02-14-2006, 04:15 AM
<span style='color:darkred'><b>ஜெனீவாவில் அரசு கூறப் போகும் பதில் என்ன? </b>
கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்களை விடுவிக்கின்ற நடவடிக்கை எதனையும் இதுவரை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாது இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது.
கடத்தல் விவகாரம் நடைபெற்றுப் பதினைந்து நாட்களாகின்றன. இன்னும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவோ, கடத்தியவர்கள் தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது அரசு பாராமுகமாகவுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இன, மத, பேதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில் கிளைகளை நிறுவி மனிதாபிமான ரீதியாகச் செயற்படுகின்றது.
இது எந்த வகையிலும் குறுகிய அரசியல் அல்லாமலோ அல்லது குறுகிய ஒரு இனம் சார்ந்த அமைப்பல்ல எனினும் போரினால் மிகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் அது முன்னுரிமைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு தமிழர் தாயகத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானபோது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனிதாபிமானப் பணியானது முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.
இதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவும், ஒட்டுக்குழுக்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளை முடக்கும் வகையில் அதன் அலுவலகம் மீதான தாக்குதலை மேற்கொண்டதன் விளைவு ஒரு பணியாளர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேவேளை, பேரினவாத ஊடகங்களும், பேரினவாத சக்திகளும் கூடத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மீது அவதூறான பிரச்சாரங்களைப் பரப்பி அதனைச் சர்வதேச ரீதியாக முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கின்ற உதவி வேறு வழி முறைகளுக்குப் பயன்படுத்துவதாக இருந்த சக்திகள் குற்றம் சுமர்த்தின.
எனினும் இந்தப் பேரினவாத சக்திகளால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை முடக்கிவிட முடியாத நிலையில் இப்போது வெலிக்கந்தைக் கடத்தல் விவகாரம் இடம் பெற்றுள்ளது.
வெலிக்கந்தையில் சிறிலங்கா படையினரின் அதியுயர் பாதுகாப்புப் பகுதிக்குள் வைத்து இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி ஒட்டுக் குழுக்கள்தான் என்பது முழுமையான உண்மை. எனினும் சிறிலங்கா அரசோ அல்லது படைத் தரப்போ கடத்தல்காரர்களைக் கண்டு பிடித்து அந்தப் பணியாளர்களை மீட்க வேண்டியது ஜனநாயகத்தை பேணும் அரசாங்கத்தின் கடமை.
ஆனால் பதினைந்து நாட்கள் கடந்த போதும் இன்னும் பதிலில்லாத சூழலே காணப்படுகின்றது.
கடத்தியவர்கள் விடுவிக்கப்படவேண்டுமென உள்நாட்டிலிருந்தும், சர்வதேச ரீதியாகவும் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பல அகிம்சை வழிப் போராட்டங்கள் என்பன நடைபெற்றன. எனினும் இன்னும் இதற்குச் சாதகமான பதிலளிக்க அரசு தவறி விட்டது.
வெலிக்கந்தையில் கடத்தல்காரர்களைத்தேடி பொலிசார் தேடுதல் நடத்துவதாக அரசு கூறுகின்றது. ஆனால் தீவுச்சேனையில் முகாமிட்டுள்ள ஒட்டுக் குழுக்களைக் கண்டு பிடிப்பதில் அரசு தவறு இழைத்து நிற்கின்றது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் எச்சரிக்கைப்பட்டுள்ளனர். உங்களுக்கும் வெலிக்கந்தையில் ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என இவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதேபோன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு அலுவலகத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தல், மிரட்டல் அதிகரித்துச் செல்வதானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு முடியாத பாதமான சூழலையே ஏற்படுத்தும்.
எனவே இக்கடத்தல் விவகாரத்துக்கு ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் அரச குழு என்ன பதில் கூறப் போகின்றது பொறுத்திருந்து பார்ப்போம். </span>
<b><i>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </i>
ஆசிரியர் தலையங்கம்(14/02/06)</b>

"
"
"