02-26-2006, 12:00 AM
மழலைகள்
மண்ணில் வரும்
மரகதவீணைகள்
மலரும்போது
மனமதில்தான் எத்தனை
மகிழ்வு!
கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற உள்ளம்
கவலையற்ற வதனம்
இதுதான் மழலைகளின் உலகம்!
மொட்டவிழும் மலராய்
பட்டுப்போன்ற கன்னத்தால்
சிட்டாய் பறந்தடிக்கும்
சிட்டுக்குருவிகளல்லவோ இவர்கள்!
மண்ணும் ஒன்று உணவும் ஒன்று
பாம்பும் ஒன்று பந்தும் ஒன்று
என்பது இவர்கள் பார்வை
கொடிய மனதிலுள்ள கடிய செயலை படிய வைக்கும்பிறைமுகங்கள்
நிலவின் முகத்திலும் கருமை படியும்-ஆனால் இவர்கள் மதி முகங்களில் படியாது
மழலைகள் வாழ்வின் பேழைகள்.
மண்ணில் வரும்
மரகதவீணைகள்
மலரும்போது
மனமதில்தான் எத்தனை
மகிழ்வு!
கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற உள்ளம்
கவலையற்ற வதனம்
இதுதான் மழலைகளின் உலகம்!
மொட்டவிழும் மலராய்
பட்டுப்போன்ற கன்னத்தால்
சிட்டாய் பறந்தடிக்கும்
சிட்டுக்குருவிகளல்லவோ இவர்கள்!
மண்ணும் ஒன்று உணவும் ஒன்று
பாம்பும் ஒன்று பந்தும் ஒன்று
என்பது இவர்கள் பார்வை
கொடிய மனதிலுள்ள கடிய செயலை படிய வைக்கும்பிறைமுகங்கள்
நிலவின் முகத்திலும் கருமை படியும்-ஆனால் இவர்கள் மதி முகங்களில் படியாது
மழலைகள் வாழ்வின் பேழைகள்.

