![]() |
|
கவி உதவி வேண்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: கவி உதவி வேண்டும் (/showthread.php?tid=826) |
கவி உதவி வேண்டும் - Eelam Angel - 02-17-2006 கள உறவுகளுக்கு வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றி மங்கள விளக்கேற்றல் கொடியேற்றம் அக வணக்கம் தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம் வரவேற்புரை அபினய பாடல் (இளம் மழழைகள்) நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?) பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன் எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு) திருக்குறல் இசை நாடகம் (கண்ணகி) தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்) உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு) அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை) கின்னர இசை முதல் வீடு தமிழ் (நாடகம்) பட்டிமன்றம் (இளம் மழழைகள்) '' '' '' '' '' '' '' '' நன்றி உரை சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி தமிழீழ தேவதைகள் [color=indigo] Re: கவி உதவி வேண்டும் - வர்ணன் - 02-17-2006 [quote=Eelam Angel]கள உறவுகளுக்கு வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றி மங்கள விளக்கேற்றல் கொடியேற்றம் அக வணக்கம் தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம் வரவேற்புரை அபினய பாடல் (இளம் மழழைகள்) நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?) பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன் எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு) திருக்குறல் இசை நாடகம் (கண்ணகி) தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்) உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு) அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை) கின்னர இசை முதல் வீடு தமிழ் (நாடகம்) பட்டிமன்றம் (இளம் மழழைகள்) '' '' '' '' '' '' '' '' நன்றி உரை சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி தமிழீழ தேவதைகள் [color=indigo] ஹ்ம்ம் முயற்சிதான் இது- ஆனா முடிவில்ல- ஓ.கே யா? மங்கள விளக்கேற்றல்- எண்ணையில் - சிசு ஒன்று உயிர் கொள்ளுது-ஒளியென பாரீர் - எங்களின் முகம் அதில் - தெரியுது- காணீர்-! கொடியேற்றம்(தெளிவில்லை- தேசிய கொடியா? இல்லை உங்க பாடசாலை கொடியா?) தேசிய கொடிக்கு- இதயத்தின் நிறத்தில் ஒரு கொடி- எங்கள் இருப்புக்கு வாழ்வு தந்த கொடி - சருகாகி போகாமல் - எம் வாழ்வை தங்க தாம்பாளத்தில் தாங்கும் -தாய் மடி -! பாடசாலை கொடி என்றால்- கற்றோம் பல உன்னால் அம்மா- நாம் கொண்ட இன்னுமொரு கருவறை நீயம்மா-! நடக்க ஒரு வழி தந்தாய்- உன் தடத்தை - எம் வரமென்று தொடர்ந்தே வாழ்வோம்! அகவணக்கம் -புயலிலும் - இடியிலும் - தாயக கனவிலும்- எங்கள் தாய் நில மடியிலும் - கண்மூடி போனீர்கள் என்று எவர் சொன்னார்? எங்கள் கனவை உமதாய் சுமந்தீர் - கண்ணோரம் வழியும் நீரில் - இன்றும்- மீண்டும் உங்கள் ஜீவன் - கருத்தரிக்கிறது ! கனேடிய கீதம் - கட்டிட காட்டிடை இருந்தால் நீயென்ன- எங்களை சாவு காவு கொள்ளவிடாமல் கட்டி அணைத்தவளே- கனேடிய தாயே- கண்ணீர்மல்க - உனை தொழுகிறோம் - வாழிய நீ- வாழியவே! வரவேற்பு - பனிமுத்தம் கொள்ளும் ஒரு நிலம்- பலருள் நாம் ஒருவராகி- நாமே சிலருக்கு பலராகி - சாதனைகள் -பல கொண்டதினால் - சாதித்தவர்கள் எல்லாம் சங்கமம் ஆகி இருக்கோம்- சரித்திரம் என்பது எது ? எங்கள் சங்கமம் இங்கென்றாச்சு - அதுதானே- அல்லவோ? கருத்தை சொல்லுங்கள் - சரியோ நான் எழுதியது பிழையோ தெரியல- பின்பு தொடர்கிறேன் 8) - RaMa - 02-17-2006 வர்ணன் நீங்கள் எழுதிய கவித்துளிகள் அருமையாக இருக்கின்றது. ஈழதேவதைக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன். ஈழதேவதை உங்கள் விழா சிறப்புற வாழ்த்துக்கள். - Rasikai - 02-17-2006 வர்ணன் நீங்கள் கவி வடிவில் எழுதியது நன்றாகவுள்ளது. ஈழதேவதை வந்து என்ன சொல்லுறா என்று பார்ப்பம். - Eelam Angel - 02-17-2006 வர்ணன் அண்ணா பிரமாதம் தயவு செய்து தொடருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelam Angel - 02-17-2006 மிகவும் நன்றி வர்ணன் அண்ணா கவியை தொடருங்கள் - Eelam Angel - 02-17-2006 வாழ்த்துகளிற்கு நன்றி ரமா அக்கா - Eelam Angel - 02-18-2006 அண்ணா நாளை எமது நிகழ்வு என்பதால் முடியுமனால் தயவு செய்து இன்று இரவிற்குள் மிகுதியை போடுவீர்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும் - வர்ணன் - 02-18-2006 சகோதரம் மன்னிக்கவும் இப்போதான் வீட்டை வந்து மொத்தமாய் எழுதி முடிச்சிட்டு - போஸ்ட் பண்ண - திரும்ப பாஸ்வேர்ட் - யூஸர் நேம் கேட்டு வந்து எல்லாமே அழிஞ்சு போச்சு - :? ஏன் இப்பிடி ? இதை போய் யாரிட்ட கேக்கிறது? சரி முடிந்தவரை- திரும்ப எழுதுறன்! - வர்ணன் - 02-18-2006 அபினய பாடல் (இளம் மழழைகள்) மயில் ஆடி பார்த்ததுண்டு - சிலர் மனங்கள் ஆட்டம் கொண்டும் பார்த்ததுண்டு- ரோஜா கூட்டமொன்று சிறகுவிரித்து அபிநயம் செய்ய பார்த்ததுண்டா? அரங்கமதில் அவர் ஆட்சி சபையேறுகிறது-பாரீர்! நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?) சிலையை ரசிப்பவர் யாரும் சிற்பியை நினைத்ததுண்டா? ஆள்பவனிலிருந்து ஆண்டிவரை - எல்லோரிலும் சிறந்தவன் நானே என்று எண்ணிக்கொள்கிறான் - எங்களில் சிறந்தவன் யாரென்று ஆண்டவன் -கணக்கு போடுறான் ! இயல் இசை நாடகம் எங்கள் சொத்து - இமைக்காமல் கண்டு களிப்பீர்- கண்கள் பூத்து! - வர்ணன் - 02-18-2006 பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) படகோடு சேர்ந்து இருக்கும் வரைதான் துடுப்புக்கு மதிப்பு! பயணம் வரை கூடவந்தால்தான் செருப்புக்கும் மதிப்பு-! கொள்ளை அழகு குரல் இருக்கும்வரைதான் - குயிலுக்கும் சிறப்பு-! வாழ்வு எப்படி அர்த்தம் கொள்ளும்? வானம் கூட எப்படி இருந்தால் எம் வசப்படும்? மனங்களோடு சேர்ந்து-மனிதன் - வாழ நினைத்தால் மட்டுமோ என்னவோ-? பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன் இன்று அரும்பிய மொட்டொன்று - இதழ் மெல்லவிரிக்கிறது- என்னதான் சொல்லுமோ-? நேற்றே பூத்த எங்களுக்கு நிச்சயமாய் ஏதும் செய்தி இருக்குமோ? என்னதான் பெரிய அருவி என்றானாலும்- சின்ன மழை தூறல் அதை கலங்க வைக்குமே - கேட்போம்! - வர்ணன் - 02-18-2006 எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு) வயல் அதை தொலைத்த நாற்றுக்கள் - நாலா திசையும் -சிதறியிருந்து வாடினாலும் - அந்த களத்தில் கேட்ட கானங்கள் - இன்றுவரை எம் மனசில் சுமையாய்-! தேசம் விடிந்தது என்ற ஒரு செய்தி வரும்வரை - உயிர் ஓடி போகாது-! எம்மை எரிப்பவர் ஆட்டத்தை கொளுத்தியே தீர கரம் கொடுப்போம்- இப்போ - அந்த நினைவுகளில் ஒரு எழுச்சி நடனம்! - வர்ணன் - 02-18-2006 திருக்குறல் இருவரிக்குள் -வாழ்வின் இயங்கியலை - இப்பிடிதான் என்றும் இருக்கும் என்று - என்றோ வள்ளுவன் உதிர்த்த -குரல்- இப்பிடியெல்லாம் யாரும் எழுத முடியுமா? உலக அதிசயமென்று ஏதேதோ சொல்கிறார்- உண்மையை சொல்லுங்கள் - இதனை விடவா அவையெல்லாம் அதிசயமாம்? - வர்ணன் - 02-18-2006 இசை நாடகம் (கண்ணகி) மதுரையை எரித்தாள் அவள் என்கிறார்- எரித்தது - மதுரையையா? இல்லை மனசை அலையவிடும்-மனிதர் முகங்களையா? பாண்டியன் என்றாலென்ன?