Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#85
பட்டிமன்ற நடுவர்களான தமிழினி அவர்களுக்கும் செல்வமுத்து ஐயா அவர்களுக்கும் எதிரணி அங்கத்தவர்களுக்கும் மற்றும் எமதணி அங்கத்தவர்களுக்கும் தமிழ் தாயின் இனிய நற்றமிழ் வணக்கங்கள்.

எமதணியினர் சிறப்பான வாதங்களை ஏலவே தந்துவிட்ட நிலையிலும் பூனைக்குட்டி ஒரு கட்டுரையையே சமர்ப்பித்து விட்ட நிலையிலும் எமது வாதத்தை எதிரணி நண்பர் வசம்புவின் வாதத்தோடுடொட்டி சுருக்கிக்கொண்டு பட்டிமன்றம் விரைந்து முடிவுறுத்தப்பட எம்மால் இயன்ற பங்களிப்பை நல்கிக்கொள்கின்றோம்..!

இங்கு பேசப்படும் தலைப்பு... <b>புலம்பெயர் வாழ்</b> <i>இளையோரும்</i> இணைய ஊடகமும்... என்பதே..! அந்தப் புலம்பெயர் வாழ் இளையோரில் தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த இளையோரை மையப்படுத்தியே வாதம் நகர்த்திச் செல்லப்படுகிறது என்பதில் ஐயமில்லை..!

வாதத்துக்குள் செல்ல முன்னர் சில பதங்கள் தொடர்பில் வரையறைகளை செய்து கொண்டு வாததை நகர்த்துவது சாலச் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்..! அந்த வகையில்...

இளையோர் - என்பதை மானுடவியல், உடற்கூற்றியல் மற்றும் உளவியல்படி பகுத்துக் கொண்டால் 11 தொடக்கம் 18 வரை ரீன் ஏஜ் ( (Teenagers) இளையோர் என்றும் அதன் பின்னர் எல்லோரும் அடல் (Adult) - முதிர் மனிதர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர். இந்த அடல்ற் பகுதிக்குள் சில பிரிவுகள் இருக்கின்றன அதில் இளம் அடல்ற் (Young Adult) வருவது 18 - 39 வயதிற்குள்..! இந்த வகைகளின் கீழ் முதலில் இளையோரை வகைப்படுத்திக் கொள்வோம். ( முளையத்தில் இருந்து இறப்பு நிலைவரை மனித நிலை மாற்றங்களை கற்றறிந்த வகையில் பல நூல்களில் குறிப்பிட்டதன் படி இத்தரவுகள் தரப்படுகிறது. தேவையென்றால் நடுவர் Human development and Psychology எனும் நூலைப் புரட்டினாலும் இந்தத் தரவுகளை ஆதாரத்தோடு நோக்கலாம்.)

அடுத்து..புலம்பெயர் இளையோர் - இதில் புலம்பெயர் இளையோர் எனப்படுபவர்கள்..யார்..??! தாயகத்தில் பிறந்து இங்கு புலம்பெயர்ந்த ரீன் ஏஜ் ஆட்களா அல்லது இள முதிர் பருவ மனிதர்களா..??! அல்லது தாயகத்தில் இருந்து புகலிடம் நோக்கி குடிபெயர்ந்தவர்களுக்கு புகலிடத்தில் பிறந்தவர்களா..??! இந்தத் தலைப்புக்குள் வாதாட இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை அவசியம். காரணம் இது தமிழர்கள், தமிழ் சார்ந்த இணைய ஊடகம் தொடர்பான விவாதம் என்ற வகையிலும் கருத்துப் பரிமாறப்பட்டுள்ளது. நாங்கள் "புலம்பெயர்ந்த இளையோர்" என்ற பதப்பிரயோகப்படி தாயகத்தின் அடையாளங்களுக்கான அல்லது அவற்றுடனான தொடர்புகளை (அது மொழியாக இருக்கட்டும்..பண்பாடு பழக்க வழக்கமாக இருக்கட்டும்..வாழ்வியல் முறையாக இருக்கட்டும்...எந்த வகையிலும்) தங்களோடு சிறிதள வேணும் வைத்திருக்கும் இளையோரை (ரீன் மற்றும் இளம் முதிர் மனிதர்களை ) இதற்குள் அடக்கிக் கொள்கின்றோம்..!

