02-11-2006, 11:55 PM
அரியல் ஷரோனுக்கு அவசர அறுவைச் சிகிச்சை
இஸ்ரேலிய பிரதமர் அரியல் ஷரோன் அவர்களுக்கு அங்குள்ள மருத்துவர்கள் அவசரமான அறுவைச் சிகிச்சை ஒன்றை செய்து முடித்துள்ளார்கள்.
அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும், ஷரோனின் நிலைமை ஸ்திரமாக இருப்பதாகவும் அவரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சைக்கு நடப்பதற்கு முன்பாக ஷரோனின் உயிருக்கு உடனடி ஆபத்து இருந்ததாக மருத்துவமனை அறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த மாதம் ஏற்பட்ட மூளைப்பக்கவாதத்தை அடுத்து 77 வயது அரசியல் முன்னோடியான ஷரோன் தொடர்ந்தும் நினைவிழந்த நிலையில் இருந்துவருகிறார்.
இவரது பணிகளை பொறுப்பேற்றிருக்கும் அவரது சகாவான எகுட் ஒல்மேர்ட் அவர்கள், அடுத்த மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஷரோனின் கடிமா கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>