06-16-2003, 04:28 PM
எதுக்கும் யாழின் விளக்கத்தை சரியாக உள்வாங்குங்கோ.. வரும்.. மற்றது உங்களுடைய பிறவுசரிலும் தமிழுக்கு மாற்றவேணும்.. முதலில் எனக்கும் வரவில்லை.. பிறகு பிறவுசரில் 'ஒப்சன்" போய் போன்ற்ஸ் போய்.. தமிழை ஒருக்கா அமத்தினேனா.. வந்தீட்டுது.. அதற்குப் பிறகும் ஒரு தொல்லை.. இரட்டைக் கொம்பு, ஒற்றைக் கொம்பு போட பொத்தானை அழுத்தினால்.. அதுகளை காணேல்லை.. கொஞ்சநேரம் தலையை பிச்சுக்கொண்டு, யாழுக்கும் சுரதாக்கும் அலைஞ்சதில் கொஞ்ச முடி போட்டுது.. அந்த கொம்புகளை அழுத்திவிட்டு, அவை கண்ணுக்கு தெரியாவிட்டாலும்... அதற்கடுத்து வரும் எழுத்தை அழுத்தும்போது எல்லாமே தெரிகிறதே.. மிகவும் சுலபமான செயல்முறை.. பாமுனியை தொடேக்கை பயந்துகொண்டுதான் தொட்டன்.. இப்ப நீச்சல் அடிக்கிறேன்.. சுரதாவுக்கும் மோகனுக்கும் நன்றி கூறவேண்டும்.. இனி மோகனிடம் ஒரு கேள்வி.. இந்த முறையில் மெயில் அனுப்பும்போது.. அதைப் பெறுபவர் எவ்வித தடங்கலுமின்றி வாசிக்க முடியுமா? அல்லது அவரும் தனது கணனியில் இந்த செயலியையோ அல்லது பிறவுசரில் 'தமிழ்" என்ற ஆணையையோ கொடுக்கவேண்டுமா?
.

