02-21-2006, 04:56 PM
ஆ.. அரவிந்த்சாமி
நடிகர் அரவிந்த்சாமி, அவரது மனைவி காயத்ரி ஆகியோரின் விவகாரத்து வழக்கில், இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ரோஜா படம் மூலம் நடிக்க வந்தவர் அரவிந்த்சாமி. பம்பாய், மறுபடியும், தளபதி என பல நல்ல படங்களில் நடித்த அரவிந்த்சாமி பின்னர் நடிப்பிலிருந்து கலர் கைலி எல்லாம் கட்டி கிராமத்து சப்ஜெக்ட் செய்து கெட்ட பெயர் வாங்கியதோடு, இது நமக்கு சரி வராது என்று ஒதுங்கி விட்டார். தற்போது தனது சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
இந் நிலையில் அரவிந்த்சாமிக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே ஒரு பெண் நுழைந்துள்ளார். அரவிந்த்சாமிக்கு உதவியாளராக வந்து அப்படியே முக்கியமான இடத்தை அபகரித்துவிட்ட அந்தப் பெண்ணால் அரவிந்த்சாமியின் மனைவி காயத்ரி அவரை விட்டுப் பிரிந்தார் என்கிறார்கள்.
ஆனாலும் மகள்கள் இருவரும் அரவிந்த்சாமியுடனே வசித்தனர்.
சில காலமாக பிரிந்து வாழும் காயத்ரி, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தார். மேலும் கூடுதல் மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த கூடுதல் மனு மீது இன்று நீதிபதி ஜெயபால் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது நடிகர் அரவிந்த்சாமியும், காயத்ரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதி ஜெயபால், இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.அதன்படி, வாரத்தில் நான்கு நாட்கள் தனது மகள்களை பார்த்துப் பேச காயத்ரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2 நாட்கள் அரவிந்த்சாமியின் உறவினர் வீட்டில் 3 மணி நேரமும், அடுத்த 2 நாட்கள் காயத்ரியின் உறவினர் வீட்டில் 3 மணி நேரமும் தனது மகள்களை காயத்ரி சந்திக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
மார்ச் 1ம் தேதி வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்று அறிவித்த நீதிபதி விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார். விசாரணைக்கு வந்திருந்த அரவிந்த்சாமி, அடையாளமே தெரியாத வகையில் மாறிப் போயிருந்தார்.
தலையில் பெரிய வழுக்கையும், தொப்பையுமாக காணப்பட்ட அரவிந்த்சாமியின் முகத்தில் சோக வரிகளைக் காண முடிந்தது.
thats tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>