02-03-2004, 04:11 PM
காதல்
புரிந்த கொள்ளா
மொழி என்றும்,
ஆணும் பெண்ணும்
கொண்டதே காதல் என்றும்,
கண்கெட்ட கதைபறையும்
சொந்த அன்னையவள் தேசம் விட்டு
தூர தேசதமதில்
சீரழியும் சின்னதுகளுக்கு,
கொஞ்சம் பெரியவை
எடுப்பாய் சொல்லுங்கோ
புதுவையின் கவி கொண்டு
ஓர் நல்லுரை.....!
நேற்று விமானம் ஏறி,
இன்று அகதிச் சீட்டுப் பெற்றோரும்,
கடந்தது மறந்து
கண்டதும் கொண்டு அலையாமல்,
அங்கால் தாய் மண்மீதும்,
காசனுப்பும் கடமைக்கு மேலால்
கொஞ்சம் உளம் கொண்டு
காதல் செய்யுங்கோ....!
கன்னியரே...!
வெளிநாட்டு மாப்பிள்ளை கண்டு
வெளிக்கிட்டு வந்த பின்னர்,
பீற்றுதல் விட்டு,
உள்ள குச்சொழுங்கையெல்லாம்
முன்னம் சைக்கிள் ஓடி,
புழுதியும்
தலைவழி வழியும் நல்லெண்ணையும்
காட்டிய சித்திரக் கோலத்தில்,
மயங்கிய மச்சானும்,
ஆமிவர போராடப் போய்
போராளியாய் வாழும் தேசமதை,
கண நேரமேனும்
காதல் செய்ய மறவாதீர்....!
செல்லடியில் செவிப்பறை கிழிய,
வந்த 'புக்காராவும்'
அடுக்கடுக்காய் 'ரொக்கட்' அடிக்க,
வானம் கிழித்து வரும்
சுப்பர் சொனிக்கும்,
இரத்மலான இருந்து வந்த
சகடையும்,
செய்த தொந்தரவு கடந்து,
முந்நூறு ரூபாய்க்கு
அரை லீற்றர் மண்ணெய் வாங்கி,
உப்பு விளக்கும் கூட வச்சு,
பங்கருக்குள்ள புத்தகம் ஒழிச்சு வச்சு,
படித்து டாக்குத்தரான
எங்கட அண்ணாமாரும்
இஞ்சினியரான தம்பிமாரும்
பட்டதாரிகளான
அக்காமாரும் தங்கைமாரும்,
தூர தேசத்தில்
நல்ல சம்பளமாம்
காராம் வீடாம் வசதியாம் என்று
அலைய விளைந்தாலும்,
பகட்டோடு அடிபட்டுச் செல்லாமல்
பக்குவமாய் தாய் மண்ணையும்
காதல் செய்ய மறவாதீங்கோ.....!
இன்னும் கொஞ்சப் பேர்....
தாயகம் அடிபட்டு
அடிமைப்பட்டுக் கிடக்க,
உள்ளத அமுக்குவம் என்று
உள்ள எதிர்கள் கால் தடவி
அரசியல் என்று
ஏதோ அரைகுறை நடத்தினவையும்,
நீங்களும் பிறந்தது முதல்
துரோகித்தது வரை
சொந்த அன்னையவள்
மடிதான் என்று,
இன்றாவது சிந்தித்துத் தெளிந்து,
அன்னையவள் மீதும்
உம் அன்புச் சகோதரன் மீதும்
காதல் கொள்ள மறவாதீர்.....!
கடைசியில
எனக்கும் தான் ஒரு வரி....
நீரும்
மற்றவைக்கு உபதேசிக்கிறது விட்டு,
எழுதுக்களால் மட்டும்
பேசிவிட்ட திருப்தியில்,
கண் மூடிக்கிடக்காமல்
அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும்
அன்னையவள் மண்ணதை
மனதெங்கும் நிறைத்து வைத்து
பூஜித்து நில்லும்....!
