Yarl Forum
தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் (/showthread.php?tid=1111)

Pages: 1 2


தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் - வினித் - 01-30-2006

வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல்
[செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்]
மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம் தரித்த கடத்தல்காரர்கள், பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி 5 பேரைக் கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறியபோதும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றித் தாக்கப்பட்டு கண்களைத் துணிகளால் மூடி கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றனர்.

அவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள், கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பி வந்தவர்களால் தெரிவிக்கப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விவரம்:

1) சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)

2) செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளார்

3) இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

4) வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் தெரியவில்லை.


நன்றி:புதினம்


- மேகநாதன் - 01-31-2006

<span style='color:red'><b>வெலிகந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் ஐவர் ஒட்டுப்படையால் கடத்தல்</b>


மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கி ஊர்தியொன்றில் சென்றுகொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் நடைபெறவிருந்து கணக்கியல் பயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காகச் சென்றபோதே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரும் கடத்தப்பட்டது தொடர்பாக தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

இன்று மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேரை வெலிக்கந்தையடியில் வழிமறித்த இனந்தெரியாத ஆயுததாரிகள்; அவர்களுள் ஐவரை பலவந்தமாகக் கடத்திச்சென்றுள்ளனர்.

இந்தப் பயங்கரமான சம்பவம் இன்று நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையிலுள்ள சிறீலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம்தரித்த கடத்தல்காரர்கள் பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி ஐரையும் கடத்திச்சென்றுள்ளனர். கடத்தப்பட்ட ஐவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறி கதறியழுதபோதிலும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றி; தாக்கப்பட்டு அவர்களது கண்கள் துணிகளால் மூடிக்கட்டப் பட்ட நிலையில் கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டு;ள்ளனர். இவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள்; தங்களுக்கும் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதட்டத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாதவாறு கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சப்பவம் தொடர்பான தகவல்கள் கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பிவந்தவர்களால் தெரிவிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதனையும் இதுவரையில் அறியமுடியாதுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விபரம்:


திரு.சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)
செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளர்)
திரு.இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
திரு. வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
செல்வி பிறேமினி அவர்கள் பணியாற்றிக்கொண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவருபவராவார்.

கடத்தப்பட்டவர்கள் ஐவர் உட்பட 15 பேரும் வவுனியாவில் நடைபெறவிருந்த கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள்; என்பதும் குறிப்பிடத்தக்கது.</span>

<i><b>தகவல் மூலம் - சங்கதி</b></i>


- மேகநாதன் - 01-31-2006

<b>தொடர்புடைய செய்தி ஆங்கிலத்தில்</b>

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17052


- மேகநாதன் - 01-31-2006

<b>தொடர்புடைய செய்தி</b>

http://www.nitharsanam.com/?art=14956


- cannon - 01-31-2006

S.Lanka Tigers warn kidnappings may hurt peace bid
Tue Jan 31, 2006 1:33 PM IST

By Peter Apps

COLOMBO (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Tuesday that the kidnapping of five Tamil aid workers in the island's east could affect next month's peace talks in Switzerland and added the government might be to blame.

The Tamils Rehabilitation Organisation (TRO), which is considered close to the Tigers, said five employees were taken away by unidentified men on Monday in Welikanda, about 150 km (94 miles) from Colombo, after their van crossed an army checkpoint.

"It will affect the atmosphere of the peace process," media co-ordinator Daya Master of the Liberation Tigers of Tamil Eelam told Reuters from the rebel-held north.

"This will create panic in the people again. These are innocent civilians. It may be the Sri Lankan forces or it may be the Karuna group," he said referring to a faction led by former Tiger commander Karuna Amman which has split from the mainstream.

An army spokesman said he had no knowledge of the incident.

A string of attacks on the military in the minority Tamil dominated north and east tested a 2002 truce almost to destruction, but international monitors said tensions fell after the two sides agreed last week to hold direct negotiations.

Diplomats warn more clashes, killings or disappearances could kill the Geneva talks before they began, with a host of parties from rogue Tigers to the Karuna group to Sinhalese majority nationalists seen keen to provoke war.

