02-17-2006, 03:00 PM
நல்ல முயற்சி சகி. காதல் அனுபவத்தையும், காத்திருப்பின் சுகத்தையும்
கவிநயத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். இந்த தொடர் புள்ளிகளிடுவதை
(..........) தவிர்த்துக்கொள்ளுங்கள்.
சினோ என்பது பொருத்தமாக அமையவில்லையோ எனத் தோன்றுகிறது.
நீங்கள் எழுதியதை அப்படியே நான் எழுதுவதாக இருந்தால், பின்வருமாறு
சொற்களை அடுக்குவேன்:
கொட்டும் பனியென்ன
கோடை வெயிலென்ன
வீசும் காற்றென்ன
நடுங்கும் குளிரென்ன
வாங்கியதோ என்று வராது, வாங்கினவோ என்பதே பொருத்தமாக இருக்கும்.
இடையில் "நக்கல்" உணர்வு அவசியமற்றதாகவே தோன்றுகிறது.
தொடக்கம் முடிவு(கிளைமாக்ஸ்) என்று கதைப்பாணியில்(சினிமாப்பாணியும் கூட) இருக்கிறது
கவிதை. நான் நடந்தேன் - நான் இருந்தேன் - கார் போனது - குயில் கூவியது - வானம் இருண்டது,
பனி கொட்டியது - நான் எழுந்தேன் - மறுபடி நான் நடந்தேன் - வீடு வந்தேன் - சாப்பிட்டேன் -
படுத்து உறங்கினேன் : இப்படித்தான் கவிதையை வடிவமைத்திருக்கிறீர்கள். இப்படி இருப்பது
கதையின் தோற்றத்தைத்தான் தரும். இது வாசிப்பவருக்கு சலிப்பைத் தரும். இதை சாதாரண
வாசகரும் எழுதுவார். கவிதை எழுதத் தெரியாதவரும் எழுதுவார். உங்களுக்கு ஒரு தங்கை
இருந்தால், இன்று பள்ளிக்கூடத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இதே முறையில்
தான் சொல்லுவார். ஆனால், ஒரு கவிதை எழுதுபவராக உங்கள் பார்வையும், அதனை வெளிப்படுத்தும்
முறையும் மாறுபட்டதாக இருக்கவேண்டும். எனவே முடிந்தவரை இப்படியான தொடர்
நிகழ்வுகளையெல்லாம் சித்தரிப்பதையும், கிளைமாக்ஸ் போன்றவற்றை சொல்வதையும் தவிர்ப்பது
நல்லது. கவிதைகளை வாசித்து உள்வாங்கும் ஒரு வாசகனாக கவிதைக்கான, கவிதை பற்றிய
புரிதலோடு தரப்பட்ட கருத்துக்களே இவை. எனவே பொருத்தமென நீங்கள் கருதுபவற்றை எடுங்கள் -
மிகுதியை விடுங்கள். நன்றி.

Quote:கொட்டும் பனிக்குள் என்ன...
கோடை வெயிலில் என்ன.....
வீசும் காற்றில் என்ன....
மேனி நடுங்கும் சினோவில் என்ன...
சினோ என்பது பொருத்தமாக அமையவில்லையோ எனத் தோன்றுகிறது.
நீங்கள் எழுதியதை அப்படியே நான் எழுதுவதாக இருந்தால், பின்வருமாறு
சொற்களை அடுக்குவேன்:
கொட்டும் பனியென்ன
கோடை வெயிலென்ன
வீசும் காற்றென்ன
நடுங்கும் குளிரென்ன
Quote:நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன
பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறகுகளை..
தெரியவில்லை..
வாங்கியதோ என்று வராது, வாங்கினவோ என்பதே பொருத்தமாக இருக்கும்.
Quote:கனத்த இதயத்தோடும்நல்ல வரிகள். ஆனால் ஏற்கனவே பல கவிதைகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்.
பனித்த கண்களோடும்
Quote:அவனை அன்று தான் சந்தித்தேன்மன்மதன் ஜோதிகா அவசியமில்லாதது. காதல், காத்திருப்பு உணர்வோடு தொடர்ந்துவிட்டு
புலம் பெயர்ந்த நாட்டில்
முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்...
அந்த அழகிய காலை வேளையில்..
அழகிய உயரம்..
பளிச்சென்ற கண்கள்..
நிமிர்ந்த நடை..
அவன் வருகை...
"மன்மதன்" ஜோதிகா போலவே
ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம்
ஆனால் இல்லை..
ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை...