02-20-2006, 12:12 AM
கொஞ்சம் கொஞ்சம் அந்த நோயாளிகளின் மனநிலைக்கு சென்று பாருங்கள்..நிச்சயம் வாழ்வே மாயமாகத்தான் தெரியும்..! எப்படியாயினும் ஏதுமறியா சிசுக்களின் குழந்தைகளின் சிறுவர்களின் வாழ்வை பாதியில் பறிப்பது போல் கொடுமை எதுவுமில்லை..! மனதார அந்தச் சிறுவனின் உயிர்பிழைக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெற பிரார்த்திப்பதே அனைவரும் தற்போது செய்யக் கூடிய உதவி..! பிரார்த்தனைகள் நோயக் குணமாக்குமா என்று கேட்கலாம்...ஆனால் இவ்வளவு உள்ளங்கள் தங்களோடு இருக்கின்றனவே என்ற செய்தி போதும் அவர்கள் பெற்றுள்ள துன்பங்களில் இருந்து கொஞ்சம் என்றாலும் மனதால் ஆறுதல் அடைய..! அதுவே முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உதவியளிக்கும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

