01-31-2004, 02:05 AM
Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும்.
1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.
2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.
6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
சில விளக்கங்கள்
கருத்துக்களத்தில் 4 வகைக் குழுக்கங் உருவாக்கப்பட்டுள்ளது. அவை பற்றி சிறு விளக்கங்கள்
விருந்தினர்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்து அங்கத்துவர்கள் அல்லாதோர். இவர்களால் கருத்துக்களத்தில் உள்ள கருத்துக்களைப் பார்வையிடவும், வாசிக்கவுமே முடியும்.
அங்கத்துவர்கள்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்தில் அங்கத்துவர்களாக இணைந்தவர்கள் ஆவர். ஆனாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யாமல் அல்லது மிகக் குறைந்த(1,2) கருத்துக்களையே பதிவு செய்தவர்களா இருக்கிறார்கள். எனவே இப்படியான அங்கத்துவர்கள் எல்லாப் பிரிவுகளையும் பார்வையிடவும் வாசிக்கவும் முடியும், அதேநேரம் களவாயிலுக்குள் உள்ள "வரவேற்பு : களம்பற்றி : உங்கள் கருத்து" ஆகியவற்றுள் மட்டும் கருத்துக்களை எழுத முடியும்.
ஆரம்ப நிலை:
ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும் முடியும்.
தேர்வுமுறை:
சாதாரண அங்கத்துவர்களாக இருப்பவர்கள் (புதிதாய் அங்கத்துவர்களாக இணைந்துகொண்டவர்கள்), களவாயில் பகுதிக்குள் தம்மை அறிமுகம் செய்து கொள்வது, அல்லது கருத்துக்களம் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பது என்று மூன்றிற்கு மேலான கருத்துக்கள் பதித்த பின், அவர்களுக்கு ஆரம்ப நிலை அங்கத்துவம் வழங்கப்படும்.
இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.
தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.
நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.
உயர் நிலை:
இந்த நிலையில் அங்கத்துவர்கள் எவரும் இல்லை. எதிர்காலத்தில் யாழ் கருத்துக்களத்தின் விரிவாக்கத்தின்போது இந்த நிலை பயன்படுத்தப்படும்.
நிர்வாகக் குழு:
யாழ் இணையக் கருத்துக்களத்தின் பொறுப்பாளர்களும், கண்காணிப்பாளர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.
குறிப்பு:- "களவாயில்" பகுதிக்குள் இருக்கும் "களம்பற்றி" என்னும் பிரிவுக்குள் நிர்வாகக் குழுவினரால் மட்டுமே புதிய கருத்தினைத் தொடங்க முடியும். மற்றவர்களால் அதற்கு பதில் மட்டுமே எழுதமுடியும்.
வணக்கம் மோகன் அண்ணா!
மூன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதியும்
ஆரம்ப நிலைக்கு வரமுடியவில்லையே.. ஏன்?
<b>[size=18]
[b] !</b>

