03-02-2006, 12:30 PM
சமூக சார்பற்ற புலமைத்துவத்தை அடியோடு வெறுத்தவர் பேராசிரியர் கைலாசபதி
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை கைலாசபதி நினைவு சொற்பொழிவு இடம்பெறுவதை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது
க.நடேசமூர்த்தி
கடந்த நூற்றாண்டு, இலங்கை உருவாக்கிய குறிப்பிடத்தக்க அறிஞர்களில் பேராசிரியர் க.கைலாசபதி தலைசிறந்த ஒருவராக விளங்கினார். அவரது வாழ்வும் பணியும் பங்களிப்பும் அதிக காலத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. நாற்பத்தியொன்பது (1933 - 1982) வயதில் அவரது வாழ்வு கடுமையான நோயினால் முடிவுக்கு வந்தது.இருப்பினும் அவரது வாழ்வு பெறுமதியும் பயனும் உடையதாக அமைந்திருந்தமை மனம் கொள்ளத்தக்கதாகும்.
பேராசிரியர் கைலாசபதி தமிழ் இலக்கியப் பரப்பில் கல்வித் தளத்தில் சமூக, அரசியல் களத்தில் தனது ஆற்றலை ஆளுமையுடன் வெளிப்படுத்தியவர். தமிழர் பாரம்பரியத்தில் அறிஞர்கள் எனப்பட்டவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்ததும் வழிவழியாகப் பின்பற்றப்பட்டும் வந்ததான பழைமைவாதச் சட்டங்களை உடைத்துக் கொண்டு புதிய செல்நெறியை தோற்றுவிப்பதில் கைலாசபதி ஒரு முன்னோடிப் பாத்திரத்தை வகித்து நின்றார்.அத்தகைய பாத்திரம் அவரை மாக்ஸிச உலக நோக்கு நிலை கொண்ட ஒரு அறிஞராக நிலை நிறுத்திக் கொண்டது. கைலாசபதியின் கால கட்டம் என்று வரலாற்றில் சுட்டிக்காட்டப்படும் ஒரு காலப் பகுதியை அவரது சிந்தனையும் கருத்துகளும் ஆட்கொண்டிருந்தமையை அவரை எதிர்த்து நின்றவர்களும் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். பழைமைவாதத்தின் பகைப்புலத்தின் ஊடே சமூகத்தளத்தில் உருவாக்கம் பெறும் எந்தவொரு கல்வியாளனும் அது விதித்துள்ள எல்லைக் கோடுகளை தாண்டிச் சென்று புறநிலை யதார்த்தங்களை காண்பதும் அவற்றின் மூலம் விடயங்களை நுண்ணார்ந்து நோக்கி நிற்பதும் தமிழ்ச் சூழலில் கடினமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அவ்வாறான நிலையைத் தாண்டுவதற்கு ஆரம்ப முயற்சி எடுத்து வித்தியாசமான பாதையில் பயணங்களை ஆரம்பித்தவர்கள் கூட இடை நடுவில் தமிழர் பழைமைவாதத்தின் வேகமான அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு அரைகுறையானவர்களாகவும் சீரழிந்தவர்களாகவும் ஆகிக் கொண்ட அனுபவங்களை நமது சூழலிலே காண முடிந்திருக்கிறது.
ஆனால், பேராசிரியர் கைலாசபதியும் அவரைப் போன்றவர்களும் தாம் பெற்றுக் கொண்ட மாக்ஸிச உலக நோக்கு என்ற சமூக விஞ்ஞானக் கோட்பாட்டை முழுமையாக விளங்கிக் கொண்டிருந்தனர். அந்த வகையிலே கைலாசபதி பழைமையும் செழுமையும் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பினுள் மாக்ஸிச உலக நோக்கு என்ற ஒளி பாய்ச்சியின் ஊடே புகுந்து கொண்டார். இதற்கான பயிற்சியை அவர் தனது மாணவப் பருவத்திலிருந்தே பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்தார். இடைநிலைக் கல்விக் காலத்தில் கையேற்ற மாக்ஸிசக் கோட்பாட்டை தனது பல்கலைக்கழக காலத்தில் மேலும் இறுகப்பற்றிக் கொண்ட அதேவேளை, வெறுமனே அறிவியல் அடிப்படை கொண்ட ஒன்று என்ற மேலோட்டமான அணுகு முறைக்கும் அப்பால் சமூக நடைமுறைக்குப் பயன்படுத்தும் தத்துவார்த்தக் கோட்பாடாக முன்னெடுப்பதில் கைலாசபதி அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டி நின்றார். "இதுவரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தே வந்திருக்கிறார்கள். நமது பணியோ உலகை மாற்றியமைப்பதாகும்" என்ற மாக்ஸிசப் பிரகடனத்தின் சாராம்சத்தை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பின்பற்றிக் கொள்வதில் கைலாசபதி வெற்றி பெற்றிருந்தார்.
