Yarl Forum
நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள் (/showthread.php?tid=785)



நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள் - வினித் - 02-20-2006

<span style='font-size:25pt;line-height:100%'><b>\"நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்</b>"</span>

சந்திரிகா கூறுகிறார்`முன்னாள் ஜனாதிபதி' என்றல்ல ஜனாதிபதியென்றே தன்னை அழைக்க வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஹொரகொல்ல வளவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் மிக காரசாரமாகத் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லையென்றும் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை ஹொரகொல்லவிற்கு அழைத்து அங்கு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

என்னை, ஜனாதிபதியென்றே அழைக்க வேண்டும் `முன்னாள்' என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக்கூடாது. தற்போது என்னை யாரும் மதிப்பதில்லை. இவ்வாறு நடந்துகொள்வது பிழையானது எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, இதற்கு பதிலளிக்கையில்;

ஜனாதிபதி பதவி பறிபோன பின் முன்னாள் என்று தான் அழைப்பது உலக நியதி. அதனை மாற்ற முடியாது எனத் தெரிவிக்க, உலகம் தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும். வாயைப் பொத்திக் கொண்டிருங்களென சந்திரிகா கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் முடிந்து வெளியேறியதும் வாழ்த்துக் கூற ஒருவரும் வரவில்லை. ஆனால், டி.பி. விஜேதுங்க வெளியேறிய போது `கியூ'வில் போனார்கள் எனவும் சந்திரிகா தெரிவிக்க அக்கூட்டத்திலிருந்த எம்.பி.யொருவர் எழுந்து, நீங்கள் இன்னமும் ஓய்வுபெறவில்லையே, ஓய்வு பெற்ற பின்னரே வாழ்த்துக் கூற வேண்டுமெனக் கூற, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.

என் கட்சிக்காரர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். மகிந்தவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தால் என்னை நேரடியாக அவருக்கு எடுக்கச் சொல்கிறார் எனத் தெரிவித்த சந்திரிகா, தற்போது எனக்கு லசந்த விக்கிரமதுங்காக்கள் தான் உதவி செய்கிறார்கள்.

அவர்கள் எனது சிறந்த நண்பர்கள் என்று இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் சந்திரிகா வசைபாடிக் கொண்டிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுந்துசெல்ல முற்பட்டனர்.

இதையடுத்து, உடனடியாக தனது பேச்சை முடித்துக்கொண்ட சந்திரிகா, கலந்துகொண்டவர்களுக்கு தனது கைகளினாலே உணவு பரிமாறியுமுள்ளார்.

http://www.thinakural.com/New%20web%20site...ry/20/index.htm


- கறுப்பன் - 02-20-2006

என்னாச்சு சந்திரிகாவுக்கு????

Confusedhock: Confusedhock: Confusedhock:


- Thala - 02-20-2006

கறுப்பன் Wrote:என்னாச்சு சந்திரிகாவுக்கு????

Confusedhock: Confusedhock: Confusedhock:

மறை கழண்டு போச்சாம்....! அங்கொடையில வீடு பாக்கவேணும்போலகிடக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 02-20-2006

Quote:என் கட்சிக்காரர்கள் <b>என்னை கைவிட்டுவிட்டார்கள்</b>. மகிந்தவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தால் என்னை நேரடியாக அவருக்கு எடுக்கச் சொல்கிறார் எனத் தெரிவித்த சந்திரிகா <b>தற்போது எனக்கு லசந்த விக்கிரமதுங்காக்கள் தான் உதவி </b>செய்கிறார்கள்.


என்னவெண்டாலும் ஒரு பெம்பிளை இப்பிடிச் சொல்வது கொஞ்சம் கூட நல்லதில்லை


- jeya - 02-20-2006

அவவுக்கு கதிர்காமரின்ர ஆவி பிடிச்சிருக்கென்று :oops: தெரியாதோ ?? உங்களுக்கெல்லாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 02-20-2006

jeya Wrote:அவவுக்கு கதிர்காமரின்ர ஆவி பிடிச்சிருக்கென்று :oops: தெரியாதோ ?? உங்களுக்கெல்லாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதைச்சொல்லுறீங்களா?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://www.youtube.com/w/chandrika%20muki?...QFPazTGUk&eurl=


- jsrbavaan - 02-20-2006

ஓம் ஓம் அவா அண்டைக்கு சந்திரிகாமுகி ஆகியிருக்கிறா போல


- tamilini - 02-20-2006

ஐயோ பாவம்.. பதவி பைத்தியம் என்றது இது தானோ..?? :evil:


- கறுப்பன் - 02-20-2006

Thala Wrote:
கறுப்பன் Wrote:என்னாச்சு சந்திரிகாவுக்கு????

Confusedhock: Confusedhock: Confusedhock:

மறை கழண்டு போச்சாம்....! அங்கொடையில வீடு பாக்கவேணும்போலகிடக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-20-2006

ஹும் சந்திரிகாவிற்கு இன்னும் அரசியல் அதிகார ஆசை போகவில்லை போலிருக்கு ....