ஈழத்துக் கவியவன் புதுவையின் வரி தந்த தெம்பில் ஏதோ உளறி இருக்கிறன்...வாசிக்கிறவை பிழை கண்டால் பொறுத்துக் கொண்டு அன்னை மண்ணைக் காதலிக்க மறந்திடாதேங்கோ.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புரிந்த கொள்ளா
மொழி என்றும்,
ஆணும் பெண்ணும்
கொண்டதே காதல் என்றும்,
கண்கெட்ட கதைபறையும்
சொந்த அன்னையவள் தேசம் விட்டு
தூர தேசதமதில்
சீரழியும் சின்னதுகளுக்கு,
கொஞ்சம் பெரியவை
எடுப்பாய் சொல்லுங்கோ
புதுவையின் கவி கொண்டு
ஓர் நல்லுரை.....!
நேற்று விமானம் ஏறி,
இன்று அகதிச் சீட்டுப் பெற்றோரும்,
கடந்தது மறந்து
கண்டதும் கொண்டு அலையாமல்,
அங்கால் தாய் மண்மீதும்,
காசனுப்பும் கடமைக்கு மேலால்
கொஞ்சம் உளம் கொண்டு
காதல் செய்யுங்கோ....!
கன்னியரே...!
வெளிநாட்டு மாப்பிள்ளை கண்டு
வெளிக்கிட்டு வந்த பின்னர்,
பீற்றுதல் விட்டு,
உள்ள குச்சொழுங்கையெல்லாம்
முன்னம் சைக்கிள் ஓடி,
புழுதியும்
தலைவழி வழியும் நல்லெண்ணையும்
காட்டிய சித்திரக் கோலத்தில்,
மயங்கிய மச்சானும்,
ஆமிவர போராடப் போய்
போராளியாய் வாழும் தேசமதை,
கண நேரமேனும்
காதல் செய்ய மறவாதீர்....!
செல்லடியில் செவிப்பறை கிழிய,
வந்த 'புக்காராவும்'
அடுக்கடுக்காய் 'ரொக்கட்' அடிக்க,
வானம் கிழித்து வரும்
சுப்பர் சொனிக்கும்,
இரத்மலான இருந்து வந்த
சகடையும்,
செய்த தொந்தரவு கடந்து,
முந்நூறு ரூபாய்க்கு
அரை லீற்றர் மண்ணெய் வாங்கி,
உப்பு விளக்கும் கூட வச்சு,
பங்கருக்குள்ள புத்தகம் ஒழிச்சு வச்சு,
படித்து டாக்குத்தரான
எங்கட அண்ணாமாரும்
இஞ்சினியரான தம்பிமாரும்
பட்டதாரிகளான
அக்காமாரும் தங்கைமாரும்,
தூர தேசத்தில்
நல்ல சம்பளமாம்
காராம் வீடாம் வசதியாம் என்று
அலைய விளைந்தாலும்,
பகட்டோடு அடிபட்டுச் செல்லாமல்
பக்குவமாய் தாய் மண்ணையும்
காதல் செய்ய மறவாதீங்கோ.....!
இன்னும் கொஞ்சப் பேர்....
தாயகம் அடிபட்டு
அடிமைப்பட்டுக் கிடக்க,
உள்ளத அமுக்குவம் என்று
உள்ள எதிர்கள் கால் தடவி
அரசியல் என்று
ஏதோ அரைகுறை நடத்தினவையும்,
நீங்களும் பிறந்தது முதல்
துரோகித்தது வரை
சொந்த அன்னையவள்
மடிதான் என்று,
இன்றாவது சிந்தித்துத் தெளிந்து,
அன்னையவள் மீதும்
உம் அன்புச் சகோதரன் மீதும்
காதல் கொள்ள மறவாதீர்.....!
கடைசியில
எனக்கும் தான் ஒரு வரி....
நீரும்
மற்றவைக்கு உபதேசிக்கிறது விட்டு,
எழுதுக்களால் மட்டும்
பேசிவிட்ட திருப்தியில்,
கண் மூடிக்கிடக்காமல்
அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும்
அன்னையவள் மண்ணதை
மனதெங்கும் நிறைத்து வைத்து
பூஜித்து நில்லும்....!
ஈழத்துக் கவியவன் புதுவையின் வரி தந்த தெம்பில் ஏதோ உளறி இருக்கிறன்...வாசிக்கிறவை பிழை கண்டால் பொறுத்துக் கொண்டு அன்னை மண்ணைக் காதலிக்க மறந்திடாதேங்கோ.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

