02-13-2006, 05:22 PM
நல்லதொரு பட்டிமன்றத்தை ஒருங்கமைத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இரசிகைக்கும் எவர் என்ன சொன்னாலும் சாலமன் போல் நீதியில் தவற மாட்டோம் என நடுவர் பணியை ஏற்றிருக்கும் செல்வமுத்து அண்ணா மற்றும் தமிழினிக்கும் என்னைவிட வயதால் இளையவரென்றாலும் தன் திறைமைகளால் என்னையே பிரமிக்க வைத்த எமதணித்தலைவர் இளைஞனுக்கும் என் சக அணித் தோழர்களுக்கும் எதிரணியிலிருந்தாலும் என்றும் தன் கருத்துக்களால் எனைக் கவரும் சோழியானுக்கும் ஏதோ முடிந்த வரை முனகிப் பார்ப்போம் என வந்திருக்கும் ஏனைய எதிரணித் தோழர்களுக்கும் இப்படி நாமெல்லாம் கூத்தடிக்க இடமளித்த களப்பொறுப்பாளர் மோகனுக்கும் ஏனைய நிர்வாகத்தினர் மற்றும் எம்மை எல்லாம் உற்சாகப்படுத்தி வழி நடத்தும் ஏனைய கள உறவுகளுக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னதான் இருந்தாலும் புூனைக்குட்டி நடுவர்களை இப்படி குளுக்கோஸ் எடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கக் கூடாது. தொடர்ந்து அவர் போல் நானும் நீட்டி முடக்கி பக்கம் பக்கமாக கருத்தெழுதினால் நடுவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையே ஏற்படும். எனவே முடிந்த வரை சுருக்கமாகவும் எதிரணியினருக்கு புரியும் வண்ணமும் எனது கருத்துக்களை வைக்க முயல்கின்றேன்.
பட்டிமன்றத்தின் தலைப்பான புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிந்து போகின்றார்களா? என்பதைப் பற்றிக் கருத்துக்கள் தந்த எதிரணியினர் தலைப்பை விட்டு விலகி எமதணியினர் நொண்டி நொண்டி நடப்பதாக குற்றம் சாட்டிக் கொண்டு தாமும் தமது பங்கிற்கு தாண்டித் தாண்டி நடந்துள்ளனர்.
நடுவர்களே சிறிது விளக்கத்திற்காக நான் தலையங்கத்தை விட்டு வெளியில் சென்று சில நடைமுறைகளை சொல்ல விரும்புகின்றேன். எமது சமுதாயத்தை எடுத்துப் பார்த்தால் அதில் முன்னேறி நல்ல நிலையிலிருக்கும் எவரும் சமுதாயமும் தன் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சொல்ல முன் வருவதில்லை. ஆனால் தன் தவறுகளால் சீரழிந்து பாதிக்கப்பட்டால் சமுதாயம் தான் தன்னைச் சீரழிதத்தாக சொல்லத் தொடங்கி விடுவார்கள். தம் தவறுகளை உணர்வதற்கோ ஒத்துக் கொள்வதற்கோ முன்வர மாட்டார்கள்.
அதே போல் காதல் என்றதும் எமது ஞாபகத்திற்கு வரும் காவியங்கள் எவை
<b>1) அம்பிகாவதி - அமராவதி
2) லைலா - மஜ்ணு
3) சலீம் - அனார்கலி
4) ரோமியோ - யுூலியற் </b>போன்றன தானே !!
இவையெல்லாம் வாழ்க்கையில் தோல்வியில் முடிந்த காதல் கதைகள் தானே? <b>ஏன் ஷாஜகானின் தாஜ்மகால் கூட அவனின் காதல் வெற்றிக்காக கட்டப்பட்ட மாளிகையல்ல காதல் மனைவியின் பிரிவினால் கட்டப்பட்ட கல்லறை தானே??</b>எங்காவது காதலில் ஜெயித்து அதன் காவியங்களை படித்துள்ளீர்களா?? அதனால் காதலில் ஜெயித்தவர்களே இல்லையென்று சொல்லிவிட முடியுமா?? ஜெயித்தவர்கள் திருமணமாகி தம் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து மேலும் மேலும் தம் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றார்கள். தோற்றவர்கள் எதிரணியினர் போல் புலம்பியதாலேயே வந்தது தான் மேலேயுள்ள காவியங்கள்.
