Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்?
#1
குக்கரில் பொங்காத பால்


குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை.

பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.

சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.

பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.

http://www.dinamalar.com/
Reply


Messages In This Thread
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? - by Shankarlaal - 02-21-2006, 10:05 AM
[No subject] - by Thala - 02-21-2006, 11:11 AM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:40 PM
[No subject] - by MUGATHTHAR - 02-22-2006, 05:29 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)