Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல்
#29
சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழக்களால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளரை விடுவிப்பதர்க்கு டென்மார்க் அரசாங்கத்திடம் உதவிகோரி தமிழ்வொயஸ் இணையத்தளத்தால் டென்மார்க் பிரதமருக்கு எழுதப்பட்ட திறந்தமடலின் தமிழாக்கம்.


அனாஸ் போ ராஸ்முசன்
பிரதமர்
பிரதமர்அலுவலகம்


கடந்த 29 , 30 திகதிகளில் 10 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கருணாகுழு என அழைக்கப்படும் அரசபடையின் ஓட்டுக்குழுவொன்றால் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக்குழுவுக்கு அரசபடையுடன் நெருங்கிய தொடர்பிருப்பதை போhநிறுத்த கண்காணிப்புக் குழவின் பேச்சாளரும் கடந்த 15 ந் திகதி சண்டேலீடர் என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மனிதநேயதொண்டர்கள் கடத்தப்பட்ட வெலிகந்த பிரதேசத்தில் கருணாகுழு என்ற அரசஒட்டுப்படையினர் சிறுவர்களுக்கு கட்டாயப்படுத்தி பயிர்ச்சியளிக்கும் ஒரு முகாமை வைத்திருப்பதாக முன்னாள் அவர்களின் 15 வயது உறுப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது 3 பணியாளர்கள் விடுவிக்கப்ட்டநிலையில் தொடர்ந்தும் 7 பணியாளர்கள் அவர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது தொடவிருந்த பேசிசுவார்த்தையை குழப்புமென அமெரிக்க கொங்கிராஸ் அங்கத்தவரும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்கை சீரடையாவிடில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டாம் என உலகளாவிய ரீதியில் தமிழ்மக்களும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கத்தெடங்கியுள்ளனர்.

கருணாகுழு உட்பட பல அரச ஒட்டுப்படைகளின் உத்தியோகபுூர்வ இணையத்தளங்கள் இங்கு டென்மார்க்கில் இருந்து இயங்குவது, ஒட்டுப்படைகளுக்காக சிலர் இங்கு செயப்படுவது என்பன போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கும் தெரியும்.
அவர்களுடைய இந்த இணையத்தளங்களில் இலங்கையில் இந்த ஒட்டுப்படைகளால் தமிழர்கள் மீதும் தமிழீழவிடுதலைப்போராட்டம் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டுமல்ல நடைமுறையில் உள்ள போர்நிறுத்தத்தை குழப்பமுயலும் நடவடிக்கைகளுக்கும் உரிமைகோரப்படுகின்றது.
கடந்த நத்தார் தினத்தன்று பிராத்தனையில் ஈடுபட்டிருக்கையில் கொல்லப்பட்ட பாராளமன்றஉறுப்பினர் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு இவர்கள் உரிமைகோரியிருந்தார்கள்.
இந்த இணையத்தளங்களில் அரசஒட்டுப்படையைச் சேர்ந்தவர்களென கூறுபவர்களின் பேட்டியையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆகவே இங்கு இந்த செயல்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கு கடத்தப்பட்ட பணியாளர்கள் எங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியும்.

இந்த திறந்தமடல் ஊடாக தமிழ்வொயிஸ் இந்த ஒட்டுப்படைகளுக்காக டென்மார்க்கில் செயல்படுவோர் முலம் இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவில் முக்கிய இடம் பெறும் டென்மார்க் அரசாங்கம் கடத்தப்பட்ட மனிதநேயபணியாளர்களை விடுவிக்கவேண்டும் என வேண்டுகின்றோம்.

உங்களிடம் இருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கும்
தமிழ்வொயஸ்
http://tamilvoice.dk/tamilvoiceappel.php
vasan
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:02 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:25 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:55 AM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:09 AM
[No subject] - by sri - 02-01-2006, 12:41 PM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:30 AM
[No subject] - by Aravinthan - 02-02-2006, 04:47 AM
[No subject] - by வினித் - 02-03-2006, 12:24 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 01:47 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 02:00 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:48 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:56 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:54 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 05:51 PM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:16 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 04:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:23 AM
டென்மார்க் பிரதமருக்கு எழுதப்பட்ட திறந்தமடலின் தமிழாக்கம் - by Vasan - 02-14-2006, 11:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)