03-07-2006, 11:40 AM
கலியாணம் பேசி முற்றாகிவிட்டது.
மணப்பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் சீதனமாக வழங்கும் வீட்டை, விற்றுவிட்டுப் பணமாகத் தரும்படி மாப்பிள்ளையின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். மணப்பெண்ணின் பெற்றோரும் இதற்குச் சம்மதித்துவிட்டனர்.
மாப்பிள்ளையின் தந்தை இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் அந்த வீடு அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்று, அதைப் பார்வையிட்டு, அவ்வட்டாரத்தில் வசிப்பவர்களிடம் பேசி, உத்தேச விலை மதிப்பை அறிந்துகொண்டார். "வீடு பத்து இலட்சம் பெறுமதி என்கிறார்கள். அதை விற்று பத்து இலட்சத்தை தந்துவிட வேண்டும்" என்று மாப்பிள்ளையின் தந்தை, மணப்பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டார்.
மணப்பெண்ணின் தந்தை லேசுப்பட்டவர் அல்ல. அவர் தனது சாமர்த்தியத்தால் அவ்வீட்டை பதினைந்து இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துவிட்டார். 10 இலட்சத்தை கொடுத்துவிட்டு மிகுதி 5 இலட்சத்தை வைத்துக்கொண்டார்.
திருமணம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பின், மாப்பிள்ளையின் தந்தை, அந்த வீடு பதினைந்து இலட்சம் ரூபாவுக்கு விற்பனையான தகவலை அறிந்தார். விடுவாரா? மிகுதி ஐந்து இலட்சத்தையும் தரும்படி கேட்டபோது "நாங்கள் வீடு தருகிறோம் என்றோம். நீங்கள் அதை விற்று பத்து இலட்சம் ரூபா தரும்படி கேட்டீர்கள். அதன்படி அத்தொகையை தந்துவிட்டோம்" என்று தர்க்க ரீதியாகப் பதிலளித்தார் மணப்பெண்ணின் தந்தை.
மாப்பிள்ளையின் பேரால் பிடுங்குவதில் தான் பலரும் அக்கறையாக இருக்கிறார்களோ!
http://www.thinakural.com/New%20web%20site...ch/07/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>