Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#38
இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடும் தருணம் வந்துவிட்டது

புதுடில்லியில் லடீ;மன் கதிர்காமர்

சமாதான நடவடிக்கைகள் மரணமடையும் கட்டத்தை எட்டிவிட்டதாகவும் இலங்கையின் விவகாரங்களில் இந்தியா ஆர்வம் காட்டுவதற்கான 'நேரம்" வந்துவிட்டதாகவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகருமான லடீ;மன் கதிர்காமர் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியா ஆர்வம் காட்டுவதற்கான நேரம் வருகிறது. அது தனது கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது, அது மறைமுகமாகவோ, தாழ்ந்த மட்டத்திலோ ஏதாவது ஒரு வழியில் எமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சமிக்ஞைகளை அனுப்ப ஆரம்பிக்க வேண்டுமென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.ஏ.என்.எஸ்.க்கு அளித்த பேட்டியில் லடீ;மன் கதிர்காமர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான தன்மை அண்மித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்ததை லடீ;மன் கதிர்காமர் நிராகரித்துவிட்டார்.

மடத்தனமான கதைகள் நிரம்ப இடம் பெறுகின்றன. இது யதார்த்தத்தை அவர் (டிரோன்) முற்று முழுதாக இழந்து விட்டதை வெளிப்படுத்துகின்றது என்றும் கதிர்காமர் கூறியுள்ளார்.

புதுடில்லியில் உள்ள புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கதிர்காமரும் டிரோன் பெர்னாண்டோவும் அங்கு சென்றுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரலில் மாகாண சபைத் தேர்தல்கள் முடிவடைந்த பின் மாகாண அமைச்சுப் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதற்கு குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்ணனியும் இணங்கியிருப்பதாக டிரோன் பெர்னாண்டோ கூறியிருந்தார்.

அத்துடன், சகவாழ்வு ஏற்பாடுகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லவும் சமாதானப் பேச்சுவார்த்தையை அரசாங்கமும் புலிகளும் முன்னெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கு திருமதி குமாரதுங்கவும் ஏற்கனவே விபரமான செயற்திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அதன் பிரகாரம் தேசிய பாதுகாப்பு சபை அமைக்கப்படும் எனவும் அதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் ஜனாதிபதியின் கலந்தாலோசனையின் பேரில் வட கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடு பிரதமர் வசம் இருக்கும் என்றும் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக எந்த விதமான நம்பிக்கையும் இல்லை. தற்போதைய முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு ஜனாதிபதி முன்வைத்த நான்கு யோசனைகளையும் பிரதமர் நிராகரித்துவிட்டார் என்று கதிர்காமர் கூறினார். அவர் (பிரதமர்) நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார். சமாதான நடவடிக்கைகள் முடிவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டது என்றும் கதிர்காமர் கூறினார்.

1987-90 காலப்பகுதியில் இடம்பெற்ற இழப்பீட்டை ஏற்படுத்திய அனுபவத்தை இந்தியா மறந்துவிட வேண்டும் என்று கூறிய கதிர்காமர், இது பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வு. இப்போது முழு விவகாரத்திலும் இந்தியா புதிய கண்ணோட்டத்தைச் செலுத்த வேண்டும். இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், உங்கள் நலன்கள் எங்கிருக்கின்றது. பார்வையைச் செலுத்துங்கள் என்று கதிர்காமர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மற்றும் சிரேர்;ட அரசாங்க அதிகாரிகளை சந்தித்த கதிர்காமர் இலங்கையின் நிலைவரங்கள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

பிராந்தியத்தின் பூகோள அரசியலில் இந்தியா மேலாதிக்க சக்தியாக உள்ளது. நாம் யாவரும் இந்தியாவின் பாதுகாப்பு விடயங்கள் குறித்து மதிப்பளிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் சமாதான யோசனைகளில் ஏற்படும் தாக்கங்கள் இந்தியாவின் நலன் சார்ந்தவை என்பவற்றை கவனிக்க வேண்டும். அவை சமர்;டித் தீர்வுக்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளன என்று கதிர்காமர் கூறினார்.

கொழும்புக்கும், புலிகளுக்கும் இடையில் தீர்வொன்று எட்டப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு, இந்தியாவாலே முடியும். இந்தியா மௌனம் காத்ததால் இலங்கையின் விவகாரங்களில் நோர்வேயும், ஜப்பானும் தலையிடுகின்றன.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகளை இட்டு விடுதலைப் புலிகள் கவலையடைந்துள்ளனர். உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், கொழும்புக்கும் தமக்கும் இடையிலான இராணுவ சமநிலை இழக்கப்பட்டுவிடும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால், முன்னோக்கிச் செல்வதற்கு வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் கதிர்காமர் கூறியிருக்கின்றார்.
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)