02-16-2006, 11:23 AM
வணக்கம்
இலண்டனிலே உள்ள அனைத்து இந்து மதத்தினருக்கும் இதுபோன்ற பல அனுபவங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது வீட்டில்கூட பல முறை வந்து வாயில்மணியை அடித்து மேற்கூறியவர்கள்போல் கூறினார்கள்.
அண்மையில் ஒரு நடுத்தர வயதுடைய ஆணும், ஓர் இளம் பெண்ணும் வந்து மணியை அடித்தார்கள். என்னைக்கண்டதும் யேசுவைப்பற்றி ஆரம்பித்தார்கள். நான் எனக்கு இவைகளில் விருப்பம் இல்லை என்று கூறினேன். அவர்கள் விடுவதாக இல்லை. இறுதியில் போகும்போது இந்தப் புத்தகத்தை வாசித்துப்பாருங்கள் என்று கூறி ஒரு யேசுவின் புத்தகத்தை என் கைகளில் தர முயன்றார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பித்திரும்பி பார்த்தபடியே சென்றுவிட்டார்கள்.
கனாடாவில் இருக்கும் எனது ஒன்றுவிட்ட தம்பி சில காலமாக நல்ல வேலையில்லாமல் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மனைவியும் நன்றாக வந்து அமையவில்லை. பணத்துன்பம், குடும்பச்சிக்கல், பிள்ளைகளின் தொல்லை என்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தவர் திடீரென்று மதம்மாறி "பென்றிக்கோஸ்" இல் சேர்ந்துவிட்டார். அவர்கள் முதலில் இவருக்கு அவருடைய கடன்களையெல்லாம் அடைக்க பெரியதொரு தொகையை கடனாக எடுக்க உதவினார்கள். இதனால் அவர் தனது சிறிய கடன்களையெல்லாம் அடைத்துவிட்டார். அவர் தான் இப்போது சந்தோசமாக இருப்பதாக கூறுகிறார். எப்படி என்று கேட்டால், முன்னர் பல கடன்காரர்கள் இருந்தார்கள் ஆனால் அவருக்கு இப்போது ஒரேயொரு கடன்காரர்தான் இருக்கிறார் என்கிறார். ஆனால் திருப்பிக்கட்டுகின்ற தொகையோ முன்னரைவிடக் கூடியது. அவர் தான் இப்போது சந்தோசமாக இருப்பதாகக்கூறினாலும் அவருடைய முகத்தைப்பார்த்தால் அது பொய் என்பது தெரிகிறது. இனத்தவர் எவருடைய விழாக்களுக்கும் செல்வதில்லை. யாருடனும் முன்னர்போல் கலகலப்பாகக் கதைப்பதில்லை. பேயறைந்தவர்போல் முகம் இருக்கிறது. புதிதாக நுழைந்த இடத்தில் இருக்கவும் முடியாமல் அதனைவிட்டு வெளியே வரவும் முடியாமல் தத்தளிப்பதாகவே அவரைப் பார்ப்பவர்களுக்குத் தென்படுகிறார். அப்படித்தான் நாமும் எண்ணுகிறோம். அவரை அவர்கள் அச்சுறுத்தி வைத்திருப்பதாவும் கூறுகின்றார்கள்.
இதுபோன்ற பலரை நான் இங்கும், வேறு நாடுகளிலும் கண்டிருக்கிறேன். எனது அனுபவத்தையே ஒரு புத்தகமாக எழுதி வெளியிடலாம். விருப்பமில்லாத ஒருவரையும் வலிந்து மதம்மாற வைக்கக்கூடாது. நலிந்திருப்பவர்களை இவர்கள் நாடிச்சென்று, நாவினிக்கப்பேசி, நாசுக்காக மாற்றிவிடுகிறார்கள். இவை நிச்சயம் நிறுத்தப்படவேண்டும்.