02-17-2006, 05:57 AM
varnan Wrote:<b>DV THAMILAN Wrote:அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.</b>இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!
எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!
பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -<b>ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும்</b> -! 8)
[size=14]யாழ்களம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தை, அல்லது வட மாகாணத்தை மட்டும் குறிப்பிடுகிறது என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவில்லை. பண்டைத் தமிழர்களின் இசைக் கருவியில் யாழ் முக்கியமானதாகவுள்ளது. சங்க காலப் பாடல்களிலேயே யாழ் என்ற தமிழர்களின் இசைக்கருவியைப் பற்றி பெரிதும் பேசப்பட்டுள்ளது.
<b>"கலையாத சொத்து இசை யாழ்நூல் வித்து, விபுலானந்தன் தந்த புகழேடு" என்று புகழப்படும், பழந்தமிழர்களின் இசையையும், இசைக்கருவிகளையும் பற்றி உலகுக்கு எடுத்தியம்பும் யாழ்நூலைத் தந்தவர் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மைந்தன் விபுலானந்தர் அடிகளார்</b>. அதனால் யாழ் என்ற கருவியும், யாழ் என்ற பதமும் ஈழத்தமிழர்களனைவருக்கும், பருத்தித்துறையிலிருந்து அம்பாறை வரைக்கும் பொதுவானது. இக்களத்தை யாழ்மாவட்டக் களம் என்றழைப்பது தான் தவறானது. ஆனால் யாழ்களம் என்பது ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது தான் என்னுடைய கருத்து.