- Selvamuthu - 02-20-2006

ஆமாம் இந்த சந்திரிகா அந்த "சந்திரிகாமுகியைப்" பார்த்திருக்கிறார்போல் இருக்கின்றது.

இவர் ஏதாவது திட்டங்கள் போட்டு அவற்றை நிறைவேற்றி மீண்டும் இன்னொரு வழியில் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


- kuruvikal - 02-20-2006

ஆசைப்படுறாவெல்லோ.ஜனாதிபதியாவே இருக்கட்டும்..வீட்டுக்கு.. விடுங்களன்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- நர்மதா - 02-20-2006

பரம்பரை சொத்தை எப்படி விட்டுக் கொடுப்பது என நினைக்கிறார் போல ம் தம்பியை உள்ளிளுக்க பார்த்தார் முடியவில்லை அந்த விரக்தியோ தெரியவில்லை

சும்மா இருக்க காசு வருகிறது தானே பின்பு என்ன செய்வது


- Aaruran - 02-21-2006

[size=14]நான் ஒன்றும் சந்திரிகாவின் அபிமானியுமல்ல, அவருக்கு வக்காளத்து வாங்கவுமில்லை, அம்மையாரின் பதவியாசையும், தற்புகழ்ச்சியும், தன்னுடைய சுய நலத்துக்கும், பதிவெறிக்காகவும் நாட்டைக்குட்டிச் சுவராக்கியதும், எத்தனையோ அப்பாவித்தமிழர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தமையையும் நான் மறக்கவில்லை.

<b>அவர் நான் "முன்னாள் ஜனாதிபதியில்லை" என்று கூறியிருந்தால் அது தவறானது ஆனால் அவர் தன்னை அழைக்கும் போது முன்னாள் ஜனாதிபதியென்று அழைக்காமல் "ஜனாதிபதி" என்று மட்டும் அழைக்கச் சொன்னதில் எந்தவித தவறுமில்லை</b>. அதுவே மரபு(protocol)மாகும். அவரைப் பற்றி நாங்கள் எழுதும் போது முன்னாள் ஜனாதிபதி என்று எழுதலாம், ஆனால் அவருடன் நேரடியாக உரையாடும் போது, அவர் சாகும் வரை, ஜனாதிபதி அம்மையார் அல்லது ஆங்கிலத்தில் .

நீங்கள் அமெரிக்கத் தொலைக்காட்சி பார்த்தீர்களானால் தெரியும், பில் கிளின்ரன் இப்பொழுது ஜனாதிபதியில்லை. தொலைக்காட்சியை நடத்துபவர் என்றல்ல.

உதாரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்க கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடிச் சுட்டுக் கொல்லப்பட்ட மாட்டின் லூதர் கிங் அவ்ர்களின் துணைவியாரும், தன்னுடைய கணவனின் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவருமாகிய திருமதி. கொறட்டா ஸ்கொட் கிங் இன் ஈமச்சடங்குகளுக்கு அஞ்சலி செலுத்த, <b>ஜனாதிபதிகள் ஜிம்மி கார்ட்டர், ஜோர்ஜ் புஸ் Sr., பில் கிளின்ரன், இன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சும் </b>வருகை தந்திருந்தார்கள். ஒவ்வொரு பேச்சாளரும் அவர்களை <b> அவர்களின் பெயருக்கு முன்னால் President " என்று அழைத்தார்களே தவிர, "Former President" என்றல்ல. அது தான் உண்மையான பண்பாடும் மரபுமாகும்.</b>

அதனால் ஜனாதிபதி சந்திரிகா தன்னுடன் நேரடியாக உரையாடும் போது <b>தொடர்ந்தும் "ஜனாதிபதி" என்று அழைக்கச் சொன்னதில் எந்தவிதத் தவறுமில்லை.</b> உலகநாடுகளிலும், அதிலும் உலகின் முதலாவது ஜனநாயக நாடான அமெரிக்க மரபின் படியும், சந்திரிகாவைத் தொடர்ந்து ஜனாதிபதியென்று அழைப்பது தான் முறையானதாகும்[/color]


- Thala - 02-21-2006

விளக்கத்துக்கு நண்றிகள் ஆரூரன். தெரியாத விடயம் அல்லது தெரிந்தும் கவனிக்காமல் விட்ட விடயம்....

ஆனால் இலங்கையில் மரபுக்கு உட்பட்டு எதுவும் நடப்பதில்லை எங்களுக்கு சொந்தமாய் நாடு வரும்வரை அரச மரபுகளில் ஆர்வம் வருவதும் இல்லை.... அதனால் அது எமக்கு புரிவதும் இல்லை..!

அதுசரி.... முன்னாள் ஜனாதிபதிகள் பதவிக்காலம் முடிந்தபின் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் மரபாக இருந்திருக்கிறது. ( மரபு என்பது ஏற்படுத்துவதுதானே) இப்போ அது மாறியபோது அம்மையாருக்கு பைத்தியம் எண்றுதான் எண்ணத்தோண்றுகிறது...!