SHADOW WAR CEASEFIRE?

The Tigers last week said they would cease military action provided the government did the same and abuses against the Tamil minority stopped. Since then, one militant was killed in an attack widely blamed on the Karuna group, but the rebels said the Geneva talks remained on.

Diplomats say the meeting has a real hope of avoiding a return to the two-decade old conflict that has already killed over 64,000. But the gulf between the two sides remains vast -- with little common ground over demands for a Tamil homeland -- and aid agencies continue to draw up contingency plans for war.

The kidnapping of the aid workers took place on the main road to the east near a stronghold of the former Tiger commander Karuna Amman, who the rebels say is now a government-supported paramilitary who has been fighting them.

"They had just gone through an army checkpoint," said TRO project consultant Arjunan Ethirveerasingam, adding that his organisation did not know who was behind the kidnapping.

"A white van forced them off the road. Five of them were long-term TRO employees. They were taken. The other 10 were new TRO recruits and they let them go."

The government denies backing Karuna's group, but truce monitors say they have at least been turning a blind eye to his "shadow war". With no clear role in a peaceful Sri Lanka, diplomats fear he might be trying to sabotage the talks.

On Tuesday, Sri Lankan newspapers published a statement apparently from Karuna saying he was calling a unilateral ceasefire to help the government's peace efforts, but there was no way of immediately confirming its authenticity.



© Reuters 2006. All Rights Reserved.


- cannon - 01-31-2006

மீண்டும் யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை ... சாமாதானம் என்ற மாயையில் மீளுமுன் மீண்டுமோர் நாடகத்தை இலங்கை சிங்கள் புலனாய்வுப்பிரிவினர் "கூலி கருணாவின் பெயரில்" நடாத்தி முடித்திருக்கிறது.

நீண்ட காலமாக "TRO" பணிகளை தென் தமிழீழத்தில் முடக்க இலங்கை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பல பிரயத்தனங்களை செய்துவந்தனர். "TRO" நிறுவன காரியாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள், நிவாரண பொருட்களை அபகரித்தல், .... . இதன் வரிசையிலேயே இந்தக் கடத்தலும் இடம் பெற்றிருக்கக்கூடும். வழமைபோல் இதை இலங்கை அரசும்/இராணுவமும் மறுத்திருக்கிறது.

ஆனால் இக்கடத்தலுக்கு முன்னம், அவர்களது பிரயானம் இலங்கைப் படைகளுக்கு தெரிந்தே நடைபெற்றிருக்கிறது. இக்கடத்தல் ஏறக்குறைய "கவுசல்யன்/மாமனிதர் சந்திரநேரு" கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது.

ஆனால் இக்கடத்தலானது நடைபெற்றிருக்கிற நேரம்தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.

* பேச்சுவார்த்தைக்கு நாட்குறித்த நிலையில் ஏன் இக்கடத்தல் நாடகம்???
* இல்லை, பேச்சுவார்த்தையையே நடைபெறக்கூடாதென்று இலங்கை அரசு குழப்ப முற்படுகிறதா??

எது எப்படியிருப்பினும் தமிழர் தரப்பு, இக்கடத்தப்பட்டவர்கள் விடுவிக்காதவரை பேச்சுவார்த்தையில் பங்குபற்றக்கூடாது!!!


- வினித் - 01-31-2006

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் சம்பவம் ஜெனீவா பேச்சுகளை பாதிக்கும்: புலிகள் எச்சரிக்கை!
[செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 15:59 ஈழம்] [ம.சேரமான்]
வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் எதிர்வரும் ஜெனீவா பேச்சுகளை பாதிக்கக் கூடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்துள்ள நேர்காணல்:

ஜெனீவாவில் பெப்ரவரியில் நடைபெற உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுக்கான சூழலை இந்தச் சம்பவம் பாதிக்கக் கூடும். மக்கள் மக்கள் இது கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவ ஆயுதக்குழுவினரோ இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றார் தயா மாஸ்டர்.

இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவித தகவலும் தெரியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நன்றி:புதினம்


- மேகநாதன் - 02-01-2006

<b>தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 5 பணியாளர்கள் கடத்தல் ஜெனீவா பேச்சுக்கு தடையாக அமையலாம் - விடுதலைப் புலிகள் அறிவிப்பு.</b>

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 5 பணியாளர்கள் கடத்தப்பட்ட சமபவமானது ஜெனிவாவில் அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளுக்கு தடையாக அமைலாம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது நிறுத்தப்படும் என்பது அதன் கருத்தாகாது எனவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்குமானால் பேச்சுவார்ததை நடக்காமல் போகலாம் என புலிதேவன் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கந்தையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் திட்ட ஆலோசகர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்தார்.

பயிற்சிநெறி ஓன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த 15 பேர் கடத்தப்பட்ட போதும் அதில் 10 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் தமது நிறுவனத்தில் அண்மையில் பணியாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டவர்கள் எவும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எதுவித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்க வில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

<i><b>தகவல்-பதிவு.கொம்</b></i>


- மேகநாதன் - 02-01-2006

<b>தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்! </b>

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.


சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 5 பணியாளர்கள் பொலன்னறுவ மாவட்டத்தின் வெலிக்கந்த பகுதியில் சனவரி 30ஆம் நாளன்று கடத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவரகம் வருத்தம் கொள்கிறது.

இச்சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் விரைவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரகம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஜெனீவாவில் யுத்த நிறுத்தப் பேச்சுகள் நடைபெறும் சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரும் பொறுமையும் அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவரகம் மீண்டும் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- sri - 02-01-2006

கடத்தப்பட்ட 10 புனர்வாழ்வுக் கழகத்தினரில் 2 பெண்கள் விடுதலை!!

மட்டக்களப்பு வெலிக்கந்தை பிரதேசத்தில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பேரில் 2 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக அவுஸ்திரேலியா இன்பத் தமிழ் வானொலிக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் சீசர் அளித்த நேர்காணல்:

எமது பணியாளர்களின் கண்களை கட்டி கொடூரமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்றனர்.

அவர்களில் 2 பெண்கள் திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மிகுந்த பயத்துடன் எவரையும் சந்திக்க மறுக்கும் மனநிலையில் உள்ளனர். ஊடகவியலாளர்களிடம் பேசினால் சுட்டுக் கொலை செய்வோம் என்ற அச்சுறுத்தலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் சீசர்.

தப்பி வந்த பெண்களில் ஒருவர் இன்பத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலில், கண்களும் கைகளும் வாயும் கட்டப்பட்ட பகுதியில் தாங்கள் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு எம்மை புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆயுதக் குழுவினர் எங்கள் இருவரை அங்கிருந்து தப்பிச் செல்லுமாறும் ஊடகத்தாரிடம் இது தொடர்பில் கதைத்தால் சுட்டுப் படுகொலை செய்வோம் என்றும் கூறி அனுப்பினர். அவர்களிடமிருந்து தப்பிய நிலையில் நாங்களாகவே எமது அலுவலகத்தை வந்தடைந்துள்ளோம் என்றார்.

மேலும் தம்மைக் கடத்திய ஆயுதக் குழுவினர் தமிழிலிதான் தங்களோடு கதைத்தார்கள் என்றும் அப்பெண் தெரிவித்தார்.

இதனிடையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை அவுஸ்திரேலிய புனர்வாழ்வுக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.

அவுஸ்திரேலியா நகரங்களில் வர்த்தக நிறுவனங்களினூடாக இந்தக் கையெழுத்துகள் பெறப்படுவதாகவும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியான அறிவித்தலை அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி வெளியிட்டு வருகிறது.

இன்று தப்பி வந்த பெண்களிடமும் நேற்று முன்தினம் ஐவர் கடத்தப்பட்ட போது அந்த வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனையவர்களிடமும் இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் வாக்குமூலங்களைப் பெற்றுவருவதாக கண்காணிப்புக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

நன்றி புதினம்


- மேகநாதன் - 02-02-2006

<b>த.பு. கழகத்தினர் கடத்தல் சம்பவத்தால் ஜெனீவா பேச்சுக்களுக்கு அச்சுறுத்தல்: கண்காணிப்புக் குழு </b>
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்ட சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. இந்தச் சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வெளியான சய்திகளை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.