இணைய ஊடகம் - இதில் இன்ர நெட் மற்றும் இன்றா நெட் இவை இரண்டையும் அடக்கிக் கொள்வோம்..! இன்ரநெட் (Internet) உலக வலைப்பின்னலூடும்.. இன்றாநெட் (Intranet) உள்ளக வலைப்பின்னலாகவும் கணணிகளூடு தரவுத் தகவல் பரிவர்த்தனைகளூடு தொடர்புகளை மேற்கொள்கின்றனர்..! இதில் இன்ரநெட் அநேகராலும் இன்று விரும்பி உபயோகிக்கப்படுகிறது.
இணைய ஊகத்தில் உள்ள தகவல்களின் தரவுகளின் நம்பகத்தன்மை - இது தமிழ் மொழி மூலம் இணையத் தரவுகளுக்கு தகவல்களுக்கு என்று மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உள்ள அநேக இணையத் தரவுகள் தகவல்களுக்கு 100% நம்பகத்தன்மை இல்லை இதை பலரும் அனுபவங்களினூடு கண்டறிந்திருப்பர். உதாரணத்துக்கு பல்கலைக்கழகங்களில் படிப்பவர்கள் இது தொடர்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இன்று Plagiarism என்பது மிகப் பெரிய அளவில் பல்கலைக்கழகங்களில் கல்விசார் நிர்வாகத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிற ஒரு விடயம். காரணம் மாணவர்கள் கூகிளில் தேடி அதில் தரப்படும் தரவுகளை அப்படியே வெட்டி ஒட்டி விளக்கமின்றி தவறான நேர்மைக்கு மாறான ஆக்கங்களை சமர்ப்பித்து வருவதாலாகும்..!

இணைய ஊடகத்தின் பெறுநிலை - புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளில் இணைய ஊடகத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் பாவனையாளர்கள் எங்கிருந்து இணையத்தை உபயோகிக்கிறார்..அவர்கள் பாவிக்கும் இணைய இணைப்பு உள்ள சூழல் எத்தனையன என்பவை அவர்களின் இணையச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்றன..!

உதாரணத்துக்கு ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் ஒரு மாணவன் இணையத்தில் உலா வரும் போதும் நண்பர்களோடு இணைந்து உலா வரும் போதும் அவனின் செயற்பாடுகள், நோக்கங்களில் தெளிவான வேறுபாடுகளை அவதானிக்கலாம். இங்குதான் தவறுக்கான சந்தர்ப்பங்கள் உருவாகப்படுகின்றன..! எல்லா மனிதரும் புதிய "காட் டிஸ்க்" போல மூளையோடு - மனதோடுதான் பிறக்கின்றனர்..ஆனால் பிறந்த பின் மூளையில் - மனத்தில் பதியப்படும் சமூகத்தின் செயற்பாடுதான் அவனின் சிந்தனைப் போக்கைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் ஒரு சிலர் எங்கோ ஒரு மூலைக்குள் உயர் மனித விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்துவிடுவதால் அது வாழும் சந்ததிகளை மற்றும் புதிய சந்ததிகளை வினைத்திறனுடன் அதிக அளவில் போய்ச் சேராது. சமூகத்தில் அநேகர் எதைச் செய்கின்றனரோ அதுதான் வாழும் சந்ததியிலும்,புதிய சந்ததியிலும் பிரதிபலிக்கும்..!

அதேபோல் மனிதனும் ஒழுக்கத்தோடு வாழ்வதிலும் ஒழுக்கமின்றி வாழ்வதிலேயே அதிகம் நாட்டம் காட்டுகிறான். காரணம் மனிதனும் ஒரு விலங்குதானே..! என்னதான் பகுத்தறிவால் அறிவியல் பூர்வமாக ஒழுக்க சீலத்துடன் சிந்தித்தாலும் எல்லா மனிதர்களாலும் அவரவர்க்குள் வாழும் விலங்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடைத்திடுமா என்ன...அது தனி மனிதர்களின் மனப்பலம், பலவீனம் சார்ந்ததும் இருக்கிறது...! எனவே ஒருவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவன் வாழும், செயற்படும் சூழலின் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுபடும்..! ஆகவே அமைய வேண்டிய சூழல் சிந்தனைகளைச் சீராக்க வல்லனவனாக பெறப்படும் சிந்தனைகளை சீராக்கவல்லனவாக அமைக்கப்பட வேண்டும்...!

அந்த வகையில் இணைய வசதிகள் வழங்கப்படும் இடங்களும் அமைய வேண்டும்...ஆனால் அப்படியா அமைந்திருக்கின்றதன. இன்ரநெற் கபேக்களில் சென்று தமிழ் பேசும் இளையோர் செய்யும் கூத்துக்களைப் பாருங்கள்...புரியும்..!