வரலாற்றுத் தொன்மையானது, வன்மையானது, செழுமை மிக்கது, உலகத்திலேயே ஒப்புயர் பெற்றது, ஈடுஇணையற்றது என்று வழிவழியாகப் புகழ் பாடப்பட்டு வந்து தமிழ் இலக்கியப் பரப்பினுள் துணிவுடன் புகுந்து, விடயங்கள் ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தவர் கைலாசபதி. இது முற்று முழுதான ஒரு எதிர் நீச்சலாகவும் இருந்தது. ஏனெனில், தமிழர் பழைமைவாதத் தளத்திலிருந்து எழுந்த ஒவ்வொரு குரலுக்கும் எழுத்திற்கும் அவர் ஆதாரபூர்வமாகப் பதிலிறுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். அதற்கு அவர் கடைப்பிடித்த வழிமுறை வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கில் அமைந்த வர்க்கப் போராட்ட அணுகு முறையைப் பிரயோகித்தமை தான். அதன் மூலமே தமிழ் இலக்கியத்தின் கூறுகள் ஒவ்வொன்றையும் வரலாற்று அடிப்படையில் வைத்து அவற்றின் சாதக பாதகங்களை அடையாளம் காணவும் முடிந்தமையாகும். இங்கே தான் கைலாசபதி வரலாற்றுணர்வின் நோக்கையும் போக்கையும் வற்புறுத்திக் காட்டி நின்றார். அதன் அடிப்படையிலேயே அவரது தமிழ் இலக்கியத் திறனாய்வுகளும் ஒப்பீடுகளும் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அமைந்திருந்தன.
இவ்வாறு தமிழ் இலக்கியத்தின் பழைமை, செழுமை அவற்றின் வரலாற்றுச் சிறப்பு என்பனவற்றை கைலாசபதி மாக்ஸிச உலக நோக்கின் ஊடே அணுகி ஆராய்ந்து அவற்றுக்கு அறிவியல் சார்ந்த அடிப்படைகளை வழங்கி நின்ற அதேவேளை, நவீன இலக்கியத்தின் திசை மார்க்கம் பற்றியும் எடுத்துக் காட்டினார். முன்னையவற்றின் அனுபவத்தின் ஊடாகப் பின்னையவற்றுக்கான வழி காட்டலையும் நெறிப்படுத்தி வந்தார். தமிழ் இலக்கியப் பரப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியை மேலை நாடுகளின் இலக்கிய வளர்ச்சிகளோடு ஒப்பிட்டு நோக்குவதிலும் கைலாசபதி தடம் பதித்தவரானார். இத்தகைய ஆய்வும் ஒப்புநோக்கும் என்பது வெறுமனே பல்கலைக்கழக மேற்படிப்பு பட்டங்கள் பெறுவது என்ற எல்லைக்கும் அப்பால் சென்று நமது சமூகச் சூழலை அறிவியல் நோக்கில் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் இளந்தலைமுறையினருக்கு திசை காட்டியாகவும் நின்றார் என்பது முக்கியமானதாகும்.
அதன் அடிப்படையிலேயே கைலாசபதி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு பகுதியாக இருந்து வந்த ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை நிலை நாட்டுவதில் தனது ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டார். அதன் வழியில் ஈழத்து இலக்கியத்தின் வேர்களைத் தேடிச் செல்வதில் முழு அக்கறை காட்டினார். அவ்வாறு அவர் சென்றதன் மூலம் ஈழத்து இலக்கியத்தின் வரலாற்று வளர்ச்சியையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்தி அதனை தமிழ் இலக்கியப் பரப்பில் அங்கீகாரம் பெற வைத்ததில் தனது பங்களிப்பை வழங்கினார். ஏனெனில் தமிழகத்தையும் இந்தியாவையும் வழிபாட்டுத் தலங்களாகக் கொண்ட இலக்கிய உச்சாடனங்கள் செய்யப்பட்டு பழைமை போற்றித் தொழுது நின்ற நிலை செல்வாக்குடையதாக இருந்து வந்த சூழலைத் தகர்ப்பதில் கைலாசபதி முன்னணிப் பாத்திரம் வகித்தார். அதனை பகைமை உணர்வின் அடிப்படையிலோ வெறுத்தொதுக்கும் மனப்பான்மையிலோ அன்றி, மாக்ஸிச உலக நோக்கின் ஊடான வர்க்கப் போராட்ட அணுகுமுறை கொண்டே தமிழகத்தின் இலக்கியங்களை நோக்கினார். இத்தகைய நோக்குமுறை இந்தியாவினதும் தமிழகத்தினதும் மாக்ஸிச வழிவந்த அறிஞர்களின் நோக்குடனும் போக்குகளுடனும் இணைந்து செல்லும் ஒன்றாகவும் அமைந்திருந்தது. கைலாசபதியின் இத்தகைய நோக்கு நிலை தமிழகத்தின் இலக்கியப் பரப்பிலே பல அதிர்வுகளை ஏற்படுத்தி நின்றன. அதன் காரணமாக புதிய புதிய ஆய்வுத்துறையாளர்கள் கைலாசபதியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அதேவேளை, கைலாசபதியின் அணுகுமுறையை எதிர்க்கும் ஒரு பழைமைவாதக் கூட்டம் தமிழகத்தில் மாத்திரமன்றி ஈழத்திலும் தமது குரலை மேலுயர்த்தி நின்றது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தோரது கைலாசபதி எதிர்ப்பு குரல், அவர் மறைந்து இருபத்தி மூன்று ஆண்டுகளின் பின்பும் ஆங்காங்கே ஒலிக்க வைக்கப்படுகின்றது. வரலாற்றுணர்வோ தர்க்க அடிப்படைகளோ இன்றி அவ்வப்போது மேலெழுந்த இக் குரல்களின் பின்புலம் தமிழர் பழைமைவாதத்தினதும் முதலாளித்துவத்தினது கருவறைகளில் இருந்து பிறப்பனவையாகவே காணப்படுகின்றன. அவற்றுக்கு, கைலாசபதி தனது வாழ் நாளில் உறுதியாக நின்று முகம் கொடுத்து வந்தவர். வரலாற்று மோசடிகளையும் புரட்டல்களையும் திரிபுகளையும் சமாசம் இன்றி எதிர்த்து நின்றவர்.