"இராணுவத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது" என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் தெரிவித்துள்ளார்

<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-02-2006

<b>புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் வேண்டுகோள்! </b>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 03:37 ஈழம்] [ம.சேரமான்]
கடத்தப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


வவுனியா மாவட்டத்தில் 43 அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் ஐந்து பேர் வெலிக்கந்தை இராணுவ சோதனைச் சாவடியில் தமது பெயர்களை பதிந்து விட்டு, புறப்பட்ட சில நிமிடங்களில் அவர்களை பின்தொடர்ந்து வந்த வெள்ளை நிற வானில் வந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேர் பலமாகத் தாக்கப்பட்டு பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விடயத்தையிட்டு நாம் மிகவும் வேதனையும் கவலையும் அடைகின்றோம்.

வறுமை, போர், ஆழிப்பேரலை போன்றவைகளால் பாதிப்படைந்த மக்களுக்குத் தேவையான நிவாரணச் செயற்பாடுகளை இன்றைய கால கட்டத்தில் செயற்படுத்தி வருவதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இச்சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியாக செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களின் கடமைகளை செய்ய விடாமல் தடுத்தல் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

அத்துடன் கடத்தப்பட்டவர்களின் நிலைமை பற்றிய எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

வவுனியா மாவட்டத்தில் கடமை புரிகின்ற அனைத்து நிறுவனங்களையும் இணைத்து அபிவிருத்தி வேலைகளை செய்து வருபவர்கள் என்ற அடிப்படையில் எமது அங்கத்துவ நிறுவனத்தின் ஊழியர்கள் கடத்தப்பட்டதை நாம் கண்டிக்கிறோம்.

சிறிலங்காவின் அரச தலைவரும் மனித நேயத்துடன் செயற்பட்டு வருகின்ற அமைப்புக்கள் என்ற ரீதியில் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு இந்த ஐவரின் விடுதலைக்கு உதவ வேண்டுகிறோம்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித நேய அமைப்புகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளும் இது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-02-2006

<b>புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய ஐ.நா. பிரதிநிதி வேண்டுகோள்! </b>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 03:39 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடத்தப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடத்தப்பட்டவர்கள் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டவர்கள். மனிதாபிமான பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

<i><b>
தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- Aravinthan - 02-02-2006

கடத்தப்பட்ட 5 பணியாளரும் பாதுகாப்புடன் திரும்புவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கம், சர்வதேச சமூகத்தை கோருகிறது தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

ஐவரின் இறுதிக்கிரியைக்கும் ஆயத்தப்படுத்துமாறு விடுவித்தோரிடம் கடத்தல்காரர் தமிழில் தெரிவிப்பு

வெலிக்கந்தை பகுதியில் வைத்து திங்கட்கிழமை இனம் தெரியாத ஆயுத பாணிகளால் கடத்தப்பட்ட தமது ஐந்து அலுவலக பணியாளர்களும் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.


வெலிக்கந்தை பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளிக்கும் செய்தியா ளர் மாநாடு கொழும்பிலுள்ள அதன் அலுவல கத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது, தமிழர் புனர்வாழ்வுக் கழக மூத்த ஆலோசகர் கே.பாலேந்திரா, திட்ட முகாமையாளர் அர்ஜு னன் எதிர்வீரசிங்கம், ஹெலொய்ஸ் கணேஸ் ரூபன் ஆகியோர் விளக்கமளிப்பதை காணலாம்.

பெண் கணக்காளர் ஒருவர் உட்பட ஐவர் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த அர்ஜூனன் எதிர்வீரசிங்கம், ஹெலொய்ஸ், கணேஸ் ரூபன் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து வவுனியாவிற்கு கணக்கீடு தொடர்பான செயலமர்விற்காக சென்று கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஐந்து அலுவலகப் பணியாளர்கள் பொலநறுவையின் வெலிக்கந்தை பகுதியில் வைத்து இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

திங்கட்கிழமை இலங்கை இராணுவ காவலரணிற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து 15 தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனம், வெலிக்கந்தை இராணுவ சோதனைச் சாவடியில் பதிவு செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த வேளை வானை பின்தொடர்ந்த வெள்ளை வானொன்று திடீரென முன்னால் வந்து தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தை இடைமறித்து நிறுத்தியது.