- கோவலன் என்றானாலும்தான் என்ன-? நீதி தவறினாலும் சரி - நேர்வழி செல்ல மறந்தாலும் சரி - யாருக்காக அவள் - தீ மூட்டினாலும்- ஏன் இன்றும் இந்த கண்ணகி கதை வாழ்கிறது? இன்றும் சொற்ப சிலர் இப்படி வாழ்வதனால்தானோ? - RaMa - 02-18-2006 ஆகா வர்ணன் ஓரே கவி மழை பொழிந்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 02-18-2006 ஆகா..வர்ணன்..உங்கள் கவிதைகள் எல்லாம் ரொம்பவே அழகாக இருக்கிறது...வாழ்த்துக்கள்.. - Selvamuthu - 02-18-2006 வர்ணனின் வர்ணனையை ஒக்குமோ என்வரிகள்? விடுபட்டிருந்த வரிகளுக்கு கவிபோல் சில வடித்தேன். பிடித்திருந்தால் ஏடுத்துக்கொள்ளுங்கள். நேரமுண்டோ தெரியவில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி. <b>தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம்:</b> தமிழும் தாயும் ஒன்று. இது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு. தாயை மறந்தவர்களை மன்னிக்கமுடியாது. தமிழை வளர்த்தவர்களை வாழ்த்தாமல் இருக்கமுடியாது. அந்தப் பெரியாரை, அவர் வளர்த்த தமிழெடுத்தே வாயார வாழ்த்துவோம் வாருங்கள். <b>உழவனின் பாட்டு: </b>ஏர் பிடிக்கும் கைகளைத் தொழுவோம். அன்னமிடும் உள்ளங்களைத் தொழுவோம். பார் முழுதும் பஞ்சமின்றி, பட்டினியின்றி வாழவைக்கும் உழவர்களைத் தொழுவோம். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் இசையோடு கலந்த ஒண்தமிழ் வரிகளை நாமெல்லாம் ஒன்றாய் கேட்போம். <b>முதல் வீடு </b>(தமிழ் நாடகம்): முத்தமிழ்களில் ஒன்று நாடகத்தமிழ். செத்துவிடும் தமிழ் இனி என்பவர்ககெல்லாம் நல்ல செருப்படி கொடுக்கும் இத்தமிழ். பலவழிகள் தமிழ் வளர்க்க இன்று பிறந்துவிட்டாலும், நாடகத்தமிழ் என்றுமே நமக்கெல்லாம் நம்தமிழை நன்றாகவே ஊட்டிவிடும். எத்தனைதான் வாழ்வினில் வந்தாலும் முதலில் வருவதொன்றே தேனாக இனிக்கும். முதல் காதல், முதல் பள்ளி, முதல் பயணம், முதல் வீடு. மேடையில் மலரப்போகும் இந்த "முதல் வீட்டிலே" நாமும் புகுவோம். <b>பட்டிமன்றம் </b>(இளம் மழலைகள்): வெட்டிப் பேசுவதற்கு ஓர் களம். வேடிக்கையாப் பேசுவற்கு ஓர் களம். கொடுத்த கருவெடுத்து, அழகு தமிழ் எடுத்து, எதிர் அணியைப்பார்த்து, தொடுத்த கணை பாய்ச்சும் களம். இன்று "இளம் மழலைகள்" தலைப்பு. என்ன கூறப்போகிறார்களோ என்கின்ற தவிப்பு எனக்கு. உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைப்பு. விலகி நின்று விடுவோம் அவர்களுக்கு ஓர் அழைப்பு. <b>நன்றியுரை: </b>நன்றி! மூன்றெழுத்தில் உருவான ஓர் முத்தான சொல். நல்லதொரு நிகழ்வைத்தர, நாட்கள் பல அலைந்த நெஞ்சங்களை வருடிக்கொடுக்கும் வார்த்தைகள். இதை மறந்தவற்கு உய்வே இல்லை என்கிறார் வள்ளுவர். மறவாது வந்து தன்னுரையை, தவறாமல் வழங்க அழைக்கின்றோம் அன்பரை. - Rasikai - 02-19-2006 செல்வமுத்து அண்ண , வர்ணன் உங்கள் கவிதைகள் அழகா இருக்கு நன்றி சகோதரி இரசிகை. - Selvamuthu - 02-19-2006 நன்றி சகோதரி இரசிகை. இன்று காலையில்தான் இதனைப் பார்த்தேன். எழுதவேண்டும்போல் இருந்தது. விடுபட்டிருந்தவைக்கு சில வரிகள் எழுதினேன். அவை உரியவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்குமோ தெரியவில்லை. - வர்ணன் - 02-19-2006 [quote="Selvamuthu"]வர்ணனின் வர்ணனையை ஒக்குமோ என்வரிகள்? விடுபட்டிருந்த வரிகளுக்கு கவிபோல் சில வடித்தேன். பிடித்திருந்தால் ஏடுத்துக்கொள்ளுங்கள். நேரமுண்டோ தெரியவில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி. [ செல்வமுத்து ஆசிரியர் அவர்களே - உங்கள் வரிகளும் ரசனையாக இருக்கு -! உங்களைப்போலவே -எனக்கும் - கொஞ்சம் -கவலைதான் - உரிய நேரத்தில் - >>>> ஈழதேவதைக்கு - நாங்கள் எழுதியது - உதவியிருக்குமா என்பதில் - ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <<<<இல்லாவிடாலும் - முயற்சி செய்ததில் - கொஞ்சம் சந்தோஷம்தான் -! 8) |