Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளங் கலைஞன் "நிரு"
#1
வணக்கம் அனைவருக்கும்...

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.

அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள்.

<b>கலாபக் காதலன்</b>
இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள்.

mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள்.

உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே?

<b>நன்றி</b>


Reply


Messages In This Thread
இளங் கலைஞன் &quot;நிரு&quot; - by இளைஞன் - 02-21-2006, 02:27 PM
[No subject] - by sinnakuddy - 02-21-2006, 02:47 PM
[No subject] - by SUNDHAL - 02-21-2006, 02:48 PM
[No subject] - by Vasampu - 02-21-2006, 03:48 PM
[No subject] - by jsrbavaan - 02-21-2006, 05:17 PM
[No subject] - by KULAKADDAN - 02-21-2006, 06:01 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 06:11 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 06:15 PM
[No subject] - by tamilini - 02-21-2006, 10:12 PM
[No subject] - by Selvamuthu - 02-21-2006, 11:56 PM
[No subject] - by Aravinthan - 02-22-2006, 12:52 AM
[No subject] - by Sujeenthan - 02-22-2006, 01:20 AM
[No subject] - by தூயா - 02-22-2006, 07:56 AM
[No subject] - by சந்தியா - 02-22-2006, 11:30 AM
[No subject] - by shanmuhi - 02-22-2006, 03:14 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 04:46 PM
[No subject] - by RaMa - 02-22-2006, 08:35 PM
[No subject] - by அனிதா - 02-22-2006, 10:49 PM
[No subject] - by Snegethy - 02-23-2006, 05:18 AM
[No subject] - by samsan - 02-23-2006, 05:48 PM
[No subject] - by iniyaval - 02-23-2006, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)