மட்டக்களப்பிலிருந்து பொலநறுவைக்கு செல்லும் ஏ௧1 வீதியில் இலங்கை இராணுவ சோதனை சாவடியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு அலுவலக கணக்காளர் தனுஷ்கோடி பிரேமினியும் (பல்கலைக்கழக மாணவி) மேலும் நான்கு கணக்காளர்களும் பலவந்தமாக வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராஜா வசந்தராஜன் (சந்திவெளி முறக்கொட்டாஞ்சேனை), பழுகாமம் வன்னி நகரைச் சேர்ந்த ரவீந்திரன் அருள் நேசராசா, சுதேஸ்கரன் ஆகியவர்களே கடத்தப்பட்ட ஏனையவர்களாவர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தில் இருந்த ஏனைய பத்து பேரும் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உட்பட பலரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து அறிவித்துள்ளதுடன் தனது பணியாளர்கள் எங்கிருக்கின்றார்கள். அவர்களது பாதுகாப்பு குறித்து அறிய முயன்று வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமாதான முயற்சிகளில் தொடர்பு பட்ட பலருடனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பு கொண்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏனைய, சிவில் அமைப்புகளுக்கும் இவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

குறிப்பிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலக பணியாளர்கள் கடல்கோளிற்கு பிந்திய, யுத்தத்திற்கு பிந்திய மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள். அநாதைக் குழந்தைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்கள்.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற வேளை அந்த இடத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் எமக்கு முழுமையான விவரங்களை அளித்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, குறிப்பிட்ட சம்பவத்தின் போது ஆயுதபாணிகளால் விடுவிக்கப்பட்ட தன்னை இனம்காட்ட விரும்பாத பெண்மணியொருவர் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனமொன்று மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு 14 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தது.

வெலிக்கந்தை சோதனைச் சாவடியில் வாகனம் பதிவு செய்யப்பட்ட பின்னர் 100 மீற்றர் தூரம் சென்றதும் சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை வான் தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தை பின் தொடர ஆரம்பித்தது. பின்னர் எமது வாகனத்தை இடைமறித்தது.

5 பேர் (20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்) வெள்ளை வானிலிருந்து இறங்கி எமது வாகனத்திற்குள் நுழைந்தனர். ஒருவர் வாகனச் சாரதியை வெளியே இழுத்து பின் ஆசனத்தில் இருத்திய பின்னர் அருகிலிருந்த காட்டுப் பகுதியை நோக்கி வாகனத்தை செலுத்தினார்.

வாகனத்திலிருந்த அனைவரினது கண்களும் கைகளும் கட்டப்பட்ட பின்னர் வாகனம் காட்டுப் பகுதியொன்றில் நிறுத்தப்பட்டது, ஆண்கள் அனைவரும் புளியமரமொன்றின் கீழ் இருக்க வைக்கப்பட்டனர்.

பெண்களின் கண்கள் கட்டப்பட்டன. பிரேமினியைத் தவிர, ஏனைய அனைத்து பெண்களும் மீண்டும் வாகனச் சாரதியுடன் வாகனத்திற்குள் இருத்தப்பட்டனர், பிரேமினியும் நான்கு ஆண்களும் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டனர்.

வீதிக்கு வாகனம் வந்த வேளை பொலிஸ் வாகனமொன்று இருக்கின்றது என ஒரு கடத்தல்காரர் சத்தமிட்டார். எனினும் மற்றையவர் அதனால் பிரச்சினையில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், விடுவிக்கப்பட்டவர்கள் ஏனைய ஐவருக்கும் இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் தமிழ் பேசியதுடன் சாதாரண உடையிலிருந்தனர். இவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்தனர், ஐந்து பேர் கடத்தலில் ஈடுபட்டிருந்த அதேவேளை, வெள்ளை வானில் பலர் இருந்தனர்.
- தினக்குரல்