எனி எமது விவாதக் கருப்பொருளுக்கு வருவோம்.. இங்கு எதிரணியில் கருத்தாடியவர்களின் மொத்தக் கருத்தையும் 3 பிரதான பிரிவுகளுக்குள் அடக்கலாம்..

<b>1.</b> இணையம் புலம்பெயர் இளையோரின் தற்சிந்தனைகளுடான தன்னார்வப் படைப்புக்கள் எந்த வடிவிலும் வெளிப்படவும் வெளிச்செல்லவும் உள்வாங்கப்படவும் வகை செய்கிறது.

<b>2.</b> கல்விசார் நடவடிக்கைகளுக்கான விடயங்களை தேடல் செய்யவும் குறுகிய காலத்துள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும், இலக்குகளை விரைந்து சிரமமின்றி எட்டவும் உதவுகிறது.

<b>3.</b> வாழ்வியல் நிலையில், இணையத்தில் சற்றிங் மற்றும் ஏனைய வழிகளிலான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் இளையோர் தமக்கிடையே சகல மட்டங்களிலும் சகல விதமான கருத்துக்களையும் பரிமாறி எல்லைகளற்ற சமூக நிலைகளை ( டேற்றிங் இணைகள்..காதல் இணைகள்..காம இணைகள்..இதை விட நல்ல நட்புள்ள நிலைகள்..பின்னர் அவையே நடபற்ற நிலைகளாக...என்று நேரத்துக்கு ஏற்ப மனநிலைக்கு ஏற்ப கட்டுப்பாடின்றி மாற்றப்பட) மனம் போன போக்கில் அவற்றை தேவைக்கு ஏற்ப தக்க வைத்து வாழ வழிசெய்கிறது.

முதலில் இணையத்தில் இளையோரால் வைக்கப்படும் கருத்துக்களின், ஆக்கங்களின் தன்மைகள் பற்றிப் பார்ப்போம்... புலம்பெயர்ந்த இளையோரில் தமிழ் தெரிந்த தமிழர்கள் மட்டுமே தமிழ் இணைய ஊடகத்திற்கு தங்கள் பங்களிப்பை அதிகம் நல்கி வருகின்றனர். மற்றவர்கள் தாங்கள் அறிந்த அல்லது பயன்படுத்தும் மொழிமூல இணைய ஊடகங்களில் மட்டுமே தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர். எனவே அவர்களை இங்கு கொண்டு வருதல் நமக்கு பொருத்தமில்லாத விடயம். காரணம் நமக்கு டொச்சில என்ன எழுதி இருக்கென்று படிச்சு புரியத் தெரியாது. இல்லை தெரிஞ்சவரைக் கேட்டாலும் அவரும் படிச்சிட்டு உண்மைதான் சொல்லுறாரா என்பதற்கு உத்தரவாதமில்லை..! எனவே அவர்களை இங்கு விவாதத்துக்குள் உள்ளெடுப்பதைத் தவிர்ப்போம்..!

உலகெங்கும் ஈழத்தில் இருந்து கிட்டத்தட்ட 10- 15 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இதில் அநேகர் இளையோர் ( மேலே வகுத்ததன் படி). இவர்களில் எத்தனை பேர் தமிழ் மொழிமூல இணையப் பக்கங்களில் தங்கள் சுய திறனை வெளிக்காட்டக் கூடிய ஆக்கங்களை நல்குகின்றனர்..! ஒரு சில நூறு..???! அப்படி நல்கப்படும் ஆக்களுக்குள் எவை தரமான ஆக்கங்கள் என்பது எவரால் நிர்ணயிக்கப்படுகின்றன..??! இணையம் வரும் இளம் தமிழ் வாசகர்களால் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் வாசகர்களின் மனநிலை அறிவுநிலை சார்ந்தே ஆக்கம் ஒன்று உள்வாங்கப்படும். எனவே இளையோரின் அந்த நேரத்துக்கான எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறதோ அதன்படியே அவையும் உள்வாங்கப்படும். அதனால் அவை தரமானவை என்று எப்போதும் எடுத்த எடுப்பில் சொல்லமுடியாது..!

