Yarl Forum
'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: 'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா? (/showthread.php?tid=798)

Pages: 1 2


'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா? - Shankarlaal - 02-19-2006

<b>'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா திண்டுக்கல் சிறுவன்?</b>
பிப்ரவரி 19, 2006

சென்னை:

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலியாக மருத்துவ ரீதியாக சூர்யா பிரபாகரனுக்கு உதவ வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்வந்துள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. முத்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் முத்துப் பாண்டிக்கு, தனலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர் ரத்த சோகை காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார். இதுதவிர சூர்யா பிரபாகரன் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சூர்யா பிரபாகரனுக்கும் ரத்த சோகை உள்ளது. மேலும், ரத்தம் உறையாமை பிரச்சினையும் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளன. இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறான் சூர்யா. சிகிச்சைக்காக பெங்களூர், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மகனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தார் முத்து. இருப்பினும் நாளுக்கு நாள் சூர்யாவின் நிலை மோசமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு மேல் செலவழித்து சிகிச்சை செய்ய முத்துவிடமும் பண வசதி இல்லை.

மேலும், உடலில் வெட்டுக் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் ஏதும் ஏற்பட்டால் ரத்தம் தொடர்ந்து நிற்காமல் வெளியேறும், உயிருக்கே ஆபத்தாக அது முடியும் என்பதால் சூர்யாவைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் முத்துப் பாண்டியின் குடும்பம் உள்ளது. மேலும், ரத்த சோகைக்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

இதனால் என்ன செய்வது என்று புரியாமல், தனது மகனை கருணைக் கொலை செய்ய முத்து முடிவெடுத்தார். இதையடுத்து சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்து தன்னிடம் உடலை ஒப்படைக்குமாறு கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் கொடுமை என்னவென்றால், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சூர்யா பிரபாகரனே தனது கைப்பட எழுதியுள்ளான். முத்துவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் சூர்யாவே கருணைக் கொலைக்கான மனுவை எழுதியுள்ளான்.

முத்துப் பாண்டியின் நிலையை அறிந்த, பிரபல வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிக் கரம் நீட்டியுள்ளது. ரத்த சோகைக்கான சிகிச்சையில், தெற்காசியாவிலேயே மிகவும் பிரபலமான மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைத் தரவும், சிறந்த சிகிச்சை அளிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக வேலூர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதன் மூலம் சூர்யாவின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும், அவனது கருணைக் கொலை தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தற்ஸ்டமிழ்


- Shankarlaal - 02-19-2006

<b>இச்சிறுவன் மிக விரைவில் குணமடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டுகிறேன்.</b>


- AJeevan - 02-19-2006

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செயல் பாராட்டப்படவும் நன்றியறிதலோடு நினைவுகூரவும் தகுந்தது.

<b>சிறுவனது உயிருக்காக நாமும் பிராத்திப்போம்.</b>

இதை யாராவது மத மாற்றத்துக்கென்று ஊர்வலம் போகாமல்
ஒரு உயிரைக் காப்பதற்கு என்று மெச்சினால் போதும்.


- kuruvikal - 02-19-2006

சிறுவனின் உயிர்காக்க.. முயற்சியாளர்களின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுவோமாக..! Idea


- Vasampu - 02-19-2006

உண்மையில் அந்த தந்தையும் தனயனும் கருனைக் கொலைக்கு மனு செய்யும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சிந்திக்கும் போதே நெஞ்சு கனக்கின்றது. இதற்கெல்லாம் ஆறுதலளிப்பது போல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செயல் அமைந்திருப்பது உளமார அவர்களைப் பாராட்ட வைக்கின்றது.


- Shankarlaal - 02-19-2006

<b>இதனை 190 பேர் பார்வயிட்டுள்ளனர்..நன்றி ....வரவேற்கிறேன்... ஆனால் பரிதாபம் மூன்றுபேர் மட்டும் அவன் குணமடையவேண்டுமென்று வாழ்த்தி உள்ளனர்.... இந்த அளவுக்கு இலங்கைதமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா??????????????</b>


- DV THAMILAN - 02-19-2006

சிறுவன் குணமடைய என் வாழ்த்துக்கள்.....

