![]() |
|
ஒளிவு மறைவின்றி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஒளிவு மறைவின்றி (/showthread.php?tid=1146) |
ஒளிவு மறைவின்றி - வினித் - 01-28-2006 ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழைப் பெண்ணுக்கு உதவப் போய் உபத்திரவத்தைத் தேடிக் கொண்டேன் என்று பிரலாபிக்கிறார் அந்த நல்ல மனிதர். <b>எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டம்தான்!</b> http://www.thinakural.com/New%20web%20site...nuary/28/DR.htm பின் குறிப்பு: இதை நீக்க விட்டால் ஒவரு நாள்ளும் தொடரலாம் எண்டு நினைக்கிறேன் - கறுப்பி - 01-28-2006 ஏழைப்பெண் என்று பார்த்தாரே தவிர இருவரின் மனப்பொருத்தம் பார்க்கத்தவறிவிட்டாரே எந்தப் புற்றில் எந்தப் பாம்பு? - SUNDHAL - 01-28-2006 ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழைப் பெண்ணுக்கு உதவப் போய் உபத்திரவத்தைத் தேடிக் கொண்டேன் என்று பிரலாபிக்கிறார் அந்த நல்ல மனிதர். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டம்தான்! Thanks:Thinakural... - ஜெயதேவன் - 01-28-2006 கோதாரி! எனக்கு உந்த பயமெல்லாம் இல்லை!!! ஈழ்பதீஸானின் உண்டிலைக் கண்டவள் ஓடவே மாட்டாள்!!!! Re: எந்தப் புற்றில் எந்தப் பாம்பு? - ukraj - 01-28-2006 இன்றைய காலத்து பெண்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்... ஆனால் ஒன்று மட்டும் நெருடுகிறது...... இந்த காரணக்கிற்காக மட்டும் வெளியேறினாரா..? SUNDHAL Wrote:ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். - kuruvikal - 01-28-2006 அந்தப் பெண் சொந்தக் காலில் நிற்க முயன்றதில் தப்பில்லை..! ஆனால் அவரையும் நம்பி ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்தாரே...அதுதான் சுத்தச் சுயநலம், துரோகம்..! இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு அவர்கள் என்ன செய்தார்களோ.. அதையும் அறியாமல் அந்தப் பெண்ணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நாங்கள் அறிந்திருக்கிறோம் வெளிநாட்டில் விவாகரத்துப் பெற்ற ஆண்கள் தாயகத்திற்கு சென்று வசதி வாய்ப்புக் குறைந்த பெண்களுக்கு ஆசை காட்டியும் திருமணம் செய்திருப்பதை. சில வசதி படைத்தவர்கள் தாங்கள் சொல்லவதெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக கூட இப்படியான பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்..! நிலையில்லாத கொள்கை அற்றவர்கள்...வசதிகளைக் கண்டு பிரமித்து மனம் மாறியும் விடுவதுண்டு..! ஆனால் அவர்களுக்கு அவற்றின் நிலையில்லாத தன்மை அப்போது புரியாது..பின்னர் ஏதோ ஒரு வகையில் புரிய வரும்..! மனிதர்கள் மனதால் பலவிதம்..நிலையில்லாத மனம் படைத்தோர் அடிக்கடி தங்கள் வாழ்வியல் கோலத்தையும் மாற்றிடுவார்கள்..! அத்துடன் இப்படியானவர்களால் நிச்சயம் ஒன்றிலும் முழுமையான திருப்தியுடன் வாழவும் முடியாது..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 01-28-2006 ஒரு பெண் திருமணமாகி வந்து சுயமாக சம்பாதிக்க முனைவது தப்பில்லை. அந்தப் பெண் தான் சம்பாதித்து தனது குடும்பத்திற்கு ஏதாவது உதவ நினைத்திருக்கலாம். அதற்கு கணவர் வீட்டிலும் ஏதாவது எதிர்ப்பு ஏற்பட தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினால் அவர் விலகியும் சென்றிருக்க முடியும். உழைப்பதற்காக ஒரு பெண் தன் கணவரை விட்டு பிரிகின்றாள் என்றால் நாமும் யோசிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது தவறு. இங்கெ அந்தப்பெண் வேறோர் ஆடவனுடன் சென்று விடவில்லை. எனவே அந்தப் பெண்ணின் நிலையையும் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. - அருவி - 01-28-2006 கறுப்பி Wrote:ஏழைப்பெண் என்று பார்த்தாரே தவிர இருவரின் மனப்பொருத்தம் பார்க்கத்தவறிவிட்டாரே செய்தியின் படி