அதுமட்டுமன்றி..இணையத்தில் உலா வருபவர்களில் இளையோர்தான் அதிகம்...பல பண்பட்ட தமிழ் பேசும் மொழி சார் மற்றும் துறை சார் வல்லுனர்கள் இணையத்தில் அதிகம் இன்னும் நாட்டம் கொள்ளவில்லை..! அல்லது அவர்களுக்கு இணையத்தைப் பாவிப்பதில் தொழில்நுட்ப அறிவுச் சிக்கல் இருக்கலாம். இது இளையோரின் ஆக்கங்கள் தொடர்பில் வளமான விமர்சனமற்ற போக்கை அதிகரிக்கச் செய்து தவறான சிந்தனைகள் சரியென ஒரு பகுப்பாய்வுக்கு உட்பமமல்.. மட்டமான அறிவுநிலையில் காட்டப்பட அதையே இன்னும் பல இளையவர்களும் உள்வாங்க... சிந்தனைகளின் போக்குகள் இன..சமூக..விரோத நிலைகளை நோக்கி விரைவாக நகர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன..!

உதாரணத்துக்கு சமீபத்தில் கொண்டாடிய காதலர் தினம். இதன் உலகலாவிய தாக்கம் இணைய வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அது கொண்டாடப்படும் தார்ப்பரியம் என்பது ஆளாளுக்கு வேறுபடுகிறது. அங்கு ஒரு பொதுவான குறிக்கோள் அல்லது மானுடவியல் நோக்கம் அல்லது ஒழுங்குமுறை இருப்பதாக தெரியவில்லை..! இது காதல் என்ற ஒரு அற்புதமான உணர்வுநிலை இணையத்தின் வழி இளையவர்களின் தவறான கண்ணோட்டங்களின் மூலம் எழும் தவறான கருத்துக்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, தவறான நடத்தைகளை ஊக்கிவிக்கப்பட அவை மனிதர்களையும் தவறுகள் செய்யத் தூண்டி விடுவிடுகின்றன. வெகு சிலரே உண்மையில் குறித்த தினத்தின் தார்ப்பரியம் விளங்கிக் கொண்டாடுகின்றனர். அவர்கள் அதை இணையத்தால் இளையோர் வைத்த கருத்தின் அடிப்படையிலன்றி சுய தேடலின் மூலம் தமக்குள் சரியான நோக்கில் விளங்கிக் கொண்டதன்படி செய்திருப்பர். இதன் மூலம் நண்பர் வசம்பு அவர்கள் வைத்த இணையத்தில் இளையவர்கள் வைக்கும் கருத்துக்கள் தரமானவை என்ற கணிப்பிலான பதில் தவறென்பது காட்டப்படுகிறது. அவருக்கு முன்னரும் இதே கருத்து எதிரணியினரால் வலியுறத்தப்பட்டிருந்தது.

இதன் சாரம்...தமிழ் பேசும் புலம்பெயர் இளையோரால் இணையத்தில் கருத்து வைக்கப்படுகிறது என்பது உண்மை ஆனால் அவை எந்த வகையிலான சமூகத்தாக்கத்தைத் தருகின்றன..என்பதற்கான எந்த ஆய்வுநிலையும் இல்லை வழிகாட்டலும் இல்லை. அந்த வகையில் இணையம் ஒருவருள் எழும் தவறான கருத்தின் பரும்பலுக்கு சமூகத்தில் உதவியளிக்கிறது. அரசியல் ரீதியாகவும் இது மாற்றுக் கருத்துக்கள் என்ற தொனியில் கட்டுப்பாடுகள் இன்றி நடக்கின்றன..! தனிமனித ஒழுக்கவியல் சார்ந்தும் இவை விதைக்கப்படுகின்றன..! ஆனால் இவற்றின் தாக்கங்கள் குறித்து யார் அறிவியல் ரீதியில் சமூகவியல் ரீதியில் ஆராய்ந்து வழிநடத்துகின்றனர். அதற்கு இணையத்தில் வசதி ஏதேனும் இருக்கிறதா....???! இல்லை இல்லை இல்லை....!

எனி கல்வி சார் வகையில் இளையோர் செய்யும் நடவடிக்கைகளை நோக்குவோம்..
இன்று பல இணையத்தளங்களில் இளையவர்களைக் கவரும் நோக்கில் சில சட்டச்சிக்கலுக்குரிய விடயங்கள் நடத்தப்படுகின்றன. பல கணணி மென்பொருட்கள் சுடப்பட்டு பாவனைக்கு விடப்படுகின்றன. அதனால் நன்மைதானே என்று நீங்கள் எண்ணலாம். உண்மையில் அவை சட்ட விரோத செயல்கள். ஆனால் இணையத்தில் அவற்றின் பரம்பலை கண்டறிவதில் உள்ள சிக்கலால் பலர் தப்பிப் பிழைத்துள்ளதுடன் பலர் அது தவறல்ல என்ற போக்கில் சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டனர். இன்னும் சில இடங்களில் இப்படியான இலவச மென்பொருட்களை வழங்கி அங்கு தகாத விளம்பரங்களையும் கணணி வைரஸுக்களையும் விட்டு வைக்கின்றனர். இதை அறிந்தும் அறியாமலும் அங்கு செல்பவர்கள் தங்களையும் தங்கள் கணணிகளையும் சேதப்படுத்திக் கொள்கின்றனர்.

