02-18-2006, 01:06 AM
தமிழீழ தொலைகாட்சி எங்கள் தொலக்காட்சி என நீங்கள் தானே முன்னர் சொன்னீர்கள் ஏன் இப்பொழுது கட்சி மாறுகிறீர்கள்
[quote=kurukaalapoovan]யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு
பிழைகளை யாழ்களத்தில் வந்து எம்மத்தியில் சொல்லாது ntt_news@yahoo.com சொல்லவேண்டிய இடத்துக்கு சொன்னால் தானே அவர்களும் உணர்ந்து திருத்த முடியுமானால் திருத்துவார்கள்
kurukaalapoovan Wrote:இங்கே உடனடித்தேவைகள் இருப்பின் தற்காலிக தீர்வாக உணர்வாளர்கள் நேரடியாக பொருளாதார உதவிகளை செய்யலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்பது உரிய விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ளுவது.
தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நாளாந்த ஒளிபரப்பு நேரமானது (2100-2200 மத்திய ஜரோப்பிய நேரம்/CET) தமிழ் ஒளி இணையத்தின் 24 மணி சேவையில் மிகவும் பெறுமதிமிக்க அதிக பார்வையாளர்களை கவரும் நேரம் (prime time). அதிலும் மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் <b>நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்</b> என்ற அரசியல் கலந்துரையாடல் நடக்கும் நேரமானது மிகவும் பெறுமதிவாய்ந்தது.
தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளும் <b>அம்பலம்</b> பேன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
அதைவிட தமிழீழத்தின் பொருளாதாரம், கல்வி, கலை கலாச்சாரம், வாழ்வியல், சமூகங்களின் இன்னல்கள், பின்தங்கிய கிரமாங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கான குறைபாடுகள் பற்றி தமிழீழ நிர்வாகத்தின் அலகுகள் பற்றி என பல புதிய பயனுள்ள விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன அவர்களது வாரநாள் நிகழ்ச்சிகளில்.
தமிழீழத் தொலைக்காட்சியானது அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் மூலம் தமிழீழத்தின் அன்றாட வாழ்வின் சவால்கள் முதல் வராலாற்று வெற்றிகள் வரை நிதானமாக ஆவணப்படுத்தி உங்களோடு பகிருகிறார்கள். அங்குள்ள யதார்த்தத்தை நாள்தோறும் உங்களின் வீடுகளின் சொகுசில் இருந்து அறிந்து கொள்ள உதவுகிறார்கள். புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் உடனுக்குடன் ஒளிக்காட்சிகளாக சாட்சிகளாக அனுப்பி வைக்கிறார்கள். உதாரணத்திற்கு 19 மார்கழியில் யாழ்பல்கலைக்கழ சமூகத்தின் அமைதி ஊர்வலத்தின் போது அவர்கள் மீது இராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை அன்றைய தமிழ்தேசிய தொலைக்காட்சியின் செய்திகளில் ஒளிவடிவில் சொற்களால் வர்ணிக்க முடியாத அந்த அராஜகம் உலகம் முழுவதற்கும் சாட்சியாக்கப்பட்டது 24 மணத்தியாலங்களிற்குள்.
தமிழ்த் தேசிய தொலைக்காட்சி செய்யும் இந்த வரலாற்றுச் சேவையை தமிழ் உணர்வுள்ள வியாபார வணிக நிறுவனங்கள் உணர வேண்டும். உங்கள ஆதாரவு தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்பது மாத்திரமல்ல உரிய விளம்பரத்தையும் உடனடிப்பயனாக பெற்றுக் கொள்வீர்கள்.
கள உறவுகளே உங்களில் யாராவது விளம்பரத்துறையில் படித்து கொண்டிருந்தால் அல்லது வேலை செய்து கொண்டிருந்தால் உங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு ஒரு சிறந்த விளம்பர அறிமுக தந்திரோபாயத்தை (marketing & promotional strategy) உருவாக்கி கொடுக்க முன்வாருங்கள்.
kurukaalapoovan Wrote:செய்தி நிறுவனங்களின் மீளபிரசுர உரிமையில் அவர்கள் இதைப்பற்றி கூறியிருப்பார்கள். உதாரணத்திற்கு TamilNet எடுத்தால் அவர்களுடைய XML/RSS feed பாவிப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை. ஆனால் அந்த feed இன் மூலம் TamiNet என்றதை மறைக்காமல் போட வேண்டும் என்கிறார்கள்.
