02-24-2006, 02:48 PM
adsharan Wrote:[size=18]சுவிஸ் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ராம்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளைக் கண்டித்து, அங்கு நேற்று முன்தினம் புதன்கிழமை ஐ.நா. அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த துணைப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதி ராம்ராஜை (குடு முஸ்தபா) சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் நூறு பேருடன் இவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார், இவரை வளைத்துப் பிடித்து கைவிலங்கிட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
ஜெனீவாப் பேச்சுகளுக்கு எதிராக இவர் இந்த ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டார்.
ஐரோப்பாவிலுள்ள தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் அங்கு வந்த சுவிஸ் பொலிஸார் ராம்ராஜை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டுக் கொண்டு சென்றனர்.
சுவிஸில் இவர் தங்கியிருந்தபோது போதைவஸ்து கடத்தல் (குடு முஸ்தபா) வியாபாரம், ஆட்கடத்தில், வங்கி அட்டை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட போது இலங்கைக்கு தப்பி வந்து பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் லண்டன் சென்று புகலிடம் தேடியிருந்தார்.
தற்போது லண்டனிலிருந்து ஒட்டுப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வந்த இவர் அங்கு தமிழ் வானொலி நிலையமொன்றை நடத்தி வந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபின் சுவிஸிலிருந்து தப்பிச் சென்ற இவர் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிக இரகசியமாகக் கலந்து கொண்ட போது இவரது சகாக்களினால் சுவிஸ் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபட்டார்.
சுவிஸில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக இவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படவுள்ளதாக <b>சுவிஸ் பொலிஸார் </b>தெரிவித்துள்ளனர்.http://www.thinakural.com/New%20web%20site/web/2006/February/24/Important-4.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