திருமணம் பேசிச் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின் ஏன் அப்பெண் அப்பொழுதே கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்று???!! :roll: - SUNDHAL - 01-29-2006 சிலவேளை வெளிநாட்டிற்க்க வாரதுக்காக இருக்கலாம் வந்த உடன அல்வா கொடுத்திட்டா...ke ke ke <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ukraj - 01-29-2006 வசம்பு நாம் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து உற்று நோக்கினாலே உண்மை நிலையை அறியக்கூடியதாகவிருக்கும். - Vasampu - 01-29-2006 ஆம் ராஜ் ஆனால் இங்கே பெண்ணின் கருத்து தெரியாமல் எம் மனம் போன போக்கில் அவரை விமர்சினம் செய்வது சரியல்ல. - வினித் - 01-31-2006 வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் கிளைகளை வைத்திருக்கும் ஒரு பொதுத் தொண்டர் நிறுவனத்துக்கும் அம்பாறை மாவட்டத்தில் கடல்கோளினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே அந்த நிறுவனத்தினர், காப்புறுதி நஷ்டஈடு கோரியிருந்தனர். இந்நிறுவனம் தனது பொதுத் தொண்டிற்கு ஏற்றவாறு தென்னிலங்கையிலும் தனது பெயர்ப் பலகைகளில் மூன்று மொழிகளுக்கும் இடமளித்திருக்கிறது. காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த தமிழரான அதிகாரி இழப்பை மதிப்பீடு செய்வதற்காக அம்பாறை சென்றார். தொண்டர் நிறுவன கிளையையும் அதன் பிரிவுகளையும் தேடினார். தேடிக் கொண்டே இருந்தார். அந்தக் கிளை அமைந்துள்ள இடத்தைத் தாண்டிச் சென்றாராயினும் அதுதான் அந்த அமைப்பு என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. சுற்றியலைந்து பலரிடம் விசாரித்து மீண்டும் அதே இடத்துக்கு வந்தார். இவரின் அலைச்சலுக்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெயர்ப்பலகை தனிச் சிங்களத்தில் அமைந்திருந்தது. அந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் பெயர்ப் பலகைகளில் தனிச் சிங்களம் தான்! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் இல்லையா? தொண்டர் நிறுவனத்துக்கு ஏன் இந்த இரட்டை வேடம்? இனச் சாய்வு, பொதுத் தொண்டருக்கும் உண்டோ! http://www.thinakural.com/New%20web%20site...ry/31/index.htm - Niththila - 01-31-2006 எந்த தொண்டு நிறுவனம் வினித் அண்ணா??? - வினித் - 02-07-2006 நீர்கொழும்பு வீதியில் இயங்கும் ஓர் நவீன உணவகத்தில் புஃவே முறையில் மதிய போசனம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் தான் விரும்பிய பதார்த்தங்களை விரும்பிய அளவு தாமே எடுத்துச் சாப்பிடலாம். கட்டணம் ஒன்று தான். ஒரு வாடிக்கையாளர், புஃவே ஆரம்பித்தவுடன் உள்ளே நுழைந்துவிடுவார். பீங்கானில் ஒரு பிரிவிலிருந்து பதார்த்தங்களை அள்ளிப்போட்டுக் கொண்டு சென்று சாவகாசமாக அமர்ந்து உண்பார். பின்னர் இன்னொரு பிரிவிலிருந்து பதார்த்தங்களை நிரப்பிக்கொண்டு செல்வார். மீண்டும் வந்து இன்னொரு பிரிவிலிருந்து அள்ளல் வேலை நடக்கும். இப்படியே பல தடவைகள் வந்து பதார்த்தங்களை அள்ளிச்சென்று கபளீகரம் செய்வார். சாப்பிட்டு முடிய மணிக்கணக்கில் நேரம் செலவாகும். இது ஒருநாள் நிகழ்ச்சி என்றால் பரவாயில்லையே, நாளாந்தம் அந்த வாடிக்கையாளர் வந்து மணிக்கணக்கில் அமர்ந்து பதார்த்தங்களை ஒரு கைபார்த்து வரத் தொடங்கியதால் உணவக ஊழியர்கள் தங்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். ஓர் ஊழியர் அந்த வாடிக்கையாளரிடம் சென்று "ஸார்! புஃவே என்றால் பல தடவைகள் பதார்த்தங்களை எடுத்து மணிக்கணக்கில் சாப்பிடுவது அல்ல. அப்படிச் சாப்பிடுவதாயின் பிரத்தியேகமாக நாம் பரிமாறுகிறோம். அதற்குரிய `பில்'லை செலுத்துங்கள்" என்றாராம். சொல்லித் தெரிய வேண்டுமா இங்கிதம்! http://www.thinakural.com/New%20web%20site...ry/07/index.htm - ஈழமகன் - 02-08-2006 எங்கட சனத்திற்கு இலவசம் என்டால் சொல்லவா