அதுமட்டுமன்றி மேலே சொன்னது போல இணையத்தளங்களில் உள்ள தரவுகளை ஆராயாமல் அப்படியே பாவித்து இளையவர்கள் ஒப்படைகள் செய்கின்றனர். இன்னும் சிலர் சற்றிங் மூலம் தொடர்பு கொண்டு காசு கொடுத்தும் செய்விக்கின்றனர். இப்படி அவர்கள் தங்கள் சுயமுயற்சிகளை விட்டு அடுத்தவரின் முயற்சியில் பட்டம் பெறக் கூடிய நிலையை இந்த இணைய ஊடகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன் இப்படியான தவறுகளைக் கண்டறிந்து முற்றாக தவிர்க்கவும் இணையத் தொழில்நுட்பத்தில் இன்னும் போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

அண்மையில் கூட ஒரு இணையத்தளத்தில் பிஎச்டி திசிஸ் காசுக்கு எழுதக் கூடிய வகையில் ஒழுங்கு செய்திருந்ததை செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன. அந்த வகையில் இணையம் கல்வி சார்ந்து மாணவர்களின் சுயதேடலை வெகுவாகக் குறைத்து மற்றவரின் தேடலினால் பெறப்படும் தகவல்களை தமக்கிடையே பரிமாறிக் கொள்ளவே அதிகம் வகை செய்கிறது. இது ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவியுள்ளும் வினைத்திறனான ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புக்களும் துறைசார் நவீனத்துவ படைப்புக்களுமான சுய திறன் வளர வழி செய்யாது தடை போடுகிறது..! குறிப்பாக எம்மவர்கள் மற்றவர்களினதை பாவிப்பதில் காட்டும் அக்கறை போல் தாங்களாக உருவாக்குவதில் அக்கறை செலுத்துவது அல்லது அதற்கான திறனைப் பெற்றிருப்பது மிகக் குறைவு. எமது புலமபெயர் இளையவர்கள் பல வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருந்தும் அடுத்தவர்களின் இணையத்தில் சுட்டுப் பாவிக்கும் அளவுக்கு தாங்களா உருவாக்கிப் பாவிக்கும் அளவில் மென்பொருட்களை உருவாக்கும் முயற்சி செய்பவர்களாக இல்லை.

இருப்பினும் சுரதா அண்ணா போன்ற ஒரு சில அனுபவசாலிகளே தங்களது திறமைகளை யுக்திகளை பாவித்து தமிழ் மொழிக்கு உதவக் கூடிய மென்பொருட்களை உருவாக்கி உள்ளனர். சிலர் அவரினுடைய அடிப்படைகளை பாவித்து வேறு சில கணணி மென்பொருட்களை உருவாக்கி இருப்பினும் அடிப்படையில் சுரதா அண்ணா போட்ட வித்தே விருட்சமாகி இருக்கிறது. எனவே இளையவர்கள் சாதிக்க வேண்டும் என்றால் பெறப்படும் அறிவோடு அனுபவசாலிகளுடனான தொடர்புகளையும் பேண வேண்டும். ஆனால் எத்தனை இளையவர்கள் இப்படியான துறைசார் அனுபவசாலிகளை வலையில் தேடுகின்றனர். வெறும் பொழுது போக்கிற்கு சற்றிங் செய்பவர்களும்.. ஏதோ சினிமா பற்றி கதைப்பவர்களும்... காய்சலா..சுகமா என்று நலம் விசாரிப்பதிலும்..எதிரணியில் மதன் சொன்னது போல சற்றிங் மூலம் வாழ்க்கைத் துணை தேடுவதிலுமே அதிகம் ஈடுபடுகின்றனர். அல்லது இன்ன இன்ன இடத்திற்கு சுற்றுலா போவோம்.. கூத்தடிப்போம் என்று எப்பவும் "என்ரரெயின்மெண்ட்" பற்றியே அதிகம் சிந்திப்பவர்களாக பொறுப்பற்றவர்களாக கல்வித் துறையில் உள்ள இளையவர்களைக் கூட இணையம் மாற்றி வருகிறது.
இப்போ 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு பிஎச்டி திசிஸ் எழுத வீடு நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்து அதிகளவு ஆராய்ந்து ஒப்பிட்டு தரவுகளைப் பெற்றவர்களோடு இன்று இணையத்தில் உள்ள இளையவர்கள் சில பக்கங்களுக்குள் சுருங்கிவிட்ட தரவுகளை வைத்து ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு. முன்னொரு காலத்தில் பிஎச்டி திசிஸ் என்றால் அது எங்காவது செயற்திட்டமாகும் என்றிருக்குமாம்..ஆனால் இன்று திசிஸ் குப்பைக்குள் போகும் நிலையிலையே இருக்கிறது..! காரணம் என்ன தேடல் குறைந்து ஒப்பீட்டளவில் வினைத்திறனற்று இவை சமர்ப்பிக்கடுவதுதான்...! இதை ஒரு காட்டூன் மூலம் நியு சயன்ரிஸ்ற் எனும் சஞ்சிகையில் பிரசுரித்து இருந்தார்கள்..! இணையம் அந்தளவுக்கு இளையவர்களை பலவழிகளிலும் கல்வித்துறையில் சோம்பேறிகளாக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி இணையத்தின் வழி கல்வியும் வியாபாரமாகிக் கொண்டிருக்கிறதே தவிர அதன் மூலம் வினைத்திறனான கல்விக்கு வழிகாட்டப்படுவது மிகக் குறைவு. அறியாத பல்கலைக்கழகங்கள். கல்லூரிகள், நிறுவனங்கள் எல்லாம் இன்று இணையத்தில் முளைத்து மாணவர்களின் சிந்தனைக்கு எது இலகுவோ அதைக் கொடுக்க முனைந்து வியாபாரத்தைப் பெருக்க நிற்கின்றனவே தவிர சமூகத்துக்கு எதிர்கால வளர்ச்சிக்கு எவை அவசியமோ அதைக் கொடுப்பதில் அக்கறை செலுத்துவது குறைந்து வருகிறது..!

