Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவி உதவி வேண்டும்
#17
வர்ணனின் வர்ணனையை ஒக்குமோ என்வரிகள்? விடுபட்டிருந்த வரிகளுக்கு கவிபோல் சில வடித்தேன். பிடித்திருந்தால் ஏடுத்துக்கொள்ளுங்கள். நேரமுண்டோ தெரியவில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை.

நன்றி.

<b>தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம்:</b> தமிழும் தாயும் ஒன்று. இது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு. தாயை மறந்தவர்களை மன்னிக்கமுடியாது. தமிழை வளர்த்தவர்களை வாழ்த்தாமல் இருக்கமுடியாது. அந்தப் பெரியாரை, அவர் வளர்த்த தமிழெடுத்தே வாயார வாழ்த்துவோம் வாருங்கள்.

<b>உழவனின் பாட்டு: </b>ஏர் பிடிக்கும் கைகளைத் தொழுவோம். அன்னமிடும் உள்ளங்களைத் தொழுவோம். பார் முழுதும் பஞ்சமின்றி, பட்டினியின்றி வாழவைக்கும் உழவர்களைத் தொழுவோம். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் இசையோடு கலந்த ஒண்தமிழ் வரிகளை நாமெல்லாம் ஒன்றாய் கேட்போம்.

<b>முதல் வீடு </b>(தமிழ் நாடகம்): முத்தமிழ்களில் ஒன்று நாடகத்தமிழ். செத்துவிடும் தமிழ் இனி என்பவர்ககெல்லாம் நல்ல செருப்படி கொடுக்கும் இத்தமிழ். பலவழிகள் தமிழ் வளர்க்க இன்று பிறந்துவிட்டாலும், நாடகத்தமிழ் என்றுமே நமக்கெல்லாம் நம்தமிழை நன்றாகவே ஊட்டிவிடும். எத்தனைதான் வாழ்வினில் வந்தாலும் முதலில் வருவதொன்றே தேனாக இனிக்கும். முதல் காதல், முதல் பள்ளி, முதல் பயணம், முதல் வீடு. மேடையில் மலரப்போகும் இந்த "முதல் வீட்டிலே" நாமும் புகுவோம்.

<b>பட்டிமன்றம் </b>(இளம் மழலைகள்): வெட்டிப் பேசுவதற்கு ஓர் களம். வேடிக்கையாப் பேசுவற்கு ஓர் களம். கொடுத்த கருவெடுத்து, அழகு தமிழ் எடுத்து, எதிர் அணியைப்பார்த்து, தொடுத்த கணை பாய்ச்சும் களம். இன்று "இளம் மழலைகள்" தலைப்பு. என்ன கூறப்போகிறார்களோ என்கின்ற தவிப்பு எனக்கு. உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைப்பு. விலகி நின்று விடுவோம் அவர்களுக்கு ஓர் அழைப்பு.

<b>நன்றியுரை: </b>நன்றி! மூன்றெழுத்தில் உருவான ஓர் முத்தான சொல். நல்லதொரு நிகழ்வைத்தர, நாட்கள் பல அலைந்த நெஞ்சங்களை வருடிக்கொடுக்கும் வார்த்தைகள். இதை மறந்தவற்கு உய்வே இல்லை என்கிறார் வள்ளுவர். மறவாது வந்து தன்னுரையை, தவறாமல் வழங்க அழைக்கின்றோம் அன்பரை.

Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-17-2006, 06:43 AM
[No subject] - by Rasikai - 02-17-2006, 04:40 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 08:55 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 09:34 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 09:49 PM
[No subject] - by Eelam Angel - 02-18-2006, 01:36 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:18 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:29 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:46 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:59 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:15 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:25 AM
[No subject] - by RaMa - 02-18-2006, 06:14 AM
[No subject] - by ப்ரியசகி - 02-18-2006, 12:41 PM
[No subject] - by Selvamuthu - 02-18-2006, 12:53 PM
[No subject] - by Rasikai - 02-19-2006, 12:04 AM
[No subject] - by வர்ணன் - 02-19-2006, 07:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)