Yarl Forum
இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது (/showthread.php?tid=629)



இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது - AJeevan - 03-04-2006

<b>இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041029104858time_clock203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார்.

இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம் பின்நோக்கி நகர்த்தினார்.

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தான் பதவியேற்று சில மாதங்களுக்குள் அதனை மீண்டும் அதன் முன்னைய நிலைக்கு மாற்றியுள்ளார்.

ஆனால் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அன்றுமுதல் இன்று வரை நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே நேரத்தையே பேணி வருகின்றனர்.

இந்த புதிய நேர மாற்றத்தின் மூலம் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே நேரம் அமுலில் இருக்கும்.

-BBC tamil


- sathiri - 03-04-2006

நேரத்தை மாத்தி என்ன பிரயோசனம் மதலிலை அரசியல் சட்டத்தை மாத்துங்கய்யா பெரியவரே ஒவ்வொருதரும் ஆட்சிக்கு வரும் போதும் நேரத்தையும் விமான நிலையத்தின்ரை பெயரையும் மாத்தி என்ன புண்ணியம்


- Sujeenthan - 03-05-2006

இதுல இருந்து ஒன்டு தெரியுது. இவையளுக்கு நேரம் சரியில்லை.


- Birundan - 03-05-2006

இங்கதான் பனிக்காக மாத்துறாங்கள், இருட்டா இருக்கும் என்று, சந்திரிகாவுக்கும் ராஜபக்க்சவுக்கும் பனிதான் பிடிச்சிருக்கு அவவுக்கு பெரிய பனி, இவருக்கு சின்ன பனி.


- AJeevan - 03-05-2006

சந்திரிகா ஆட்சி காலத்தில்
லக்ஸபாண நீர்வீழ்ச்சியில் நீர் குறைந்த போது
மின்சார வெட்டு தொடர்ந்தது.

இதற்காக அரை மணி நேரம்
தாமதமாக
மக்கள் வேலைக்குச் செல்வதற்காக
நேர மாற்றத்தைக் கொண்டு வந்தார் சந்திரிகா.

காரணம் இரவில்தான் இந்த மின்வெட்டு நடந்தது.

பிரான்ஸில் கல்வி கற்றதால்
இவருக்கு ஐரோப்பிய
குளிர்கால
காலநிலை மாற்றம் மனதில் எழுந்ததாக எங்கோ படித்ததாக நினைவு.

தற்போது மீண்டும்.............
பழைய நிலைக்கு மாறியிருக்கிறது.
காரணம் தெரியவில்லை?


- Selvamuthu - 03-06-2006

இவர் இலண்டனிலும் கல்வி கற்றதாக அறிந்தேன் அதன் தாக்கமாகவும் இருக்கலாம்.

இங்குதான் பாடசாலைப் பிள்ளைகள், பண்ணையில் வேலை செய்பவர்களின் வசதிக்காக நேரத்தை மாற்றுகிறார்கள்.
அங்கே எதற்காக? புதிதாக ஏதும் செய்யவேண்டும் என்பதற்காகவா?

பாவம் பொதுமக்கள்!


- Niththila - 03-06-2006

Birundan Wrote:இங்கதான் பனிக்காக மாத்துறாங்கள், இருட்டா இருக்கும் என்று, சந்திரிகாவுக்கும் ராஜபக்க்சவுக்கும் பனிதான் பிடிச்சிருக்கு அவவுக்கு பெரிய பனி, இவருக்கு சின்ன பனி.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->