அடுத்து வாழ்வியலில் நடத்தையியலில் இணைய ஊடகம் புலம்பெயர்ந்த எம் இளையவர்களில் எத்தனைய தாக்கங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை எதிரணியினரே நன்மைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் நன்மைகள் என்று கருதுவது எல்லாம் இளையவர்களின் மனதில் அல்லது வாழ்வில் தரவல்ல உடனடி விளைவுகளின் அடிப்படையிலேயே..! ஆனால் நன்மை என்பது என்ன..தனி மனிதனுக்கு மட்டுமன்றி மொத்த சமூகத்துக்கும் நீடித்த நற்பயனைத் தர வல்லதாக உள்ள அம்சத்தை நல்லது என்று வரையறுக்கலாம். இன்றைய நன்மை என்பது நாளை தீமை என்று நிரூபிக்கப்பட அதன் தாக்கத்தின் வெளிப்பாட்டை உணரும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் லெனின் சிந்தனை புரட்சியாக இருந்தது...இன்று அதுவே பழமையாகிவிட்டது..உதவாது என்று கழிக்கப்பட்டும் வருகிறது ஆனால் அதுவே ஒரு காலத்தில் மனித இனத்தின் வேதமாக இருந்தது...! அன்று ஜனநாயகத்தைப் புரட்சியாகக் காட்டி உலகை மயக்கியவர்கள் இன்று அதையே பாவித்து அரச பயங்கரவாதம் கொண்டு ஆட்சியும் செய்கின்றனர். இப்போதுதான் அதன் தீமையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அதே போல்தான் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகப் பொலீஸ்காரனாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் அமெரிக்கா இந்த இணைய ஊடத்தை வெளி உலகுக்கு திறந்து விட்டு பெறும் நன்மைக்கு அளவே இல்லை.

இளையவர்களின் வாழ்வை சுதந்திர புரட்சிகர அரசியலுக்குரிய சிந்தனைகளுக்கு அப்பால் இட்டுச் செல்லவும் வியாபார எண்ணங்களையும் போட்டிகளையும் அவர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்து, அவர்களை வாழ்வில் சுகபோகத்துக்குள் அடிமையாக்கி செயழிலக்கச் செய்து கொண்டிருக்கிறது இந்த இணையம். இதன் மூலம் தனது அரசியல் பொருளாதார இலக்குகளை அமெரிக்க உலகம் சிரமமின்றி எதிர்ப்பின்றி புரட்சிகள் இன்றி அடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குநாடுகளும் உதவி செய்கின்றன. எனவே மேற்குலகில் புலம்பெயர்ந்திருக்கும் எமது இளையோருக்கும் அமெரிக்க ஏகாதபத்தியத்தின் இந்த தந்திர வலைக்குள் சிக்காமல் இல்லை..! ஏதோ ஒரு வகையில் சிக்கித்தான் உள்ளனர். அந்த வகையில் எமது இளையவர்களை ஒரு மந்தை கூட்டமாக்கின் கொண்டிருக்கிறது இணையம். நாங்கள் என்னதான் புரட்சிகரம் எமக்குள் பேசிக்கொண்டாலும் எம்மை கட்டுப்படுத்தக் கூடிய சக்திக்குள்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். என்பதை இளையவர்கள் சிந்திக்கிறார்களா...??????!