பொதுவாக இலவசமாக கிடைக்கும் feeds எடுத்தால் அது செய்திநிறுவனங்களினால் செய்தியின் தலையங்கம் (மற்றும் அதுபற்றிய சிறு குறிப்பை) மாத்திரம் மற்றய இணையத்தளங்களுக்கு தானியங்கியாக அனுப்புகிறது. முழுச் செய்தியையும் படிக்க செய்திநிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தான் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் அவர்கள் அந்தச் சேவையை வழங்குகிறார்கள்.
XM/RSS feeds போன்ற தானியங்கிச் சேவைகளை வழங்காத தளங்களில் இருப்பவற்றை அதே போல் தலையங்கத்தையும் செய்திபற்றிய சிறு குறிப்பை மேலோட்டமாக எழுதி முழுச் செய்திக்கு இணைப்பை குடுப்பதில் என்ன தவறு? இதற்கு முன் அனுமதி தேவையாக தெரியவில்லை.
TamilNet தமது தளத்தில் விளம்பரங்கள் போடுவதில்லை. அந்த வகையில் அவர்களது செய்தியை விளம்பரம் போடும் இணையத்தளத்தில் முன் அனுமதியின்றி போடுவது தவறு.
புதினத்தை எடுத்தால் அவர்கள் தமது இணையத்தில் விளம்பரம் போடுகிறார்கள். அந்த வகையில் அவர்களுடைய செய்திகளை முன் அனுமதியின்றி இன்னொரு விளம்பரம் இல்லாத தளத்தில் போடுவதும் தவறு.
ஒரு இணையத்தில் பிரசுரிக்கப்படும் செய்தியை முழுமையாக வெட்டி ஒட்டி 20 வேறு இணையத்தில் போடுவதால் பலருக்கு போய்ச்சேரும் என்ற வாதம் சரியா? பல மூலங்களிலிருந்து வரும் சம்பந்தப்பட்ட செய்திகளை ஓரே பக்கத்தில் வாசகர்களின் வசதி கருதி வழங்க விரும்புபவர்கள் XML/RSS feeds போல தலையங்கத்தையும் சிறு குறிப்பையும் அல்லவா போடுவது நியாமானது?
தமிழ்த் தேசிய தொலைக்காட்சி நிகழ்சிகளின் சிறுபகுதிகளை ஒரு விளம்பரம் இல்லாத (வியாபார நோக்கோடு இல்லாமல்) இயங்கும் இணையத்தளம் போடுவதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.
நல்ல படைப்புகள், ஆக்கங்கள் எல்லோருக்கும் பிந்தியாவது போய்சேரவேணும் என்றால் அதற்கு தமிழ் ஒளி இணையத்தாரின் இணையத் தளத்திலேயோ சில நாட்களுக்கு பின்னராக உத்தியோகபூர்வமாக <b>நிலவரம்</b> போன்றவற்றை வழங்குவது சிறந்த அணுகு முறை.
kurukaalapoovan Wrote:நல்லம் நிர்வாகம் அனுமதித்தால் யாழ் களத்துக் ஒரு விளம்பரம் குடுப்பம்.
ஒரு கல்லில் இரு மாங்காய். :wink:
தேசியத்துக்குச் சார்பாக இயங்கும் அனைத்து ஊடகங்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்த வேண்டும்
[quote=kurukaalapoovan]தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பான இந்தவார நிகழ்ச்சியில் தமிழீழ பொருண்மிய மேப்பாட்டு நிறுவனத்தை பற்றியதாக இருந்தது.
வியத்தகு முற்போக்கான தீர்க்கதரிசனமான பல செயற்திட்டத்தை முன்னெடுக்குறார்கள். விடுதலைப் புரட்சியோடு பசுமைப் புரட்சியையும் சமாந்தரமாக முன்னெடுப்பதில் கங்கணம் கட்டி நிக்கிறார்கள்.
தேசிய பால் சேகரிப்பு அமைப்பு
இயற்கை உரதயாரிப்பு
நாற்றுக் கன்றுகள்
விவசாயிகளுக்கான கடன் உதவி
போன்றவை சில...
kurukaalapoovan Wrote:எப்படியான உதவிகள் ஆதரவுகள் என்று எழுதுங்கள். நிச்சயாமாக இங்குள்ள பல உறவுகள் செய்ய காத்திருக்கிறார்கள்.
[quote=kurukaalapoovan]யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு
பிழைகளை யாழ்களத்தில் வந்து எம்மத்தியில் சொல்லாது ntt_news@yahoo.com சொல்லவேண்டிய இடத்துக்கு சொன்னால் தானே அவர்களும் உணர்ந்து திருத்த முடியுமானால் திருத்துவார்கள்