இந்த அளவுக்க இலங்கைத்தமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா என்பது மொத்த தமிழரையும் பிரித்து பார்பது போல் உள்ளது. தயவு செய்து இனி பிரித்து காட்டுவதை தவிர்த்துகொள்ளுங்கள் (எனது கருத்து)


- aathipan - 02-19-2006

Shankarlaal Wrote:<b>இதனை 190 பேர் பார்வயிட்டுள்ளனர்..நன்றி ....வரவேற்கிறேன்... ஆனால் பரிதாபம் மூன்றுபேர் மட்டும் அவன் குணமடையவேண்டுமென்று வாழ்த்தி உள்ளனர்.... இந்த அளவுக்கு இலங்கைதமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா??????????????</b>

பிரார்த்தனைகள் எழுத்து மூலம் தான இருக்க வேண்டுமென்பதில்லையே. உண்மையான பிரார்த்தனை மனசுக்குள்தானே செய்கிறோம்... நிச்சயமாக எல்லோரும் பிரார்த்தித்திருப்பார்கள்.


- தாரணி - 02-19-2006

சிறுவன் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.


- yarlpaadi - 02-19-2006

சிறுவன் நலமாக இருக்க இறைவன் அருள் புரிவாராக.........


- Sujeenthan - 02-19-2006

இவ்வாறு ஒவ்வொரு நாளும் எத்தனை சம்பவங்கள் நடைபெறுகின்றன. எங்களால் அவர்களுக்காக பிரார்த்திக்கதான் முடியும். அதையாவது ஒழுங்காய் செய்வோம்.


- kuruvikal - 02-20-2006

கொஞ்சம் கொஞ்சம் அந்த நோயாளிகளின் மனநிலைக்கு சென்று பாருங்கள்..நிச்சயம் வாழ்வே மாயமாகத்தான் தெரியும்..! எப்படியாயினும் ஏதுமறியா சிசுக்களின் குழந்தைகளின் சிறுவர்களின் வாழ்வை பாதியில் பறிப்பது போல் கொடுமை எதுவுமில்லை..! மனதார அந்தச் சிறுவனின் உயிர்பிழைக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெற பிரார்த்திப்பதே அனைவரும் தற்போது செய்யக் கூடிய உதவி..! பிரார்த்தனைகள் நோயக் குணமாக்குமா என்று கேட்கலாம்...ஆனால் இவ்வளவு உள்ளங்கள் தங்களோடு இருக்கின்றனவே என்ற செய்தி போதும் அவர்கள் பெற்றுள்ள துன்பங்களில் இருந்து கொஞ்சம் என்றாலும் மனதால் ஆறுதல் அடைய..! அதுவே முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உதவியளிக்கும்..! Idea


- கறுப்பன் - 02-20-2006

Quote:Shankarlaal எழுதியது:
இதனை 190 பேர் பார்வயிட்டுள்ளனர்..நன்றி ....வரவேற்கிறேன்... ஆனால் பரிதாபம் மூன்றுபேர் மட்டும் அவன் குணமடையவேண்டுமென்று வாழ்த்தி உள்ளனர்.... இந்த அளவுக்கு இலங்கைதமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா??????????????


பிரார்த்தனைகள் எழுத்து மூலம் தான இருக்க வேண்டுமென்பதில்லையே. உண்மையான பிரார்த்தனை மனசுக்குள்தானே செய்கிறோம்... நிச்சயமாக எல்லோரும் பிரார்த்தித்திருப்பார்கள்.
உங்கள் கோபம் மனிதாபிமானத்தின் பால் பட்டது.....நிச்சயமாக கருத்து எழுதாதவர்கள்கூட மனதால் அந்த சிறுவனுக்காக பிரார்த்திப்பார்க்ள்.

நாமும் அந்த சிறுவனுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிண்றோம்.

மேலும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செயல் பாராட்டப்படவும் நன்றியறிதலோடு நினைவுகூரவும் தகுந்தது


- RaMa - 02-20-2006

சிறுவன் முழுமையாக குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
அத்துடன் வேலூர் கிறிஸ்தவ கல்லூரிக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.


- கந்தப்பு - 02-20-2006

சிறுவன் குணமடைய பிரார்த்திக்கிறேன்


- adsharan - 02-20-2006

சிறுவன் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்


- sri - 02-20-2006

இச்சிறுவன் மிக விரைவில் குணமடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டுகிறேன்.


- Luckyluke - 02-20-2006

பிரார்த்தனைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.... இருந்தாலும், குணமடைய பிரார்த்திக்கிறேன்


- jsrbavaan - 02-20-2006

சிறுவன் சூர்யா குணமடைய எல்லோரும் பிரார்த்திப்போம்


- Niththila - 02-20-2006

சிறுவன் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.