02-05-2004, 12:43 PM
ரஜினியை கேவலமாக பேசினேனா?
நான் எந்தவகையிலும் ரஜினியை கேவலமாக பேசவில்லை என பா.ம.க. தலைவர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே ராமதாஸின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
நடிகர் ரஜினியை பற்றி விமர்சிக்கவே இல்லை என்ற பா.ம.க. ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலையில் நான் தெரிவிக்காத ஒரு கருத்தை தெரிவித்ததாக, உள் நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு எதிராக தூண்டி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் இந்த பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.
பத்திரிக்கைகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று நான் சொல்லி, நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல் நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு வாதத்திற்காக அப்படி நடந்ததாக வைத்துக்கொண்டாலும் பிரசுரிக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படும் ஒரு கருத்தை பத்திரிக்கையில் பிரசுரித்தது எந்த வகையில் பத்திரிக்கை தர்மம்? இது
விஷமத்தனத்தின் உச்சகட்டமில்லையா என்பதை அறிவார்ந்த பத்திரிக்கை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராமதாஸ் இவ்வாறு மறுப்பு சொல்லி வெளியிட்டாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல ஊர்களிலும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டியும் அறிக்கை வெளியிட்டும் தங்களத கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சுட்ட இடம்: CineSouth