Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணணி நீங்களும் செய்யலாம்
#9
இன்ரெல்லின் தொழில்நுட்பம்

அடுத்து பிரபலமான நுண்செயலிகள் இன்ரெல்லின் பென்ரியமும், செலரேனும். புதிய பென்ரியம் நுண்செயலியும், புதிய செலரோன் நுண்செயலியும் தொழிற்பாட்டு அடிப்படையில் பெரிதாக வித்தியாசம்
காட்டா.
இங்கும் வித்தியாசப் படுத்துவது முன்னர் குறிப்பிட்டவாறு இரண்டாம்தர இடைமாற்று
நினைவகமே! செலரோனில் 128 கிலோ பைட்டுக்களாளவும் பென்ரியத்தில் 512 கிலோ
பைட்டுக்களாளவும் உள்ளன.
அத்துடன் இவ்நுண்செயலிகளால் செயற்படுத்தக்கூடிய பாட்டை வேகமும் மாறுபடுகிறது. பென்ரியம் நுண்செயலியானது செலரோனைவிட வேகமான பாட்டை வேகத்தைக் காட்டுகிறது.

பாட்டை - Bus
பாட்டை என்பது பாதை போன்ற ஒரு அமைப்பு. அதாவது தாய்ப்பலகையில் இணைக்கப்படும் பாகங்கள் தங்களுக்கிடையும் நுண்செயலியுடனும் தொடர்புகொள்ள (தரவுகளை அனுப்ப பெற ) உபயோகிக்கும் இணைப்புகள் (அதுதான் நாம் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லப் பாவிக்கும் வீதிகள் மாதிரி)

இந்தப் நுண்செயலிப் பாட்டைகள் இரண்டுவகையுண்டு முன்பக்க பாட்டை (frontside bus) மற்றயது பின்பக்க பாட்டை (backside bus).
இதில் பின்பக்க பாட்டை நுண்செயலி இரண்டாம்தர இடைமாற்று நினைவகத்துடன் (L2 cache) வேகமாகத் தொடர்பு கொள்ளப் பயன்படும்(அதுதான் ஊரில் எங்கள் வீட்டுக்கும் அக்கம் பக்க வீடுகளுக்கும் இருக்கும் வேலியிடைப் பாதை மாதிரி :wink: ).

முன்பக்க பாட்டை நுண்செயலியானது, முதன்மை நினைவகம்(Main memory-RAM) உடன் தெடர்புகொள்ளவும் அத்துடன் பிரதான பகிர் பாட்டையுடன் தொர்புகொள்ளவும் பயன்படும்.
பகிர் பாட்டை என்பது ஒலி அட்டை (Sound card), ஒளித்தோற்ற அட்டை( Video Card), வன்வட்டு, மற்றும்
மட்டிசை மட்டறுப்பான் (Modem) போன்றவற்றுடன் தொடர்புகொள்ள பயன்படும் இணைப்பு.(அதுதான் பிரதான வீதி மாதிரி கடைகள் அலுவலகங்களுக்கு அப்பிடித்தானே போறது)

அடுத்தது சைரிக்ஸ் நுண்செயலிகள்
இவை பொதுவாக மிவும் மலிவான நுண்செயலிகள். இதுவும் இப்பொழுது புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப புதிய பரிமாணங்களுடன் வெளிவருகிறது
ஆனால் இன்று நுண்செயலிகளின் விலை முன்னய காலங்களுடன் ஒப்பிடும்பொழுது வெகுவாகக் குறைந்து விட்டன. ஆகவே பெரும்பாலானோர் இன்ரெல்லின் அல்லது ஏஎம்டியின் நுண்செயலிகளையே விரும்புகின்றனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-24-2003, 03:30 PM
[No subject] - by kuruvikal - 06-24-2003, 04:43 PM
[No subject] - by sOliyAn - 06-24-2003, 07:33 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 09:42 PM
[No subject] - by Kanani - 06-25-2003, 12:42 AM
[No subject] - by vaiyapuri - 06-25-2003, 07:18 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 07:59 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 01:08 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:18 PM
[No subject] - by Kanani - 06-26-2003, 12:47 AM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 01:43 AM
[No subject] - by sOliyAn - 06-26-2003, 01:02 PM
[No subject] - by vaiyapuri - 06-27-2003, 10:16 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 12:46 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 01:08 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:34 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:06 AM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:01 PM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:04 PM
[No subject] - by ahimsan - 06-30-2003, 09:50 PM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 09:05 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 10:12 PM
[No subject] - by Kanani - 07-13-2003, 08:35 PM
[No subject] - by Kanani - 07-14-2003, 12:29 AM
[No subject] - by Kanani - 08-27-2003, 12:31 AM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 01:01 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:12 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:36 AM
[No subject] - by Mathivathanan - 08-28-2003, 01:44 AM
[No subject] - by sOliyAn - 08-28-2003, 02:14 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:02 PM
[No subject] - by Kanani - 08-28-2003, 07:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)