02-20-2006, 11:05 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>\"நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்</b>"</span>
சந்திரிகா கூறுகிறார்`முன்னாள் ஜனாதிபதி' என்றல்ல ஜனாதிபதியென்றே தன்னை அழைக்க வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஹொரகொல்ல வளவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் மிக காரசாரமாகத் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லையென்றும் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை ஹொரகொல்லவிற்கு அழைத்து அங்கு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
என்னை, ஜனாதிபதியென்றே அழைக்க வேண்டும் `முன்னாள்' என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக்கூடாது. தற்போது என்னை யாரும் மதிப்பதில்லை. இவ்வாறு நடந்துகொள்வது பிழையானது எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, இதற்கு பதிலளிக்கையில்;
ஜனாதிபதி பதவி பறிபோன பின் முன்னாள் என்று தான் அழைப்பது உலக நியதி. அதனை மாற்ற முடியாது எனத் தெரிவிக்க, உலகம் தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும். வாயைப் பொத்திக் கொண்டிருங்களென சந்திரிகா கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிந்து வெளியேறியதும் வாழ்த்துக் கூற ஒருவரும் வரவில்லை. ஆனால், டி.பி. விஜேதுங்க வெளியேறிய போது `கியூ'வில் போனார்கள் எனவும் சந்திரிகா தெரிவிக்க அக்கூட்டத்திலிருந்த எம்.பி.யொருவர் எழுந்து, நீங்கள் இன்னமும் ஓய்வுபெறவில்லையே, ஓய்வு பெற்ற பின்னரே வாழ்த்துக் கூற வேண்டுமெனக் கூற, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.
என் கட்சிக்காரர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். மகிந்தவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தால் என்னை நேரடியாக அவருக்கு எடுக்கச் சொல்கிறார் எனத் தெரிவித்த சந்திரிகா, தற்போது எனக்கு லசந்த விக்கிரமதுங்காக்கள் தான் உதவி செய்கிறார்கள்.
அவர்கள் எனது சிறந்த நண்பர்கள் என்று இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் சந்திரிகா வசைபாடிக் கொண்டிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுந்துசெல்ல முற்பட்டனர்.
இதையடுத்து, உடனடியாக தனது பேச்சை முடித்துக்கொண்ட சந்திரிகா, கலந்துகொண்டவர்களுக்கு தனது கைகளினாலே உணவு பரிமாறியுமுள்ளார்.
http://www.thinakural.com/New%20web%20site...ry/20/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>