Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவு மறைவின்றி
#18
மலையக இளைஞர் ஒருவர் ஒரு பதவிக்காக ஒரே நிறுவனத்தில் பலதடவைகள் நேர்முகப் பரீட்சைக்குத் தோன்றி வெற்றியீட்டி இறுதியில் நியமனக் கடிதத்தைப் பெறச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட பலத்த ஏமாற்றத்தை அவரே தெரிவித்திருந்தார் அல்லவா!

இதை வாசித்துவிட்டு ஒரு நிறுவனத்தின் நிருவாகி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊழியர் நியமனத்தில் தனக்கு ஏற்பட்ட எதிர்மறையான அனுபவத்தைச் சொன்னார்.

இவரின் நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்துக்கு விளம்பரம் செய்தபோது, அவ்வேலைக்குப் பலர் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து இருவரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து ஒருவரைத் தெரிவு செய்தார். இந்த ஊழியர் ஒரு மாதகாலம் வேலை செய்த பின் சம்பளத்தையும் எடுத்துக் கொண்டு அந்த நிறுவனத்தின் பக்கமே தலைகாட்டவில்லையாம்.

எனவே அந்த ஊழியர் வராமைக்கான காரணத்தைக் கேட்டு அவரின் முகவரிக்கு கடிதம் அனுப்பியும் பதில் வராததால் அவ்வேலையிலிருந்து நீங்கியதாக கடிதம் அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் அந்த ஊழியர் பிறிதொரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டதாக இந்நிருவாகிக்குத் தகவல் கிடைத்ததாம்.

"ஆகவே நேர்முகப் பரீட்சைகள் மற்றும் நியமனங்கள் விடயத்தில் விண்ணப்பதாரிகளின் தரப்பை மட்டுமல்லாமல் நிருவாகத்தின் தரப்பில் ஏற்படும் அவலத்தையும் உங்கள் பத்தியில் எழுதுங்கள்" என்று அந்த நிருவாகி கேட்டுக் கொண்டார்.

எந்த நாணயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றனவே!

http://www.thinakural.com/New%20web%20site...ruary/14/DR.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பி - 01-28-2006, 01:46 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-28-2006, 03:17 PM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 07:42 PM
[No subject] - by Vasampu - 01-28-2006, 07:53 PM
[No subject] - by அருவி - 01-28-2006, 08:52 PM
[No subject] - by SUNDHAL - 01-29-2006, 02:46 AM
[No subject] - by ukraj - 01-29-2006, 12:56 PM
[No subject] - by Vasampu - 01-29-2006, 01:12 PM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:12 PM
[No subject] - by Niththila - 01-31-2006, 02:42 PM
[No subject] - by வினித் - 02-07-2006, 12:47 PM
[No subject] - by ஈழமகன் - 02-08-2006, 10:02 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 12:38 PM
[No subject] - by வினித் - 02-11-2006, 05:51 PM
[No subject] - by வினித் - 02-14-2006, 12:54 PM
[No subject] - by வினித் - 02-16-2006, 03:30 PM
[No subject] - by வினித் - 03-07-2006, 11:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)