- வினித் - 02-03-2006

<b>தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திரை கடத்தியவர்கள் கிந்தியில் உரையாடினர்.
வெள்ளிக்கிழமை3 பெப்ரவரி 2006 ஸ ஜ செனிவிரட்ண


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை கடத்தியவர்கள் கிந்தி மொழியிலும் கிழக்கு மாகான தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் உரையாடியதாக விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தமிழ் தேசவிரோத ஊடகம் ஒண்று கடத்தல் சம்பவம் உண்மையானது விடயம் என்றும் ஆனால் ஆர் கடத்தினார்கள் என்பதுதான் சந்தேகம் என்றும் பகிரங்கமாக இண்று இரவு அறிவித்துள்ளது.</b>


http://www.nitharsanam.com/?art=15017


- ஜெயதேவன் - 02-03-2006

Quote:தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை கடத்தியவர்கள் கிந்தி மொழியிலும் கிழக்கு மாகான தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் உரையாடியதாக விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தமிழ் தேசவிரோத ஊடகம் ஒண்று கடத்தல் சம்பவம் உண்மையானது விடயம் என்றும் ஆனால் ஆர் கடத்தினார்கள் என்பதுதான் சந்தேகம் என்றும் பகிரங்கமாக இண்று இரவு அறிவித்துள்ளது.

கோதாரி!!! உதுகும் பாரதமாதாவின் "றோ"கரா ஆண்டவரின் செயலோ??????


- ஜெயதேவன் - 02-03-2006

உந்தக் கடத்தல் நாடக செய்தி வந்தவுடன் ...

கட்டம் 1:

யூரோப்பாவிலிருக்கும் இந்தியக்கூலி ராமராசனின் வானொலியும், டென்மார்க் கூலிகளின் இணையத்தளங்களும் புலிகள் வெலிக்கந்தைப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்கள் என ஆரவாரம் செய்தார்கள்! கடத்தியவர்கள் கூலி கருணாவின் கையாட்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் கூடச் சொன்னார்கள்!

கட்டம் 2:

பின்புதான் விளங்கியிருக்கிறது தாங்கள் ஓன் கோல் அடிக்கினம் என்டு!! உடனேயே இலங்கை அரசு அப்படி யாரும் கடத்தப்படவில்லையென்று கூறிய செய்தியை திருப்பித் திருப்பி ஒப்பாரி வைத்தார்கள்!

கட்டம் 4:

ஆனால் இப்போ, இக்கடத்தல் புலிகளால்தான் நடாத்தப்பட்டதாம்!! ஒப்பாரி வைச்சு அழுகுதுகள் இக்கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள்!!

எட எட எட ... இதென்ன தூள்கிங் கும்பல், தூள் அடிக்கமுன்/அடிக்கேக்க/அடிச்சபின் கதைச்ச மாதிரியல்லோ கிடக்கு!!!!


- மேகநாதன் - 02-04-2006

<b>மங்கள சமரவீர கருத்துக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எதிர்ப்பு </b>
[சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்ததை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மறுத்துள்ளது.


இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாகி அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் வெளியிட்ட அறிக்கை:

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக தகவல் எமக்குக் கிடைத்த பின்னர் இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

<i><b>puthinam.com</b></i>


- மேகநாதன் - 02-04-2006

களக்கண்காணிப்பாளர்களுக்கு,

இங்கு மாற்றப்பட்டுள்ள தலைப்பு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உப சம்பவமாகவே உள்ளதால்,
தலைப்பை மீளவும் "பொதுத் தலைப்பு" ஆக
மாற்றப் பாருங்கோ.

அதாவது,
"ஒட்டுக்குழுக்களால் தமிழர் புனர்வாழ்வுக்கழகத் தொண்டர்கள் கடத்தல்"...
அத்தகைய மாதிரி....
தயவுகூர்ந்து இவ்வாறானவற்றைக் கவனியுங்கோ


- மேகநாதன் - 02-04-2006


<span style='color:darkred'><b>வெலிக்கந்தை தேடுதல் அரசின் பம்மாத்து </b>


தேசவிரோத ஆயுதக்கும்பலால் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு கண்துடைப்பிற்கு செயற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசு வியாழக்கிழமை கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக வீடுவீடாக விசேட பொலிஸ் குழு தேடுதல் நடத்தியதாகவும் தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்று வருவதாகவும் சிறிலங்கா அரசு கூறுகின்றது. இது சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்துக்கு காட்டும் பம்மாத்து வேலை என்றே கருதமுடியும்.

