இப்படியாக இந்தப் பட்டிமன்றத்தை நடாத்த அனுமதித்த திரு மேகன் அவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், மனமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.
[size=18]தீர்ப்பு:
மேற்கூறியவைகளிலிருந்து நம் இளையோர்கள் சீரழிவுக்கு உள்ளாகிறார்களா..?? சீரழிவுகளை சந்திக்கிறார்களா..?? என்று கேட்டால்....இருக்கலாம் !! ஆனால் அனைவருமா?? எங்காவது ஒரு சிலர் சீரழிவுகளிற்கு முகம் கொடுக்கலாம்.. அதற்காக ஒட்டுமொத்த இளையோரும் சீரழிகிறார்கள் என்ற உறுதியான ஒரு முடிவிற்கு வந்துவிட முடியாது..! அந்த வகையில்.. இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்பது இந்த விவாதங்களில் இருந்து அறியமுடிகிறது.
கொலைகாரனைக்கூட தமது வாதத்திறமைகளால் நிரபராதி என்று நிரூபித்தவர்கள் எம்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் உண்மைகளை ஒருபோதும் ஒழித்துவைக்க முடியாது. எல்லோருடைய வாதங்களையும் மேற்கோள் காட்டி இங்கே எழுதவும் முடியாது. அது ஏற்கெனவே எழுதியவற்றை திரும்பத்திரும்ப எழுதுவதாய் முடியும், வாசிப்பவர்களையும் சோம்பலாக்கும், அது தேவையற்றதுமாகும். சிலருடைய வாதங்கள் அவ்வளவும் அற்புதமானவையாக இருந்தன. ஒரு சிலர் மட்டும் வாதம் செய்யவேண்டும் என்பதற்காக வந்து வாதத்தை முன்வைத்தது போலவும் இருந்தது. ஆனால் அனைவரும் தமக்குக் கொடுத்த பணிகளை தம்மால் இயன்றளவு சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள் பல!
எமது இந்தத்தீர்ப்பு இரு அணியினரும் முன் வைத்த வாதங்களின் அடிப்படையில் நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து எடுத்த தீர்ப்புத்தான். இதிலே யாருடைய செல்வாக்கோ, அறிவுரைகளோ இருக்கவில்லை. நாம் யாரையும் அறிவுரை கேட்கவுமில்லை, யாரும் எதுவிதத்திலும் குறுக்கிடவுமில்லை.
பட்டிமன்றம் முயல் வேகத்தில் ஓடி முடிவில் தோல்வியை எம் இளையோருக்குக் கொடுக்காமல் ஆமை வேகத்தில் ஓடினாலும் ஓரு வெற்றியை, ஒரு நல்ல காரியத்தை எல்லோரும் செய்திருக்கிறோம் என்கின்ற மனத்திருப்தியோடு எமது முடிவைக் கூறுகின்றோம்.
[size=18]\"புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மை அடைகிறார்கள்\" என்பதே எமது தீர்ப்பு.
நன்றி
வணக்கம்.
[size=18]செல்வமுத்து
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
[size=18]தமிழினி.......! </span>
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.