02-22-2006, 05:53 PM
மதிப்புக்குரிய பட்டிமன்ற நடுவர்களுக்கும், இதிலே கலந்து கொண்டு ஆணித்துரமாக தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறிய யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்!
புலம்பெயர் வாழ் தமிழ் இளையோகளையும் இணைய ஊடகத்தால் எழும் விளைவுகளையும் பற்றி பேச வந்து, இணைய ஊடகம் ஏற்படுத்தும் பொதுவான தீமைகளையும் எமது அணியிலுள்ளவர்கள் மிகவும் தெளிவாகவும், உண்மைத்தன்மையுடனும் இங்கே விளக்கியதோடு அல்லாமல், அந்த இளையோரில் ஒரு பகுதியினராகிய தமிழர்கள் எவ்வாறு எப்படி பாதிப்புறுகிறார்கள் என்பதையும் தெள்ளத்தெளிவாக இங்கே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
ஒரு குடம் பாலில்ஒரு துளி விசம் சேர்ந்தால் அந்த பால் முழுவதுமே விசமாகிவிடும். ஆனால் தமிழ் இளைஞர் சமூகத்திலே இணைய ஊடகமானது ஒரு துளி விசத்தையா தந்திருக்கிறது. எத்தனையோ ஆயிரமாயிரம் இளைஞர்கள் சிந்தை மழுங்கி, கந்தையாகிச் சீரழிய பல்லாயிரம் வழிகளைக் காட்டி நிற்கிறது இந்த இணைய ஊடகம் என்பதை எமது அணியினர் திறமையுடனும் பொறுப்புணர்வுடனும் இங்கே பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
<b>"எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்... "</b> என்று ஒரு கருத்தை வைத்தார் அனீதா அவர்கள். ஆனால் பல் மொழித் தளங்களில் பயனுள்ள விடயங்களை அறிந்து கொண்டாலும்.. தாய்மொழி அறிவோ, ஆர்வமோ இன்றேல் அதனால் என்ன பயன்? ஒருவனால் அவனது உறவுகளுக்கோ, சமூகத்துக்கோ, இனத்துக்கோ எவ்வித பயன்பாடுமின்றேல் அவன் வாழ்வதால்தான் என்ன பயன்? இணைய ஊடகத்தால் அவன் பெற்ற அறிவானது, அவனுக்கு எந்தளவு பயனை அளிக்கப்போகிறது.. இவர்கள் பெற்ற அறிவானது இவர்களுக்கு ஒரு பதவியையோ அல்லது உத்தியோகத்தையோ பெற்றுத் தந்து, சீதனச் சந்தையிலே அவர்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பேற்படுத்தப் போகிறது. அவ்வளவுதான். ஆக, இதுவும் ஒரு தீமைக்குத்தானே வழிகோலுகிறது?!
<b>"கனம் நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்களின் வாதத்தின் மீதான என்னிடம் உள்ள கேள்விகள் இவை:
* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?
*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?
*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?
நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...
அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...
காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது! "</b> இது வர்ணன் அவர்களது பதிவு.
தாங்கள் கேட்ட எல்லாமே இருந்தன. ஆனால் மற்றவர்களது பார்வையின் முன்னால் இருந்தன. மற்றவர்களால் அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் முற்கொள்ளப்படும் அளவிற்கு இருந்தன. தடுக்க முடியாமல்போகும்போது, 'காவாலி... சண்டியன்.. ' என்ற சொற்பதங்களால் விமர்சிக்கப்பட்டு, தீமைக்குள்ளிருந்து வெளியே வரமுடியாதவனை மற்றவர்களுக்கு இனங்காட்டுவதற்குரிய வழிகள் நிறையவே இருந்தன. அதனால் சமூகமானது வேண்டாதனவற்றை விலத்தி நடக்க வழியிருந்தது. ஆனால் இணையத்தளங்களால் பாதிப்புறுபவர்களைப்பற்றிய விபரங்களும் தகவல்களும் நாலுசுவர்களுக்குள்ளேயே இரகசியமாக்கப்படுவதால்.. ககைளைக் காண்பதென்பது இலகுவான விடயமல்லவே. இப்படியான களைகளால் விளையும் விபரீதம்.. நிகழ்ந்து முடிந்த பின்னால், அதிலிருந்து மீள்வதென்பதும் சுலபமானதல்லவே!!
* இணையத்தளங்களால் இளைஞர்கள் ஒருவித போதை நிலையை அடைகிறார்கள். அதாவது அடிமை நிலையை அடைகிறார்கள். குறிப்பிட்ட சில தளங்கள் இயங்காவிடில் அவர்கள் தவிப்பதை பலரும் அவதானிக்க முடியும்.
* இணையம் இளைஞர்களை ஒரே இடத்தில் நிலைநிறுத்தி சோம்பேறியாக்குகிறது.
* தணிக்கையற்று வக்கிரமான செய்திகளையும் வீடியோ படங்களையும் தருகிறது.
* இணைய ஊடகமானது தேடலற்ற தன்மையை உண்டாக்குகிறது.
* புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது.
* நேரத்தை வீணாக்குகிறது.
* உடலியல் உளவில் சமூகத் தாக்கங்கள் ( பூனைக்குட்டி அவர்களது விரிவான விளக்கங்கள்)
* சுதந்திரம் என்ற பதத்திற்கே பல தவறான அர்த்தங்கள் திட்டமிட்டவாறு இணைய ஊடகங்கள் மூலமாக விதைக்கப்படுதல்
இவ்வாறு பல்வேறு தீமைகளை எமது அணியினர் மிகவும் விளக்கமாக முன்வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் யாபேருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்து, உற்சாகமாக எதிர் கருத்துகளை வைத்து எமது அணியினர் பல உண்மைகளை வெளிக்கொணர வகைசெய்த மாற்று அணியினருக்கும் வாழ்த்து கூறி விடைபெறுகிறேன். நன்றி.
(தாமதத்திற்கு மன்னிக்கவும். இணைய ஊடகம்தான் சீரழிக்கிறதென்றால்.. வருத்தமும் சீரழிக்கப் போகிறேன்னு என்னுடன் சண்டை பிடிக்கிறது. அதனால் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.)

.