06-25-2003, 12:42 AM
வெப்ப உறிஞ்சியும் மின்விசிறியும்
நுண்செயலிகள் பற்றிய இப்பகுதி விளங்கிக்கொள்ள சிறிது சிக்கலானது....புரியாவிட்டால் பரவாயில்லை......
AMD நுண்செயலியின் புதிய தொழில்நுட்பங்கள்
QuantiSpeed architecture - இது தரவுகளை விரைவாக இடமாற்றும் தொழில்நுட்பம். இது office போன்ற கணக்கீடு மற்றும் தகவல்தள மென்பொருளின் பயன்பாட்டின்போது விரைவான தகவல் பரிமாற்றத்தையும், துரித விடை காணலையும் காட்டும். இது பல அறிவுறுத்தலை ஒரே நேரத்தில் திறம்பட செயற்படுத்துவதால் பல்பணியாக்கம் Multitasking இலகுவாக அமைகிறது.
Multitasking என்றால் ஒரே நேரத்தில் பல் பணிகளை ஆற்றல். இதனை நீங்கள் ஒரு சாளரத்திலிருந்து இன்னொரு சாளரத்திற்கு தாவும்போது சாளரங்களின் மென்மையான நகர்வுகளை விகாரமின்றிக் காணலாம்.
DDR Memory - அதாவது இரட்டைவேக நினைவகங்களை இது ஆதரிக்கும். இரட்டைவேக நினைவகங்களை முதன்மை நினைவகம் பற்றிப் பார்க்கும்போது பார்ப்போம்.
AMD PowerNow - இது கணணியின் மின்கல (தாய்ப்பலகையிலுள்ள) ஆயுட்காலத்தை கூட்டும். அதாவது குறைந்த இயக்க நிலையில் குறைந்த மின்னும் கூடிய இயக்க நிலைகளில் கூடிய ஓட்டத்தையும் எடுக்கக்கூடியவாறு மாறும் மின்னோட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
AMD 3DNow - பொதுவாக படங்களைக் காட்டவும் அசைக்கவுமே அதிகளவு தரவுகளையும் கணிப்பீடுகளையும் நுண் செயலி செய்யவேண்டியிருக்கிறது. இவ்வாறாக உயிர்ப்பான முப்பரிமான படங்களை அமைக்கவும் இயக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.
எமது மேசைக் கணணிகளுக்கான AMD நுண்செயலிகள் இரு வகைகளில் கிடைக்கும் ஒன்று Athlon மற்றயது Duron. இவற்றில் அத்லோன் 37 மில்லியன் மூவாயிகளாலும் டியுரோன் 25 மில்லியன்
மூவாயிகளாலும் ஆனவை. அத்லோன்கள் 256 கிலோ பைட்டுக்களாலான இரண்டாம் தர இடைமாற்று (level 2 cache) நினைவகத்தைக் கொண்டவை. ஆனால் டியுரோன் கொண்டிருப்பது 64 கிலோ பைட்டுக்கள் மட்டுமே! ஆனால் இரண்டிலுமே முதலாம் தர இடைமாற்று நினைவகம் (level 1 cache) 128 கிலோ பைட்டுகளுக்கு உண்டு!
cache memory - இதுவும் ஒருவகை நினைவகமே இதுவே எல்லாவற்றிலும் அதி வேகமானது ஏனெனில் இது நுண்செயலியினுள்ளே பொருத்தப்பட்டிருக்கும். இங்கே முதல்தர இடைமாற்று நினைவகம் அடிக்கடி நுண்செயலியினால் பாவிக்கப்படும் தரவுகளைக்கொண்டிருக்கும் (அதாவது இது இல்லாவிடில் தரவுகளை அவை சேமிக்கப்பட்டிருக்கும் முதன்மை நினைவகத்திற்கு சென்று எடுத்து வர வேண்டும் .....இவை நுண்செயலிக்கருகில் இருந்தால் அதற்கு எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்...இந்த நேரத்தில வேறு பல அறிவுறுத்தல்களைச் செய்யலாம் அல்லவா?)
இரண்டாம் தர இடைமாற்று நினைவகம் நுண்செயலியினால் பாவிக்கப்படக்கூடும் என ஊகிக்கப்படும் தரவுகளை வைத்திருக்கும் இடம் ( நுண்செயலி ஒரு தரவை பாவிக்கும் முறைகளின் எண்ணிக்கையை வைத்து அது மீண்டும் பாவிக்கப்படலாம் என்ற ஊக அடிப்படையில் இங்கு சேமிக்கப்படும்)

