Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது
#1
<b>இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041029104858time_clock203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார்.

இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம் பின்நோக்கி நகர்த்தினார்.

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தான் பதவியேற்று சில மாதங்களுக்குள் அதனை மீண்டும் அதன் முன்னைய நிலைக்கு மாற்றியுள்ளார்.

ஆனால் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அன்றுமுதல் இன்று வரை நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே நேரத்தையே பேணி வருகின்றனர்.

இந்த புதிய நேர மாற்றத்தின் மூலம் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே நேரம் அமுலில் இருக்கும்.

-BBC tamil
Reply


Messages In This Thread
இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது - by AJeevan - 03-04-2006, 10:45 PM
[No subject] - by sathiri - 03-04-2006, 11:38 PM
[No subject] - by Sujeenthan - 03-05-2006, 12:17 AM
[No subject] - by Birundan - 03-05-2006, 03:47 AM
[No subject] - by AJeevan - 03-05-2006, 11:08 PM
[No subject] - by Selvamuthu - 03-06-2006, 12:52 AM
[No subject] - by Niththila - 03-06-2006, 04:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)