அவரிடம் உறுதியான சிந்தனைத் தளமும் செயலூக்கம் மிக்க தெளிவான கருத்தியல் முன் வைப்பும் இருந்து வந்தது. ஊசலாட்டமோ சிந்தனைக் குழப்பமோ தெளிவற்ற அணுகுமுறையோ கைலாசபதியிடம் இருந்ததில்லை. வரலாற்றுணர்வும் வர்க்கப் பார்வையும் சமூகச் சார்பும் தூர நோக்கும் ஆழ்ந்த மனித நேயமும் அவரின் அடிப்படைகளாக அமைந்திருந்தன. சமூக மாற்றத்திற்கான அவாவும் அக்கறையும் அவ் அடிப்படைகளில் இழையோடி நின்றன. இவற்றுடன் கூடியதான சிறப்பம்சமாக அவரது வாழ்வும் பணியும் இரட்டைத்தனம் அற்றதாக அமைந்திருந்தமை நோக்குதற்குரியதாகும்.
சமூக சார்பற்ற புலமைத்துவத்தை அறிவு ஜீவித்தனத்தை அடியோடு வெறுத்தவர் கைலாசபதி. அதன் காரணமாகவே அவர் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சமூகப் பயன்பாடுமிக்கதாக நிலை நிறுத்த முயன்றுழைத்தார். அந்த வழியில் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கவும் முன்னின்று வழி காட்டினார். "தேடிச் சோறு நிதம் தின்று" வாழும் சராசரி அறிவு ஜீவியாகவோ கல்வியாளராகவோ வாழ்வதை கைலாசபதி நிராகரித்து வாழ்ந்தவர். "கைலாசபதி இன்றிருந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பார்" என்று எழுப்பப்படும் கேள்விக்குரிய பதிலை மேற்கூறியவற்றின் அடிப்படைகளில் இருந்து பெறுவதே தர்க்க ரீதியிலானதாகும்.
தமிழ் இலக்கியப் பரப்பிலும் கல்வி தளத்திலும் சமூக அரசியல் களத்திலும் தனது மேதாவிலாசத்தை தனித்துவ முத்திரையாகப் பதித்துச் சென்ற பேராசிரியரின் சிந்தனை, கருத்தியல், செயற்பாடு என்பனவற்றை புதிய தலைமுறையினர் ஆழ்ந்து கற்றறிவது அவசியமானதாகும். அவரது நூல்களில் இருந்து படித்தறிவதற்கு ஆழமான கருவூலங்கள் படிந்து காணப்படுகின்றன.அவை சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இலக்கியச் செல் நெறி ஒன்றை உள்ளடக்கி இருப்பதை கண்டுகொள்ள முடியும். கைலாசபதியின் காலகட்டம் என்று சுட்டப்படுவதன் முழு அர்த்தத்தையும் ஒருவர் புரிந்து கொள்வதற்கு கைலாசபதியின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் பழைமைவாத கருத்துகளில் இருந்தோ அல்லது வக்கிரநிலை கொண்ட கொச்சைப்படுத்தல்களில் இருந்தோ அன்றி, பின் நவீனத்துவவாதிகளின் பிதற்றல்களில் இருந்தோ புரிந்து கொள்ள முடியாது. சமூக அக்கறையும் சமூக மாற்றமும் வேண்டி நின்று செயல்பட முனையும் ஒவ்வொருவருக்கும் கைலாசபதி வழங்கிச் சென்ற பங்களிப்பானது பயனும் வலுவும் கொண்ட சமூக அறிவியல் சார்ந்த கருத்தியல் ஆயுதமாகவே விளங்கும். அவரது நூல்கள் அனைத்தும் பயன்தரும் வகையில் படிக்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டும்.பேராசிரியர் க.கைலாசபதியின் மறைவு தினம் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதியாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...9/Article-2.htm