02-12-2006, 10:12 AM
அருவி Wrote:குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம்
:roll: :roll:
இரத்தப் புற்றுநோய் பிரதானமாக இரண்டு வகைப்படும் -
1. லுயுகேமியா leukemia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரிப்பதால் வருவது.
(மரணம் விளைவிக்கக் கூடிய ஆபத்தானது).
லுயுகேமியாவின் போது அதிகரிக்கும் சில வகை வெண்குருதிக் கலங்களே செங்குருதிக் கலங்களை விழுங்கி அழித்து விடுவதால்..அனிமியாவும் நோயறிகுறியுடன் வெளிப்படும்..!
கடும் புகைப்பழக்கம்.. ஆபத்தான கதிர்வீச்சுக்களை ( எக்ஸ் கதிர்கள் உள்ளடங்க) எதிர்கொள்ளல்..மின் காந்த அலைகளுக்கு அதிகம் முகம் கொடுத்தல்..பென்சீன் போன்ற இரசாயனக் கூறுகளுக்கு முகம் கொடுத்தல்..பிறப்புரிமையியல் காரணிகள் என்று பல மறைமுகக் காரணிகள் இதற்குக் காரணமாகிறது. செங்குருதிக் கலங்களின் குறைவு என்பது குருதிப்புற்றுநோய் என்பது தவறான கருத்து. அது அனிமியா (Anemia) நிலை என்றே கொள்ளப்படும்.
2. லுயுகோபினியா Leukopenia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையைவிட குறைவதால் வருவது. கடும் நோய் தொற்றுக்களின் பின் ஏற்படும் நிலை. ஆபத்துக் குறைந்தது. மீளக் கூடியது.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

