Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?
#1
<b>காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் </b>
<img src='http://thamilworld.com/gallery/albums/userpics/10002/024%7E0.JPG' border='0' alt='user posted image'>

காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்!

நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடி. பொறுத்து பொறுத்து பார்க்கிற ஆர்யா போடுகிற திட்டம் என்ன? அக்ஷயாவின் காதல் நிறைவேறியதா என்பது முடிவு.

புதுமண தம்பதிகள் போலவே நெருக்கத்தை காட்டியிருக்கிறார்கள் ஆர்யாவும், ரேணுகா மேனனும். சமையல் அறையில் இருக்கிற ரேணுகாவை போனில் வெளியே வரவழைத்த பின், நைசாக சமையல் கட்டில் நுழைகிற ஆர்யா, ரேணுகா திரும்பி வருவதற்குள் கோழி குழம்பு வைத்துவிட்டு சைலண்டாக வெளியேறுகிற காட்சியில் கும்மென்ற காதல் வாசம்! அதே மாதிரி ரேணுகாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா கொடுக்கிற சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றொரு ஆச்சர்யம்.!

அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது அக்ஷயாதான். பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!

கோபமாக டயலாக் பேச வேண்டிய இடங்களில் எல்லாம், உஸ்பெகிஸ்தான் சிட்டிசன், 30 நாளில் தமிழ் கற்று கொண்டது போல் பேசுகிறார் ஆர்யா. மனசில் என்ன நினைக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியேன் என்கிற மாதிரியே முகபாவங்கள்... கடவுளே!

அக்ஷயாவை விரட்டி விரட்டி காதலிக்கிற அந்த வில்லனும் அசத்தல் பார்ட்டிதான்!

இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... தோகை விரித்தொரு ஆண் மயில்... இரண்டு பாடல்களை திரும்ப திரும்ப கேட்கலாம். பின்னணி இசைக்காகவும் பலே சொல்லலாம்! தோகை விரித்தொரு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனரும், அப்பாடலுக்கு அழகான செட் போட்ட ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! மதியின் ஒளிப்பதிவில் முழு மதியின் நிறைவு! எல்லாம் ஓ.கே! ஆனால்,

கற்பழித்தவனுக்கே மகளை கட்டிக் கொடுக்க நினைக்கிற குடும்பம். எங்கேயோ நடக்கிற அரிதான முரண்பாடுகளை நியாயப்படுத்துகிற திரைக்கதை. கலாபம் என்றால் தோகை விரித்தாடுகிற மயில் என்று பொருளாம். இந்த மயில் ஆடியிருப்பது காபரே ஆட்டம்!

tamilcinema.com
விடுப்பு : .
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? - by Rasikai - 03-01-2006, 07:57 PM
[No subject] - by iniyaval - 03-03-2006, 05:15 PM
[No subject] - by SUNDHAL - 03-03-2006, 05:34 PM
[No subject] - by I.V.Sasi - 03-04-2006, 12:13 AM
[No subject] - by Sujeenthan - 03-04-2006, 03:21 AM
[No subject] - by Snegethy - 03-04-2006, 03:29 AM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 12:56 PM
[No subject] - by Thala - 03-04-2006, 01:19 PM
[No subject] - by Snegethy - 03-04-2006, 02:32 PM
[No subject] - by Danklas - 03-04-2006, 02:42 PM
[No subject] - by வினித் - 03-04-2006, 02:44 PM
[No subject] - by Danklas - 03-04-2006, 02:48 PM
[No subject] - by வினித் - 03-04-2006, 02:57 PM
[No subject] - by Jenany - 03-04-2006, 04:00 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:12 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:13 PM
[No subject] - by வினித் - 03-04-2006, 04:14 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:15 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:16 PM
[No subject] - by வினித் - 03-04-2006, 04:22 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:30 PM
[No subject] - by வினித் - 03-04-2006, 04:33 PM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:41 PM
[No subject] - by Vishnu - 03-05-2006, 02:27 AM
[No subject] - by sinnappu - 03-05-2006, 12:37 PM
[No subject] - by ப்ரியசகி - 03-05-2006, 02:03 PM
[No subject] - by sinnappu - 03-05-2006, 04:59 PM
[No subject] - by Niththila - 03-06-2006, 01:23 PM
[No subject] - by ப்ரியசகி - 03-06-2006, 07:44 PM
[No subject] - by ப்ரியசகி - 03-06-2006, 07:46 PM
[No subject] - by வினித் - 03-06-2006, 11:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)