02-04-2004, 02:08 AM
Eelavan Wrote:பேச்சு நடை அல்லது நாட்டு வழக்கு என்று கூறப்படும் மொழியின் பேச்சு வடிவம் தான் மொழியின் உண்மையான பயன் பாட்டை எடுத்துக்காட்டுகிறது.நாம் என்ன செய்யிறது? நீங்க சொன்ன மாதி தமிழ்ல மாத்தி எழுதாம ஆங்கிலத்துல எழுதினா புரியல்ல இது தமிழ் களம் நமக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு சொல்றாங்க சரின்னு மாத்தி நல்ல தமிழ்ல எழுதினா அதுவும் புரியல்ல. அப்ப என்ன தான் செய்றது? மிச்சம் கரச்சலா இருக்கில்ல?
நண்பர்களுக்கு நாம் விடும் வேண்டுகோள் இதுதான் காலத்தின் தேவைக்கு ஏற்றமாதிரி தமிழில் ஆங்கிலச்சொற்களை பயன்படுங்கள் ஆனால் கலந்து விடாதீர்கள் ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் அவற்றை அப்படியே பயன்படுத்துங்கள் தயவு செய்து மவுஸ்,கம்பியூட்டர்,பிறின்ரர் என்று தமிழுக்கு மாற்றி எழுதவேண்டாம் அததற்குரிய ஆங்கில உச்சரிப்பில் அப்படியே எழுங்கள்.அதற்காக அச்சுப்பொறி,ஆவணப்பெட்டகம் என்று சங்ககால நடையில் எழுதி மொழியின் பயன்பாடையும் குறைக்க வேண்டாம்