வேண்டும். - வினித் - 02-09-2006 ஒரு பாடசாலை ஊழியரின் பாட்டி இறந்து விட்டார். அப்பாடசாலையின் அதிபர் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு கட்டு பண நோட்டுகளை எடுத்து எல்லோர் முன்னிலையிலும் "இந்தக் காசை வைத்து செலவுகளைக் கவனியும்" என்று பெருமையாகச் சொன்னார். ஆசிரியர்களும் மாணவர்களும் அதிபரின் இத்தாராள உதவி மனப்பான்மையை நினைத்து வியந்தனர். பின்னர் தான் சங்கதியே ஆரம்பமாகிறது. அதிபர் ஆசிரியர்களை அழைத்து "தான் இவ்வளவு பணம் கொடுத்திருப்பதாகவும் எனவே ஒவ்வொருவரும் தலா குறிப்பிட்ட தொகையைத் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இப்படி அவர் வசூல் செய்த தொகையைப் பார்க்கும் போது அவர் பாடசாலை ஊழியருக்கு வழங்கிய தொகையை விடக் கூடுதலாக இருந்ததாம். இழவிலும் இலாபம் தேடுபவர்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள்! http://www.thinakural.com/New%20web%20site...ry/09/index.htm - வினித் - 02-11-2006 மலையகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோக அனுபவத்தை உருக்கமான முறையில் எழுதியிருக்கிறார். இவர், விளம்பரமொன்றைப் பார்த்து பதவி வெற்றிடங்களில் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பின், நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வந்தது. ஆவலுடன் சென்ற இவருடன் மற்றும் 24 பேருக்கு நேர்முகப் பரீட்சை மிக நுணுக்கமாக நடந்தது. இவர்களில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த நேர்முகப் பரீட்சையிலும் இந்த இளைஞர் வெற்றி பெற்றார். இவருடன் மற்றும் இரண்டு இளைஞர்களும் மூன்று யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டனர். இத்துடன் விட்டுவிடுவதாயில்லை. மற்றொரு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு அதில் மேற்படி ஆறு பேரின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. இரண்டு வாரங்கள் சென்ற பின் நியமனக் கடிதத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைப்பு வந்தது. இந்த இளைஞருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. தான் செய்து வந்த வேலையிலிருந்து விலகி விட்டு தனது புதிய பதவிபற்றி உறவினர்கள், நண்பர்களிடமெல்லாம் பெருமையாகத் தெரிவித்தார். நியமனக் கடிதத்தைப் பெறச் சென்றபோது அங்கு இன்னொரு அதிகாரி, தானும் நேர்முகப் பரீட்சை நடத்தப் போவதாக தெரிவித்து, சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டார். பின்னர், "ஐ ஆம் ஸொரி, இந்த வேலைக்குரிய திட்டத்தை ஆரம்பிக்கக் குறைந்தது ஒரு வருடமாவது செல்லும், அப்போது அறிவிக்கிறோம்" என்றார். இருந்த வேலையையும் விட்டுவிட்டேன். ஊர் திரும்பி அவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன்? என்று நினைக்க தனக்குத் தலை சுற்றத் தொடங்கிவிட்டதாம். இது எவ்வளவு பெரிய அநியாயம்! இப்படி கடைசி நேரத்தில் காலை வாரி விடுவோர் இருக்கும்போது, ஒரு காலை நன்றாக ஊன்றும் வரை மறுகாலை எடுக்கவே கூடாது தம்பி! http://www.thinakural.com/New%20web%20site...ry/11/index.htm - வினித் - 02-14-2006 மலையக இளைஞர் ஒருவர் ஒரு பதவிக்காக ஒரே நிறுவனத்தில் பலதடவைகள் நேர்முகப் பரீட்சைக்குத் தோன்றி வெற்றியீட்டி இறுதியில் நியமனக் கடிதத்தைப் பெறச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட பலத்த ஏமாற்றத்தை அவரே தெரிவித்திருந்தார் அல்லவா! இதை வாசித்துவிட்டு ஒரு நிறுவனத்தின் நிருவாகி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊழியர் நியமனத்தில் தனக்கு ஏற்பட்ட எதிர்மறையான அனுபவத்தைச் சொன்னார். இவரின் நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்துக்கு விளம்பரம் செய்தபோது, அவ்வேலைக்குப் பலர் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து இருவரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து ஒருவரைத் தெரிவு செய்தார். இந்த ஊழியர் ஒரு மாதகாலம் வேலை செய்த பின் சம்பளத்தையும் எடுத்துக் கொண்டு அந்த நிறுவனத்தின் பக்கமே தலைகாட்டவில்லையாம். எனவே அந்த ஊழியர் வராமைக்கான காரணத்தைக் கேட்டு அவரின் முகவரிக்கு கடிதம் அனுப்பியும் பதில் வராததால் அவ்வேலையிலிருந்து நீங்கியதாக கடிதம் அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் அந்த ஊழியர் பிறிதொரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டதாக இந்நிருவாகிக்குத் தகவல் கிடைத்ததாம். "ஆகவே நேர்முகப் பரீட்சைகள் மற்றும் நியமனங்கள் விடயத்தில் விண்ணப்பதாரிகளின் தரப்பை மட்டுமல்லாமல் நிருவாகத்தின் தரப்பில் ஏற்படும் அவலத்தையும் உங்கள் பத்தியில் எழுதுங்கள்" என்று அந்த நிருவாகி கேட்டுக் கொண்டார். எந்த நாணயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றனவே! http://www.thinakural.com/New%20web%20site...ruary/14/DR.htm - வினித் - 02-16-2006 காதலர் தினத்தைப் பற்றி பிச்சைக்காரர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றார் ஓர் இளைஞர். இவர் காதலில் கட்டுண்டு கிடக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டு "என்ன சங்கதி? ஜோடியாக இருக்கும்போது பிச்சை கேட்டு வந்தார்களா?" என்று கேட்டேன். அந்த இளைஞன் தெரிவித்த தகவல் புதுமையாக இருந்தது. "அன்று காலிமுகத்திடல், விகாரமகாதேவி பூங்கா முதலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பிச்சைக்காரர்கள் படையெடுத்து வந்தனர். காதலர்கள் ஜோடி சேர்ந்து இந்த இடங்களுக்கு வருவரென்பதைப் பிச்சைக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். காதலியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பிச்சை கொடுக்காமலும் இருக்க முடியவில்லை. ஒரே தொல்லை பாருங்கோ" என்றார் சிரித்துக் கொண்டே! காதலுக்கு விலை கொடுக்கத்தானே வேண்டும்! http://www.thinakural.com/New%20web%20site...ry/16/index.htm - வினித் - 03-07-2006 கலியாணம் பேசி முற்றாகிவிட்டது. மணப்பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் சீதனமாக வழங்கும் வீட்டை, விற்றுவிட்டுப் பணமாகத் தரும்படி மாப்பிள்ளையின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். மணப்பெண்ணின் பெற்றோரும் இதற்குச் சம்மதித்துவிட்டனர். மாப்பிள்ளையின் தந்தை இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் அந்த வீடு அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்று, அதைப் பார்வையிட்டு, அவ்வட்டாரத்தில் வசிப்பவர்களிடம் பேசி, உத்தேச விலை மதிப்பை அறிந்துகொண்டார். "வீடு பத்து இலட்சம் பெறுமதி என்கிறார்கள். அதை விற்று பத்து இலட்சத்தை தந்துவிட வேண்டும்" என்று மாப்பிள்ளையின் தந்தை, மணப்பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டார். மணப்பெண்ணின் தந்தை லேசுப்பட்டவர் அல்ல. அவர் தனது சாமர்த்தியத்தால் அவ்வீட்டை பதினைந்து இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துவிட்டார். 10 இலட்சத்தை கொடுத்துவிட்டு மிகுதி 5 இலட்சத்தை வைத்துக்கொண்டார். திருமணம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பின், மாப்பிள்ளையின் தந்தை, அந்த வீடு பதினைந்து இலட்சம் ரூபாவுக்கு விற்பனையான தகவலை அறிந்தார். விடுவாரா? மிகுதி ஐந்து இலட்சத்தையும் தரும்படி கேட்டபோது "நாங்கள் வீடு தருகிறோம் என்றோம். நீங்கள் அதை விற்று பத்து இலட்சம் ரூபா தரும்படி கேட்டீர்கள். அதன்படி அத்தொகையை தந்துவிட்டோம்" என்று தர்க்க ரீதியாகப் பதிலளித்தார் மணப்பெண்ணின் தந்தை. மாப்பிள்ளையின் பேரால் பிடுங்குவதில் தான் பலரும் அக்கறையாக இருக்கிறார்களோ! http://www.thinakural.com/New%20web%20site...ch/07/index.htm |