02-24-2006, 08:31 PM
சிறையில் ராம்ராஜ் - சில சிந்தனைகள்!
ரிபிசியின் பணிப்பாளர் சுவிஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது சுவிஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர். நேற்று (23.02.06) ரிபிசியின் அரசியல் விவாதம் ரிபிசியின் பணிப்பாளர் ராம்ராஜ் இல்லாமலேயே நடைபெற்றது.
இவருடைய கைது நடைபெற்றதும் பலர் என்னை தொடர்பு கொண்டு கதைத்தனர். அவர்கள் அவர் கைது செய்யப்பட்டது பற்றி மிகவும் மகிழ்வுடன் இருந்தார்கள். ஆனால் சில செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் நான் ராம்ராஜுடன் சில முறை தொடர்பு கொண்டு பேசியிருந்ததன் காரணமாக, எதிர்தரப்பில் இருந்தாலும் என்னுடன் நன்றாக பழகக்கூடிய ஒரு மனிதர் சிறையில் இருக்கின்றார் என்பது குறித்து என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஆகவே ஜெகநாதன் என்பவர் ரிபிசியில் நேற்று சொன்னது போன்று, இந்த சிறைவாசம் ராம்ராஜுக்கு சிந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ஆறுதல் பட்டுக் கொள்கிறேன். அவருக்கு எவ்வாறான சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கும் சில கருத்துக்கள் உண்டு.
இதுவரை ரிபிசியில் ராம்ராஜ் மற்றும் அவரைச் சார்ந்த அனைவரும் அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனால், அப்படி போகின்றவர்களுக்கு சில சட்டம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்கின்ற கருத்தை அடிக்கடி சொல்லி வந்தார்கள். விடுதலைப்புலிகளுக்காக ஊர்வலம் போகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு நேரம் வரும் போது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை ரிபிசியில் பயமுறுத்துவார்கள். அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, இவருக்கு இந்த பிரச்சனை வந்தது என்று பெயர்களுடன் கூட சில சம்பவங்களையும் சொல்வார்கள். விடுதலைப்புலிகளின் ஒரு சில ஆதரவாளர்கள் இவர்களின் இந்தக் கதைகளை கேட்டு நம்பியதும் உண்டு.
ஆனால் விந்தை என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஊர்வலம் போன ராம்ராஜ்தான் இன்று சிறையில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனவர்கள் அல்ல. இந்த முரண்பாட்டை ஒருமுறை ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
இன்னும் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ரிபிசி வானொலியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கதைப்பவர்களை, நாட்டுக்கு போய் போராடச் சொல்லி கிண்டல் அடிப்பது வழக்கம். இது ரிபிசி மேற்கொள்ளும் ஒரு மிக மலிவான நடவடிக்கை. நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக மட்டும்தான் போராட முடியும் என்பதில்லை. இவர்கள் சொல்கின்ற "ஜனநாயகத்திற்காகவும்" போராடலாம். ஆகவே போராடப் போக வேண்டியது இவர்கள்தான். இங்கு புலத்தில் விடுதலைப்புலிகளுக்காக வாதாடுபவர்கள் யாரும் தாங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் ரிபிசி வானொலியில் ராம்ராஜும் ஜெயதேவனுமே அடிக்கடி "எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை" என்று முழங்குவார்கள். இன்று சுவிஸிற்கு சென்றால் அங்கு பொலிஸாரால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் ஏதோ ஒரு அசட்டுத் துணிவில் ராம்ராஜ் சென்றிருக்கின்றார். தற்பொழுது கைதாகி சிறையிலும் இருக்கின்றார். "உயிர் கொடுப்பதற்கும் சிறை செல்வதற்கும் துணிவு கொண்ட நீங்கள் அல்லவா நாடு சென்று நீங்கள் சொல்லும் ஜனநாயகத்திற்காக போராட வேண்டும்" என்று ராம்ராஜ் வெளியில் வந்ததும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேட்பார்களே. இதையும் அவர் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விடுங்கள். சில ஊடகங்கள் ராம்ராஜ் குறித்து எழுதுகின்ற பொழுது, அவர் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர் என்று எழுதுவார்கள். நம்புவதற்கு கடினமான பல குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தவார்கள். ஆனால் ரிபிசி ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இவ்வளவும் ஏன்? நான் கூட இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்பியதில்லை. விடுதலைப்புலிகளை எதிர்பதால் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மனிதன் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றே நினைத்தது உண்டு. ஆனால் இப்பொழுது இவருக்கு வாக்காலத்து வாங்கிய அனைவரின் முகத்திலும் கரியை பூசி விட்டாரே. பாவம். இனி ரிபிசி நேயர்கள் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள்? இதையும் ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது போன்ற பல சிந்தனைகள் அவருக்குள் உருவாகி, தன்னுடைய கருத்துக்களை மாற்றி தேசியத்தை அவமதிக்காத ஒரு மனிதராக அவர் வெளியே வர வேண்டும். வந்து புத்தகமும் எழுத வேண்டும். அவர் மாறாவிட்டாலும் பரவாயில்லை. விரைவில் வெளியே வர வேண்டும். எங்களுக்கும் பொழுது போக வேண்டுமல்லவா?
கடைசியாக ரிபிசியிடம் ஒரு கேள்வி. உண்மைக்கு முதலிடம் கொடுக்கும் நீங்கள் ராம்ராஜ் கைது விடயத்தில் மட்டும் மென்று விழுங்குவது ஏன்? உண்மைகளை சொல்வதில் என்ன தயக்கம்? விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பற்றிய உண்மைகளை உங்களிடம் சொல்ல வேண்டும். சிறிலங்கா அரசு, ஈபிடிபி இப்படி யார் என்றாலும் உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மையை அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்று எங்களுக்கு பாடம் சொல்லித் தந்தவர்கள் நீங்கள். இந்தக் கைது விவகாரத்தின் உண்மைகளையும் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.
-சபேசன் (24.02.06)
http://www.webeelam.com/Ramraj.htm

vasan