02-03-2004, 01:29 PM
இளைஞர் சமுதாயம் சீரழிவதற்கு
அவர்களது பெற்றோரே காரணமாவர்
பேராசிரியர் குமாரவடிவேல் தெரிவிப்பு
இன்றைய இளைஞர் சமுதாயம் சீரழிந்து செல்வதற்குக் காரணம் அவர் களின் பெற்றோர்களே.
- இப்படிக் குற்றஞ்சாட்டினார் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடா திபதி பேராசிரியர் கே.குமாரவடிவேல்.
சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நடத்திய ஆன்மீக எழுச்சி விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக்கூறினார். நற்பணிமன் றத்தைச் சேர்ந்த செல்வி சிவவதனி கோபால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் மேலும் கூறி யதாவது:-
இன்றைய இளைய தலைமுறைக்கு ஆன்மீக வழிமுறைகள் தெரியாது. அவர்களின் பெற்றோரும் அவர்களுக்கு அதனைச் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆன்மீக வகுப்புக்களுக்குப் பிள்ளை களை அனுப்புவதுமில்லை. ஏதோ படித்துப் பட்டம்பெற்றால் போதும் என எண்ணுகிறார்கள். ஓர் ஆசிரியருடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும், பொது இடங்களில் பெரியவர்களை எப்படிக் கனம் பண்ணவேண்டும் போன்ற ஒழுக்க நெறிகள் எதனையுமே அநேக பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை.
பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர் களாக வளர்க்கும் சக்தி, பெற்றோ ருக்கு உண்டு. ஆனால், அந்த சக் தியை அவர்கள் எவ்வளவு து}ரம் பிர யோகிக்கிறார்கள் என்பது கேள்விக் குரியதாகியுள்ளது. இதனால் இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்து போகிறது. இளைஞர்கள் ஞானமும் வீரமும் உள் ளவர்களாகத் திகழவேண்டும். அதற்கு எமது இந்துசமயமும் ஆலயங்களும் வழிகாட்டி நிற்கின்றன. ஆனால், மன்னர் ஆட்சி முறை நீங்கி பிற நாட்டு ஆட்சிமுறைகள் எமது நாட் டிலும் ஏற்படுத்தப்பட்ட காலம் முதல் ஆலயங்கள் பணம் படைத்தோர் கைக ளில் சிக்கிக் கொண்டன.
எமது இந்துசமயம் வீழ்ச்சி அடை வதற்கு அது ஒரு காரணமாக அமைந் தது. அர்ச்சனைச் சீட்டு மற்றும் உபய காரர் முறைகள் எமது ஆலயங்களை பணம் திரட்டும் மையங்களாக மாற் றின. இந்த நேரத்திலேதான் எமது சமயம் குறித்த விழிப்புணர்வை உல கம் எங்கும் ஏற்படுத்தும் பணியில் சுவாமி விவேகானந்தர் ஈடுபட்டார். இந்துசமயத்திலே புதைந்து கிடந்த ஆன்மீகச் செல்வத்தை வெளிக்கொண்டு வந்து உலகம் எல்லாம் அறியச் செய் தார்.
- இப்படி பேராசிரியர் கே.குமார வடிவேல் கூறினார். நிகழ்வில் முன் னதாக சுவாமி விவேகானந்தர் நற் பணிமன்ற ஆலோசகர் டாக்டர் ஆர். சிவசங்கர், திருநெல்வேலி இராமகிரு~; ணமி~ன் தலைவர் இ.ராஜாமகேந் திரசிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர். நல்லை ஆதீன முதல்வர் சிறீலசிறீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நன்றி: உதயன் (03.02.04)
இது எப்படி ... :wink: :mrgreen: