02-05-2004, 10:07 AM
நன்றி அப்பு
ஆனால் நீங்கள் கொடுத்த உதாரணத்திற்கு அவை சமஸ்கிருதச்சொற்கள் தான் அதை நானும் ஏற்கனவே எனது விளக்கத்தில் கூறியிருக்கின்றேன் காலத்துக்கு காலம் தமிழில் பல்வேறு சொற்கள் கலந்தன என்று ஆனால் இப்படி சில சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு ஒட்டுமொத்த தமிழுமே சமஸ்கிருதத்தின் குழந்தைதான் என்று சொல்லிவிட முடியாது
அதற்கு உம்மிடம் சிறந்த ஆதாரம் இருந்தால் முன்வையும்
ஏனென்றால் சமஸ்கிருதம் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த அதே காலப்பகுதியில் திராவிடக்குடும்பத்து மொழிகளும் வழக்கத்தில் இருந்தன இதில் எது முன் தோன்றியது என்பது இன்னும் சர்ச்சைக்குரிய விடயமே ஆயினும் இரண்டுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன திராவிடக்குடும்பத்திற்கு சமஸ்கிருதம் தாய் ஆக இருந்திருக்க முடியாது
அப்புறம் அப்பு நாங்கள் அரசியலை நம்புவோம் அரசியல்வாதிகளை நம்ப மாட்டோம் நல்ல விடயம் எங்கிருந்தாலும் அது நம்மூர் வாசிகசலையாக இருந்தால் என்ன இணையத்தளமாக இருந்தாலென்ன தேடிப்படிப்போம் இந்த கருத்துக்களத்திற்கு நான் வந்ததே இப்படியான பல்வேறுபட்டவர்களதும் கருத்தைக் கேட்டு எனது மொழியறிவை விருத்தி செய்யவேண்டும் என்பதற்காக தான் விடயங்களை நீங்கள் சொன்னால் நாலு பேரிடம் கேட்டு விடையிறுக்கிறேன் குசும்பு காட்டினால் இருக்கவே இருக்கு கைவசம் எங்க ஊர் குறும்பு