02-27-2006, 03:17 PM
<img src='http://img139.imageshack.us/img139/9484/image082lx.jpg' border='0' alt='user posted image'>
நடிகர்கள் - மாதவன், பூஜா, பிஜுமேனன், வடிவேலு, மணிவண்ணன்
இயக்கம் - சீமான்
இசை - வித்யாசாகர்
ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியன்
கத்தி - ரத்தம் என்று வெறி பிடித்து திரிபவர்களை அடக்க, அவர்களைப்போல ஆயுதம் எடுப்பது தீர்வு ஆகாது என்பதை துணிச்சலாக சொல்லும் கதை.
வன்முறை செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன் தம்பி வேலுத் தொண்டைமான். ஆயுதம் எடுப்பவர்களுக்கு அனுபவ பாடம் நடத்தி திருத்த வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. தன் குடும்பத்தை அழித்த எதிரியையும் பழிக்குப் பழி வாங்காமல் மனித நேயத்தால் திருத்த முயற்சி செய்கிறான்.
ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அரணாக நிற்கிறான். நேர்மையான அதிகாரியை கொலை செய்யும் ரவுடிகளை திருத்தி வில்லனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கிறான். இதனால் தம்பியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் ஒரு இளம் பெண் அவனை காதலிக்கிறாள்.
வில்லன் தூண்டுதலால் ஊரில் வன்முறை வெடிக்கிறது. இதில் சிக்கிய வில்லனின் குழந்தையும், தாயும் உயிருக்கு போராடுகிறார்கள். அவர்களையும் தம்பி காப்பாற்றுகிறான். வன்முறையை தடுக்கும் தம்பியை, ஜெயிலில் இருந்து வரும் ஒரு ரவுடி வெட்டி சாய்க்கிறான். முடிவு என்ன என்பது "கிளைமாக்ஸ்''.
தம்பியாக மாதவன். வன்முறையை ஒழிக்க அகிம்சையை கடைபிடிக்கும் புதுமையான வேடம் என்றாலும் அறிவுரையை கேட்காதவர்களுக்கு "நையப்புடை'' என்ற பாரதியின் பாடலை தாரக மந்திரமாக ஏற்று பாடம் புகட்டுவது வித்தியாசம்.
தாய், தந்தை, தங்கை மீது காட்டும் பாசம் "பூவாசம்''. அவர்களைப் பிரிந்து துடிப்பது "பூகம்பம்''. சுற்றிச் சுற்றி வரும் காதலியை நெருங்க விடாமல் மிரட்டுவது வித்தியாசமான காதல். கத்தி - ரத்தம் என்று வாழ்பவர்களுக்கு அதனால் ஏற்படும் விபரீத முடிவை நேரில் காட்டி திருத்துவது புதிய கோணம். மாதவனின் கண்களும் நடிக்கின்றன.
தம்பியின் காதலி அர்ச்சனாவாக பூஜா. ஆரம்பத்தில் மாதவனை வெறுப்பதும், அவரைப் பற்றி தெரிந்ததும் விரும்புவதும் வழக்கமான விஷயம். என்றாலும், பூஜா அந்த உணர்ச்சிகளை அருமையாக பிரதிபலிக்கிறார். நாட்டிய அரங்கில் மாதவன் ரவுடிகளை துரத்தி வந்து அடித்து உதைப்பதைப் பார்த்து நடுங்கும் பூஜா, ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். காதல் கனவுகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பெயர் வாங்குகிறார்.
மாதவனின் நண்பனாக வடிவேலு வந்து போகிறார். வில்லனாக பிஜுமேனன். மிரள வைக்கிறார். அவரது கையாளாக வரும் இளவரசு, சண்முகராஜன் இருவரும் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். மணிவண்ணன் பாத்திரம் இதுவரை தமிழ்த்திரை காணாதது. மனோபாலா, ராஜ்கபூர், சுமித்ரா, வினோத் ராஜ் ஆகியோரும் உண்டு.
வித்யாசாகர் இசையில் "வித்தக சாகர்' என்பதை காட்டியிருக்கிறார். பாரதி பாடல் மனதில் இடம் பிடிக்கும். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு "பலம்''. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சீமான். அகிம்சைதான் அமைதிக்கு ஆதாரம் என்பதை அழுத்தமாக பதிய வைப்பதில் முழு கவனம் செலுத்தியுள்ள இவரது சமூக அக்கறையை பாராட்டலாம்.
"கத்திக்கு கத்தி, ரத்தத்துக்கு ரத்தம்'' என்பது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று பெரியவர்கள் சொன்னதை இன்றைய இளைஞர்களுக்கு அவர்களுடைய பாணியில் சொல்லி புரட்சி சீமான் ஆகியிருக்கிறார்.
ஒரே ஒரு இளைஞனால் அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்லும் விதம் புதுமை.
கமர்சியல் சினிமாவிலும் கனமான கருத்தை புரியும்படி சொல்ல முடியும். வெற்றியை அள்ள முடியும் என்பதற்கு இவர் சொன்ன கதை கச்சிதம்.
தம்பி - இன்றைய தலைமுறைக்கு தேவையான தங்கக் கம்பி.

..
....
..!
....
..!