02-17-2006, 05:56 AM
Quote:எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?வணக்கம் வர்னன்
தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?
இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன்
பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும்
யாழ் என்பது யாழ் மாவட்டத்தை குறிப்பதாக ஏன் சிந்திக்கிறீர்கள்...யாழ் என்னும் ஒரு இசைக்கருவியும் இருக்கிறதல்லவா? யாழ் என்பது இனிமையானது..அந்த யாழை இனிமையற்றதாக்க முயற்ச்சித்தால் யார் என்ன செய்யலாம்.... அத் தோடு மாற்றுக்கருத்து என்ற ஒன்று இங்கு அதாவது தமிழர்களுக்குள் இல்லை. ஆனாலும் ஒரு சிலர் மாற்றுக்கருத்துக்களை உருவாக்குகின்றனர். உண்மையான மாற்றுக்கருத்தாளன் யாரும் இங்கில்லை. மாற்றுக்கருத்தை வைக்க வேண்டும் தமிழ் தேசியத்தின் மீது சேறு பூச வேண்டுமென்பதற்காகவே இங்கு கருத்து வைக்கின்றனர். அவர்களுக்காக எவற்றையும் நாம் மாற்ற வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை என்பது எனது கருத்து...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

