02-24-2006, 08:42 PM
இதுவரை ரிபிசியில் ராம்ராஜ் மற்றும் அவரைச் சார்ந்த அனைவரும் அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனால், அப்படி போகின்றவர்களுக்கு சில சட்டம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்கின்ற கருத்தை அடிக்கடி சொல்லி வந்தார்கள். விடுதலைப்புலிகளுக்காக ஊர்வலம் போகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு நேரம் வரும் போது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை ரிபிசியில் பயமுறுத்துவார்கள். அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, இவருக்கு இந்த பிரச்சனை வந்தது என்று பெயர்களுடன் கூட சில சம்பவங்களையும் சொல்வார்கள். விடுதலைப்புலிகளின் ஒரு சில ஆதரவாளர்கள் இவர்களின் இந்தக் கதைகளை கேட்டு நம்பியதும் உண்டு.
ஆனால் விந்தை என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஊர்வலம் போன ராம்ராஜ்தான் இன்று சிறையில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனவர்கள் அல்ல. இந்த முரண்பாட்டை ஒருமுறை ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்