03-02-2006, 03:25 PM
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?
சரியாதான் சொல்லி இருக்கார்....இணைப்புக்கு நன்றி......
சரியாதான் சொல்லி இருக்கார்....இணைப்புக்கு நன்றி......

