Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவளை பிடிக்கும் என்பதால்..!
#1
வேதனையை வாழ்க்கை
ஆக்கிவிட்டவள்
அன்புக்கு அர்த்தம் கேட்டால்
காயங்களை மட்டும்
காரணமின்றி தந்தவள்
காதலுக்கு கருத்து
கேட்டால்...
நேற்று வந்த யாரையே
நேசித்தவளுக்கு...
நெடுநாளாய் நேசத்தை மட்டும்
காட்டிய என் உணர்வு
உறைக்காமல் போனது -என்
துரதிஸ்டமே...

கற்பனையில் என் காதல்
கடந்து சென்று விட்டது
களிப்புடன் -அதற்குள்
கனவை கலைத்ததால்
கழிப்பும் காணாமல் போனது
ஆயிரம் சோதனை தாங்கிய
ஆணிவேர்கள் கூட
அழிந்திடும் நிச்சயம்
காதலில் தோற்றிருந்தால்

ஆனாலும்...
இறைவனிடம் கேட்க
எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி
நிறைவேறா ஆசையினை
முடிவுறா பயணமதை
வாழ்வழிக்கும் காதலை- ஏன்
வரவைத்தாய் என் மனதில்?
சத்தியம் செய்து விட்டதால்
சமர்களம் எனை வெறுத்ததால்
கனடா என்னை அழைத்தது..
கல்வியினை அணைக்க நினைத்ததால்
கல்லூரி என் படிப்பிடமாகியது
படிப்பிடத்தில் நீ
படித்ததால் நான்..
நெடுநாளாய் படிக்காத
படிக்க விரும்பாத
காதல் பாடம் படித்தேன்

தேர்ச்சி தான் பெறவில்லை
ஆனாலும்..
தேறிவிட்டென் வாழ்க்கையில்
தேற்ற முடியாத சோகம்
தேடியே நான் பெற்ற
காதலுக்காய் மன்றாடுகின்றேன்
அவளை மறக்க முடியாமல்
மனது ஒன்றாகையால்
மரணத்தை அழைக்கிறது
தலைவன் தந்த உறுதியால்
தளராமல் இருக்கின்றது
அன்றே என் நண்பன்
நன்றாய் சொன்னான்
நாமெல்லாம் காதல் கொண்டால்
நாடு என்ன செய்யுமென்று

நட்பாய் நானும்
நண்பனாய் பழகியபின்
நானறியாமல் நடுவில்
எப்படி பிறந்தது காதல்..?
விடுத்த வினாவுக்கு
விடையுமில்லை.. -காதலில்
வீழ்ந்த என்னுள்ளத்துக்கு
மீட்சியுமில்லை..
மீள துயர் மட்டும்
மீட்டுகின்றது முகாரி...

மறக்காத காதலால்
மறுக்கிறது மற்றவற்றை
மனம் விரும்பி
தினம் படித்த பாடம்
குணம் மாறி...
தடம் புரண்டு போனது..
போற வழிக்கு புண்ணியமாய்
போகட்டும் தந்துவிடு
தத்தெடுத்த இதயத்தை
கெஞ்சிக் கேட்க்கிறது
என் சுவாச நாளம்...

கொடுக்க மறுப்பவளிடம்..
மன்றாடி என்ன பயனம்..
மிரட்டி என்ன பயன்..
காலை தியாகம் செய்ய
புத்தனல்ல நான்..
அவள் மனம் கொன்று
மணம் புரிய..
கிட்லருமல்ல நான்
ஆனால்...
அவள் மனதில் நான்
கிட்லராகவே இருக்கிறேன்.
புத்தனாகவே அவன்..

போட்டி இருவருக்குள்ளுமல்ல
காதலுக்குள்
கவிதை கூட அவளுக்காய் அல்ல
என் உணர்வினை
உரைத்திட..
வெறுமை கொண்டமனம்
வேற்று வழி நாடிடாது
வென்று வர
புது கவிதை எழுதுகிறேன்..
புன்னகைக்கும் என்
முகம் பார்ப்பவர்க்கு..
நீறு பூத்த நெருப்பாய்
அனல் வீசும்..என்
அசல் சொல்ல விளைந்தேன்

கொஞ்சிப்பேசும் காதலில்
கெஞ்சி கெஞ்சியும்
பேசாமல் இருக்கும்
பேதையை எண்ணினேன்
எனக்கே அலுப்பாய் தோன்றியது
ஒரே வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
கேட்டதால் என்
காதுகளுக்கு கூட சலிப்பு
என் செய்ய
என் இதயம் மட்டும்
இறுக்க பற்றியவளை
காதல் கொள்கின்றது..
இயலுமானவரை...

இன்னும் இன்னும்
அதிகமாகவே காதல் கொள்கிறது
இன்றும் நான் என்னை
மாற்றுகின்றேன்...
அவளுக்கு என்னை
பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல
எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்...

எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அவளை பிடிக்கும் என்பதால்..! - by Nitharsan - 02-21-2006, 06:51 AM
[No subject] - by RaMa - 02-21-2006, 07:13 AM
[No subject] - by இளைஞன் - 02-21-2006, 12:28 PM
[No subject] - by Nitharsan - 02-21-2006, 07:54 PM
[No subject] - by jsrbavaan - 02-21-2006, 08:06 PM
[No subject] - by DV THAMILAN - 02-21-2006, 08:11 PM
[No subject] - by iniyaval - 02-21-2006, 09:42 PM
[No subject] - by Eelam Angel - 02-21-2006, 09:50 PM
[No subject] - by Saniyan - 02-22-2006, 12:14 AM
[No subject] - by கறுப்பன் - 02-22-2006, 01:27 AM
[No subject] - by கறுப்பன் - 02-22-2006, 01:28 AM
[No subject] - by Sujeenthan - 02-22-2006, 01:28 AM
[No subject] - by சந்தியா - 02-22-2006, 11:04 AM
[No subject] - by Vishnu - 02-22-2006, 09:54 PM
[No subject] - by Jenany - 02-23-2006, 09:16 PM
[No subject] - by Nitharsan - 02-24-2006, 06:55 AM
[No subject] - by அருவி - 02-24-2006, 11:50 AM
[No subject] - by renuka - 02-24-2006, 01:33 PM
[No subject] - by hari - 02-24-2006, 03:15 PM
[No subject] - by அருவி - 02-24-2006, 03:42 PM
[No subject] - by hari - 02-24-2006, 03:45 PM
[No subject] - by அருவி - 02-24-2006, 03:54 PM
[No subject] - by sankeeth - 02-24-2006, 03:58 PM
[No subject] - by hari - 02-24-2006, 03:59 PM
[No subject] - by அருவி - 02-24-2006, 04:27 PM
[No subject] - by வடிவேலு - 02-24-2006, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)