"சுதந்திரம்" என்பதன் சிந்தனைக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு மனித இனத்தை அழிவுக்கு இட்டுச் செல்லத்தக்க பல வாழ்வியல் நடைமுறைகள் இணையத்தின் வழி விதைக்கப்படுகின்றன. அவை பலமான சமூகங்களை போர் இராணுவ ஆக்கிரமிப்பு இன்றி பலவீனப்படுத்துவனவாகவும் இருக்கின்றன. உதாரணமக ஒரு பால் திருமணம் என்பது நிச்சயம் இயற்கைக்கு மாறான உடற்தொழில் ரீதியில் மனிதனுக்கு எந்தவகையிலும அவசியமில்லாத ஒன்று. அதை ஏன் ஆராய்ச்சி என்ற பெயரில் இவர்கள் தங்கள் கற்பனைகளை கட்டவிழ்த்து விதைகின்றனர். அந்த நடைமுறைகளை இணையம் வழி செய்தியாக்கி எங்கோ மூலைக்குள் ஒரு சிலருக்குள் இருந்தவற்றை பல திக்குகளுக்கும் அனுப்பி மனங்களை குழப்பி விடுகின்றனர். நிச்சயம் இப்படியான விடயங்கள் திட்டமிட்டு மக்களைக் குழப்ப பயன்படுத்தப்படுகின்றன என்றால் மிகையல்ல. உதாரணத்துக்கு அமெரிக்க துருப்பினர் மத்தியில் நிலவிய நீண்ட கால குடும்பப் பிரிவுக்கான சந்தர்ப்பத்தால் படைவீரர்கள் மனச்சோர்வடைய முற்பட்டத்தை அடுத்தே இப்படியான பழக்கங்கள் தூண்டி விடப்பட்டன. அதற்கு நல்ல பயனும் கிட்ட அதையே உலகெங்கும் விதைத்து மனித இனத்தை சீரழித்து அரசியல் இலாபம் தேட நிற்கிறது அமெரிக்க அநாகரிக உலகம். அதை எம்மவர் மத்தியிலும் காவி வருகிறது இணையம். இப்படி இன்னோரென்ன உதாரணங்கள் கட்டாலம். நாம் ஒன்றின் உருவாக்கம் அதன் தாக்கம் விளைவு என்பதை ஆராயமலே பலதை கண்ட இடத்தில் பெற்ற சில உடனடி விளைவுகளை வைத்துக்கொண்டு நன்மை என்று உணர்ந்து கருத்து விடுகின்றோம்.

மேற்குலகில் இருந்து வரும் எது என்றாலும் புதியது என்று.. நஞ்சென்றாலும் கூட ஆராயாமல் பருகவல்ல எமது இளைய சமூகம்..இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதிலும் ஆச்சரியமில்லை..! இப்படித்தான் சற்றிங் என்றும் குறூப்பிக் கிளப்பிங் என்று எல்லாமே இணையத்தில் வியாபார நோக்கோடும் மற்றும் இளையவர்களின் மனவோட்டத்தை சுகபோகத்துக்குள் சிக்க வைத்து திசை திருப்பவும் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வசதிகளை....சற்றிங் மென்பொருட்களை உருவாக்கிய இணையத்தில் தந்தது யார்...??! அமெரிக்க நிறுவனங்கள். அவர்கள் சமூகவியல் பொருளியல் அரசியல் என்று எல்லா வகையிலும் இதன் தாக்கத்தை அறிந்துதான் திறந்து விட்டுள்ளனர். நமது இளசுகளோ புதுமை என்று அவற்றை கண்டபடிக்கும் பாவித்து சீரழிகின்றன. இதற்குள் இணைய ஊடகம் நங்கு உதவியளிக்கிறது என்று பரப்புரை வேறு செய்கின்றோம். உண்மையில் உலகியல் போக்கோடு செல்ல அதைப் பாவிக்கின்றோமே தவிர அது புலம்பெயர் இளையவரால் எமது சமூக நலனுக்கு நீடித்த நன்மை தரவல்ல வகையில் உருவாக்கப்பட்டு பாவிக்கப்படுகிறது என்பது ஒருபோதும் உண்மையாகாது.