ஏனெனில் வெலிக்கந்தை பகுதியிலுள்ள தீவுச்சேனைப்பகுதியில் படைப்புலனாய்வு பிரிவினர் ஒட்டுக் குழுக்களை வைத்துள்ளனர். இது கண்காணிப்பு குழுவிலிருந்து ஒட்டுப்படைகளில் இருந்து தப்பி வந்தவர்கள் பல தடவை இந்த விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். அவ்வாறான நிலையில் சிங்களப் பொலிசார் கடத்தப்பட்டவர்களை அல்லது கடத்தல் காரர்களை பொதுமக்கள் வீடுகளில் தேடுதல் நடத்துவது என்பது முட்டாள் தனம். உண்மையில் வெலிக்கந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்து இவர்கள் கடத்தப்பட்டனர்.

வெலிக்கந்தைப்பகுதி சிறிலங்காப் படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயம். இந்தப் பாதுகாப்புமிக்க வலயத்துக்குள் படையினருக்கோ அல்லது பொலிசாருக்கோ கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு ஆயுதக் குழு வெள்ளை வானில் சுதந்திரமாக நடமாடி பட்டப் பகலில் பிரதான வீதியில் வைத்து கடத்திச் செல்வது என்பது சாதாரண விடயமல்ல.

எனவே தேடுதல் விசாரணை என்பவற்றுக்கு ஜனாதிபதி மகிந்தர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை குழுவை நியமித்துள்ளார் என்று கூறுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு. உண்மையில் குற்றவாளிகள், கடத்தல்காரர்கள் தீவுச்சேனையில் படைமுகாமிற்கு அருகில் உள்ளனர்.

அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை விடுவிப்பதுடன் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

ஆனால் அந்த விடயத்தை சிறிலங்கா அரசு இன்று தவறவிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை பதியவைத்துள்ளது. போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதானச் சூழலை மீளவும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தமிழ் மக்களிடையே மேலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது தேசியத் தலைவர் அவர்கள் வடக்குக் கிழக்கில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமென்ற விடயத்தில் அதிக கவனம் செலுத்தி அவ்வாறான சூழலை உருவாக்குங்கள் என வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் வடமுனையில் போராளி கபிலன் வீரச்சாவடைந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் எல்லாம் சமாதானச் சூழலை வேகமாகச் சிதைத்துள்ளது.

இன்று சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை அகமகிழ்வுடன் கொண்டாடுகின்றது. இலங்கைத் தீவுமுழுவதும் சுதந்திரம் கிடைத்த நாளாகச் சிங்கள ஆட்சியாளர்கள் வெளிக்காட்ட முனைந்தாலும், அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் கைகளிலிருந்த ஆட்சி, அதிகாரம் சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதே தவீர இன்றும் தமிழினம் விடுதலையை அடைந்து விடவில்லை.

அதற்கான விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலையை நோக்கி எழுச்சி அடைந்து தமிழ் மக்களின் போராட்டத்தின் யதார்த்தம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சூழல் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இந்தச் சூழலில் எதிர்வரும் ஜெனீவாப் பேச்சுக்கள் சமாதானத்தைக் கொண்டு வருமா? என்ற சந்தேகத்தில் தமிழ் மக்கள் உள்ள நிலையில் வெலிக்கந்தைக் கடத்தல் விவகாரம் இன்னும் வேதனையைத் தீவிரப்படு த்தியுள்ளது.

எனவே அரசு தமது சுதந்திர தின அகமகிழ்வில் மூழ்கியிருப்பதையும், பம்மாத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் விடுத்து உடனடியாகக் கடத்தப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். </span>

<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-
ஆசிரியர் தலையங்கம்(04/02/06)</b></i>