03-06-2006, 05:11 AM
sOliyAn Wrote:மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு
தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே
இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்
குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே
எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க
<b>எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! </b> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எல்லாம் கனவாகி
ஏதோ ஒரு காலமாகி
போனது போனதுதான்
மயங்காதே என்கிறேன்
மனசிடம் - கேட்கிறதா?
அந்த ஓலை பாயில்
உறங்கிய நாட்களையுன்
பஞ்சு மெத்தை தூக்கம்
வென்றதா என கேட்டு
மீண்டும்... நெஞ்சில் அறைகிறதே!
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->