இப்படியான கணணி மென்பொருட்களை செய்து விடும் நிறுவனங்களே திடீர் என்று சற்றிங்கால் தீமை என்றும் அறிவிப்பார்கள்.. அதை நிறுத்தப் போகிறோம் என்பார்கள்..இது மக்கள் தங்கள் மீது சந்தேகம் கொள்ளாதிருக்க செய்யப்படும் விசமத்தனமான ஏமாற்று நாடகம். அமெரிக்க ஆதிக்கத்தின் இருப்புக்காகவே இணையம் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் இப்படி பல நாடகம் போடுவார்கள் மற்றைய சமூகங்கள் விழிப்படைந்து விடாதிருக்க. எமது இளையோரும் அதை அறியாது அதற்குள் சிக்கி விரைந்து சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

கேட்கலாம் அமெரிக்கா இணையப் பாவனையை எல்லாருக்கும் தானே அளிக்கிறது. அவரவர் தங்கள் தேவைக்கு ஏற்ப பாவிக்கலாம் தானே என்று. அது அவரவரைப் பொறுத்தது ஏன் பொறுப்புக்களை, தவறுகளை இளையவர் மீது மட்டும் சுமத்தி விடுகிறீர்கள் என்று. நியாயமாத்தான் தோன்றும் அவை...ஆனால்.. சோவியத் வீழ்ச்சி வரைக்கும் மூடிமறைக்கப்பட வேண்டிய ஒன்று அதன் பின் வெளிவர என்ன தேவை அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கு வந்தது..???! ரஷ்சியா இன்றும் கூட தனது ரகசிய கணணி வலைப்பின்னல் பற்றி வெளியில் சொல்லவில்லை..! அப்படி இருக்க அமெரிக்கா ஏன் இவற்றை வெளியில் விட்டது..???! சோவியத் வீழ்ச்சியின் பின்னான அமெரிக்க ஏகாதபத்தியத்தின் அரசியல் பொருளியல் நோக்குகள் இலக்குகள் என்ன...??! இவற்றை ஆராய்ந்தால் அமெரிக்க உலகினால் உருவாக்கப்பட்ட கணணியுகத்தின் பிறப்பின் நோக்கம் புரியும்..! நீண்ட காலப் போக்கில் இணையம் வழி மெதுமெதுவாக தனது அரசியல் சமூக பொருளியல் சித்தாந்தங்களை உலகில் விதைத்து தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் மனித மனங்களை பாதிப்பு தெரியாத வகையில் கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இலக்கு..! அதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பலனை இதுவரை பெற்றுள்ளது. குறிப்பாக சீனாவில் பல மேற்குல இணையத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இவற்றின் தாக்கம் மக்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்று அறிந்து சில திட்டங்களை செயற்படுத்துகின்றனர் இது தெளிவாக அமெரிக்காவின், மேற்குலகின் இந்த திட்டம் பற்றி வலுவான காரணங்களுடன் கூடிய சந்தேகத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. நாம் கற்பதும் மேற்குலகக் கல்விதான். அதில் தான் பெருமை பேசுகின்றோம். எமக்கான தனித்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க கல்வியையும் நாம் பெறுகின்றோமா..??! இல்லை...! எனவே நாம் எந்த வகையிலும் இணையத்தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாக்க தயார் செய்யவில்லை..! அந்த வகையில் இணையத்தின் வழி அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு எம்மை அறியாமலே அடிமைகளாக்கப்படுகின்றோம் என்பதை வலியுறுத்திக் கொண்டு இணையம் எந்த வகையிலும் புலம்பெயர்ந்து வாழ் எமது இளையவர்களின் பாவனையால் நீடித்து நிலைக்கக் கூடியதும் எமது சமூகத்து அவசியமானதுமான நன்மைகளை அளிக்கமாட்டாது என்று கூறி எமது வாதத்தோடு எமதணியின் ஏனையவர்கள் வைத்த கருத்துக்களை எமது இளையவர்கள் இணையத்தின் வழி தான் பெறும் உடனடி நன்மைகளாக சிந்திப்பனவற்றுக்கு எதிரான உதாரணமாக்கி விடை பெறுகின்றோம்...!

பொறுமையோடு இதை வாசிச்சு உள்வாங்க முனையும் அனைவருக்கும் நன்றி வணக்கம். (எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் - உடன எழுதி உடன அனுப்பிறம்.)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)