ஏதிரணியினர் சிலர் சொன்னார்கள் எமதணித்தலைவர் இளைஞன் இணையத்தால் ஜெயிக்கவில்லை தன் திறைமையினால்தான் ஜெயித்தவர் என்று. உண்மைதான் திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே திறைமைசாலிகளாக வெளிவந்திருக்கின்றார்களா?? குறிப்பிட்ட சிலர் தானே சாதிக்கின்றார்கள். அதனால் அந்த வகுப்பாசிரியர் சரியில்லை என்று ஆகிவிடுமா?? அது போல் இளைஞனுக்கும் தன் திறைமைகளை வளர்க்கவும் திறைமைகளை வெளிக்காட்டவும் களமமைத்துக் கொடுத்ததே இணையம் தானே. இணையத்தில் பலர் அவரின் படைப்புகளைப் பார்த்து வாழ்த்தியதால் தானே அவரால் பல திறைமையானவர்களின் முன்பாகவே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட முடிந்தது. முன்பு ஒரு பட்டிமன்றமென்றால் 50 அல்லது 60 வயதைக் கடந்தவர்கள் நடுவர்களாக இருக்க அதே வயதையொத்தவர்களே பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். இன்று அந்நிலை மாறி இளையவர்களே நடாத்தக் கூடிய துணிவைக் கொடுத்தது இணையம் என்றால் அது மிகையாகாது. சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று முன்பு பெரியவர்கள் சொல்லிச் சொல்லியே பல இளைஞர்கள் தம் திறைமைகளை வெளிக் கொண்டு வர முடியாமலிருந்தது. ஆனால் இணையம் வந்த பின் தமக்கென ஒரு களமமைத்து அதில் தமது திறைமைகளை எவரின் தடையுமின்றி பதிய முடிந்தது. அவற்றைப் பார்த்த பின் தான் பல பெரியவர்கள் தாம் ஆலம்விதையை மூடப் பார்த்த முட்டாள்த் தனத்தை புரிந்து கொண்டார்கள். அதனால் பலர் அவர்களை ஊக்கப்படுத்த முன் வந்துமுள்ளார்கள்.
இன்று புலத்தில் இளைஞர்களால் படைக்கப் பட்ட கதையோ அல்லது கவிதையோ அச்சேற்றி புத்தகமாக வெளியிடுவதில் சிரமங்கள் எல்லோரும் அறிந்ததே. அப்படி அச்சேற்றி புத்தகமாக்குவதற்கு தேவையான பணம் புத்தகமாக்கினால் எப்படி விற்பனையாகுமோ என்ற பல பிரைச்சினைகளின் மத்தியில் இணையமொன்றே அவற்றை மின்னு}ல்களாக வெளிவர உதவியது. அது பெற்ற வரவேற்புகளால் புத்தகங்களாகவும் பின் வெளிவந்தன. சிலர் இணையத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் வருவதாக சொன்னார்கள். இருக்கலாம் ஏன் புத்தகங்களில் அப்படிப் பிழைகள் ஏற்படவில்லையா?? இணையத்திலாவது பிழைகளை உடன் திருத்தி விட முடிகின்றது. ஆனால் புத்தகங்களில் அடுத்த பதிப்பில் தான் திருத்தலாமென்ற உண்மை கூட இவர்களுக்கு புரியாமல் போயுள்ளது. பழமொழி ஒன்று சொல்வார்கள் ஒரு வேடம் போட்டால் அது போலவே செய்து காட்ட வேண்டுமென்று. அது போலவே இன்று எதிரணித் தலைவர் சோழியானின் நிலைமையும். பல இளையோரின் படைப்புக்களை மின்னு}ல்களாக்கி இணையத்தில் தரவேற்றி அவர்களை ஊக்குவித்தவரே இன்று வேடம் போட்டு வித்தை காட்ட வேண்டியுள்ளது. அது போல் தமது அணி சார்பாக இறுதியாக கருத்தை திறைமையாக கருத்து வைக்கும் குருவிகளை வைக்கும் படி கூறினார். குருவிகளின் திறைமையை சோழியான் உணர்ந்து கொண்டதே இந்த இணையத்தின் பயன் பாட்டால்த் தானே. அது போல் புூனைக்குட்டி கருத்து வைத்ததும் தான் அசந்து விட்டதாக ஓடோடி வந்து கூறினார். முன்பின் தெரியாத முகமறியாப் பலரை சோழியான் வாழ்த்த வழிசமைத்துக் கொடுத்தது எது?
