03-03-2006, 01:31 AM
<b>ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது</b>
ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்காக சுவிற்சர்லாந்து சென்றிருந்த திறமைவாய்ந்த மூத்த பத்திரிகையாளராகிய `ஒப்சவர்' ஆங்கிலப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எச்.எல்.டீ.மகிந்த பாலவை கடத்திச் செல்வதற்கு ஜெனீவாவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களின் அமைப்பொன்றின் தலைவராகிய குலம் எனப்படுபவர் முயற்சித்ததாகவும் ஆயினும் அவருடைய கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தததாகவும் ஜெனீவாவிலிருந்து வெளியாகிய ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு மேற்படி முன்னாள் ஆசிரியர் மகிந்தபாலவை கடத்திச் செல்வதற்காக ஜெனீவாவில் இயங்கும் குறித்த புலிகள் ஆதரவு அமைப்பின் தலைவர் குலம் ஏற்பாடு செய்திருந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளான குட்டி, சூத்திரா என அழைக்கப்படும் இருவரையும் ஜெனீவாவில் வசிக்கும் தமிழர்களே வசமாகப் பிடித்துக் கொண்டதாகவும் பின்னர் அந்த இருவரையும் அவர்கள் சுவிற்சர்லாந்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் மேலும் குறித்த தகவல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் நடத்தப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போதே நடந்துள்ளதாகவும்
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் நீல நிறக் கார் ஒன்றில் ஆசிரியர் மகிந்தபாலவைக் கடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பம் வரும்வரை குறித்த இடம் ஒன்றில் காத்துக் கொண்டிருந்ததாகவும் இதுபற்றி ஏற்கனவே தகவல் அறிந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் அவர்களுடைய காரை நோக்கிப் பாய்ந்து சென்ற போது குலம் எனப்படும் நபர் கண்ணீர்புகை உபகரணம் மற்றும் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் ஜெனீவாவில் வசிக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குட்டி, சூத்ரா ஆகியோர் இனங்கண்டு அவர்களைக் கைது செய்த போதே அவர்கள் ஆசிரியர் மகிந்த பாலவைக் கடத்துவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொண்டனர். மேலும், குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் மூலம் மகிந்த பாலவைக் கடத்திச் செல்வதற்கு புலிகள் இயக்கம் திட்டம் மேற்கொண்டிருந்ததை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த பத்திரிகை ஆசிரியராகிய குமாரதுரை என்பவரும் உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெனீவா பொலிஸ் தரப்பினர் கடந்த 28 ஆம் திகதி ஜெனீவாவில் இயங்கும் புலிகள் இயக்க ஆதரவாளர் அமைப்பினதும் புலிகள் உளவுப் பிரிவினதும் தலைவராகிய மேற்படி குலம் என்பவரைக் கைது செய்துள்ளது. இவரை விடுதலை செய்வதற்காக சுவிற்சர்லாந்திலுள்ள புலிகள் இயக்கத் தலைவர் அன்டன் பொன்ராஜா கடும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
<b>-திவயின:1:3:2006-</b>
<b>???</b>

<< j e e n o >>