இணையமும் ஒரு ஊடகம் என்ற ரீதியில் பார்க்கும் போது கூட அது மற்றைய ஊடகங்களிலிருந்து மிகவும் மாறுபட்டே காணப்படுகின்றது. தொலைக்காட்சியோ அல்லது வானொலியோ அல்லது பத்திரிகையோ அவை தருவதைத்தான் நாம் பார்க்க முடியும். இல்லாவிட்டால் மூட வேண்டியது தான் ஆனால் இணையமோ எமக்கு என்ன தேவையோ அதை பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது. ஒரு இளைஞன் படித்துக் கொண்டிருக்கும் போது தனக்கேற்படும் சந்தேகத்தைப் புத்தகங்களில் தேடி நேரத்தை வீணடிக்காமல் கூகுளில் சென்று குறிப்பிட்ட அந்த விடயத்தை சில நொடிகளில் பெற்று விட முடிகின்றது. பிழையான தகவல்களும் வருகின்றன என்று குறை சொல்பவர்களே தொடர்ந்து பிழையான தகவல்கள் தரும் இணையப் பக்கங்கள் நிலைத்து நிற்காமல் போய்விடும் அதனால் அவர்கள் தவறுகள் ஏற்பட்டால் அவற்றை திருத்தியே வருகின்றனர் தவறுகள் என்பது எல்லா இடங்களிலும் எல்லா விடயங்களிலும் ஏற்படக் கூடிய ஒன்றே.
மேலும் சிறார்களின் தாய்மொழிக் கல்வியிலும் இணையம் பல வகையிலும் உதவி புரிகின்றது. பொதுவாக ஐரோப்பாவில் மொழிக்கல்வியை விளையாட்டுடன் சேர்த்தே கற்பிப்பார்கள். அதுபோல் தமிழ்மொழிக் கல்வியையும் விளையாட்டுடன் கற்பிப்பதற்காக நிறையவே இணையத்தில் வந்து அவை சிறார்களையும் கவர்ந்துள்ளன. ஆதனால் சிறார்களும் தமிழ் நெடுங்கணக்கின் பயமின்றி அதனை ஆவலாக கற்கவும் ஆரம்பித்துள்ளனர். இப்படி எவ்வளவோ நன்மைகளை பட்டியலிட்டுக் கொன்டே செல்லலாம்.
அதேபோல் இணையத்தில் ஆபாசங்கள் பற்றி பலர் எழுதிச் சென்றனர். அவற்றை மனக்கட்டுப்பாடு இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாமென எமது அணி சொல்லியபோது எம்மவர்களுக்கு மனக்கட்டுப்பாடு இல்லை எனச் சிலர் சொன்னார்கள். உண்மைதான் மனக்கட்டுப்பாடு இல்லாதவன் சீரழிந்து போவதற்கு இணையம் ஏன் அவன் சிந்தனைகளே போதுமே. ஆக ஏற்கனவே மனக்கட்டுப்பாடு இல்லாமல் சீரழிந்தவர்கள் தான் இணையத்தை சீரழிக்கப் பார்க்கின்றார்களே தவிர இணையத்தால் அவர்கள் சீரழியவில்லை.
அதுபோல் நாம் எமது கணனியிலேயே தெவையில்லாத ஆபாச விளம்பரங்கள் வருவதை நிறுத்த முடியும். எமது வளர்ச்சிக்கு எது தேவையோ அதனை மட்டும் உள்வாங்கி எம் வாழ்வையும் சீராக்க முடியும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கும் போது கெட்டவை மட்டுமே சிலர் கண்களுக்குத் தெரிகின்றன என்றால் அது இணையத்தின் கோளாறு அல்ல பார்ப்பவரின் பார்வையில் கோளாறு. இப்போ எதிரணியினர் செய்வதுதான் கனியிருப்பக் காய் கவர்வதோ?
இணையத்தால் நிறையச் செலவுகள் ஏற்படுகின்றது என்றார்கள் சிலர். ஆபாசங்களை தரிசிப்பதற்கு ஏற்படும் செலவுகளை விட அறிவுகளை பெருக்கிக் கொள்வதற்கு ஏற்படும் செலவு சொற்பமானதே. அது போல் எந்த விடயத்தையும் ஏதாவது ஒன்றை இழந்துதான் பெற்றுக் கொள்ள முடியும். எந்தவித இழப்புமில்லாமல் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ள முடியுமா?? மீன் பிடிப்பவன் கூட து}ண்டிலில் சிறு மீனையோ அல்லது புழுவையோ செருகித்தான் பெரிய மீனைப் பிடிக்கின்றான்.
<b>எனவே தெளிவான சிந்தனை உள்ள எவரையும் இணையம் என்ன எவையுமே ஒன்றும் செய்து விட முடியாது. தம் பலவீனங்களால் சீரழிந்து போவோரே மற்றைவை மேல் பழி போட்டு தமது சீரழிவுகளுக்கு வலுச் சேர்க்கப் பார்க்கின்றார்கள் என்ற உண்மையை வலியுறுத்திக் கூறி சந்தர்ப்பத்திற்கு நன்றியும் கூறி எனது கருத்தினை முடிக்கின்றேன்.</b>

<i><b> </b>
</i>
</i>